ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்?

Subscribe to Boldsky

ரயில் தண்டவாளத்தைப் பார்க்கும் போது, அனைவரது மனதிலும் கட்டாயம் ஏன் தண்டவாளத்தில் மட்டும் கற்கள் நிரப்பட்டப்பட்டுள்ளது என்ற கேள்வி எழும். இப்படி தண்டவாளத்தில் கற்கள் இருப்பதற்கு பின்னணியில் கட்டாயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

இந்த கட்டுரையில் ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருப்பதற்கான சில காரணங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் #1

தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் அது வேகமாகவும் செல்லும். அப்போது அழுத்தம் அதிகம் இருப்பதால், தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளன.

காரணம் #2

பொதுவாக வெப்பத்தினாலும், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் இரயில் தன்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே தண்டவாளங்களில் கற்கள் உள்ளன.

காரணம் #3

ஏன் கூர்மையான கற்கள் உள்ளது என்று தெரியுமா? ரயில் தண்டவாளங்களில் இருக்கும் கூர்மையான கற்கள் மர விட்டங்கள் வழுக்கி சென்றுவிடாமல் தடுக்கும்.

காரணம் #4

தண்டவாளங்கள் ஏன் உயரத்தில் அமைக்கப்படுகின்றன? ஜல்லிக் கற்களை மேல் எழுப்பி தண்டவாளங்கள் அமைக்கப்படுவதற்கு காரணம், நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு தான்.

காரணம் #5

களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ever Wondered Why There Are Crushed Stones On Train Tracks

ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன், why there are crushed stones on train tracks
Please Wait while comments are loading...
Subscribe Newsletter