For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவையெல்லாம் நம்ம ஆசியாவைச் சேர்ந்த பழங்கள் தான் என்பது தெரியுமா?

|

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எப்படி கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், உணவுகள் போன்றவை வேறுபடுகிறதோ, அதேப்போல் காலநிலை மற்றும் புவியியல் அமைப்பைப் பொறுத்து, அங்கு வளரும் பழங்களும் வேறுபடும்.

இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சில விசித்திர தோற்றத்தைக் கொண்ட பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பழங்கள் குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் தான் வளரும். மேலும் இவை பார்ப்பதற்கு வித்தியாசமானதாக இருந்தாலும், அவற்றின் சுவை அற்புதமாக இருக்கும்.

நீங்கள் ஆசியா கண்டத்தில் பிறந்தவராயின், இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பழங்கள் உலகம் முழுவதும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துரியன் பழம்

துரியன் பழம்

'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் இந்த துரியன் பழம் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தது. இதன் காரமான வாசனையினால், பலர் இதனை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

ரம்புட்டான்

ரம்புட்டான்

இது பார்ப்பதற்கு விசித்திரமானதாக காட்சியளித்தாலும், அதனுள் இருக்கும் வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் சுவையானதாக இருக்கும். மேலும் இதன் மையப் பகுதியில் பெரிய விதை இருக்கும்.

மங்கூஸ்தீன்

மங்கூஸ்தீன்

இந்த பழம் சற்று கெட்டியான ஊதா நிற மேல் பகுதியைக் கொண்டாலும், இதனை இரண்டாக வெட்டிப் பார்த்தால், நடுவே வெள்ளை நிறத்தில் மென்மையான மற்றும் சுவையான சதைப்பகுதி இருக்கும். இது நல்ல நறுமணத்துடன் இருப்பதோடு, இதனை உட்கொண்ட பின்னரும் இதன் சுவை நாவை விட்டு போகாதவாறு நிலைத்திருக்கும்.

பலாப்பழம்

பலாப்பழம்

தென்னிந்தியாவைப் பிறப்பிடமாக கொண்ட இந்த பலாப்பழம் வெளியே முட்களைக் கொண்டிருந்தாலும், உள்ளே மஞ்சள் நிறத்தில் அழகான சதைப்பகுதிகளைக் கொண்டது. சிலர் இதனை காய் வடிவில் சமைத்தும் சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும், இதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது.

விளாம் பழம்

விளாம் பழம்

இந்த விளாம் பழத்தின் மேற்புறம் உடைப்பதற்கே கடுமையாக இருக்கும். ஆனால் அதனுள்ளே அற்புதமான சுவையில் சதைப்பகுதி இருக்கும். இது சற்று புளிப்பாக இருந்தாலும், உப்பு மற்றும் மிளகுத் தூளுடன் கலந்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

ஸ்டார் ஃபுரூட்

ஸ்டார் ஃபுரூட்

மஞ்சள் நிறத்தில் நட்சத்திரம் போன்றே தோற்றத்தைக் கொண்ட இந்த பழமும், அற்புதமான ருசியைக் கொண்டிருக்கும். அதிலும் இந்த பழத்தை உப்புடன் சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

டிராகன் ஃபுரூட்

டிராகன் ஃபுரூட்

இந்த பழம் பார்ப்பற்கு டிராகன் போன்றே காணப்படுவதால் தான், இதற்கு டிராகன் ஃபுரூட் என்ற பெயர் வந்தது. இருப்பினும் இதனுள் இருக்கும் கருப்பு நிற விதைகளுடனான வெள்ளை நிற சதைப்பகுதி உண்மையில் ருசியாக இருக்கும்.

லிச்சி

லிச்சி

பிங்க் நிற தோலைக் கொண்ட லிச்சிப் பழத்தினுள் வெள்ளை நிறத்தில் நல்ல நறுமணத்துடனான சதைப்பகுதி இருக்கும். முக்கியமாக இந்த பழம் இனிப்பாக இருப்பதால், இதனை மில்க் ஷேக் செய்து குடித்தால் சூப்பராக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exotic Fruits From Asia That You Should Know About

Take a look at the exotic yet weird types of fruits that is found in Asia.
Story first published: Monday, July 11, 2016, 16:57 [IST]
Desktop Bottom Promotion