மூன்று மார்பகங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மூன்று மார்பகங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Subscribe to Boldsky

நமது புராணங்களில் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. தென்னிந்தியாவை பொறுத்த வரை விநாயகர் பிரம்மச்சாரி. ஆனால், வட இந்தியாவில் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது போன்று தான் வணங்க படுகிறார். இதுப் போல கடவுள்களிலேயே நமக்கு தெரிந்த, தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

அப்படி தான் சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ள இந்த கதையும். ஆம், உலக பிரபலமான மீனாட்சி அம்மன் கோயில் நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததும், பிறகு சிவனை கண்டு காதல் வயப்பட்ட பிறகு ஒரு மார்பகம் மறைந்த கதையும் உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வேள்வி செய்து பெற்ற மகள்!

மீனாட்சி அம்மன், பாண்டிய மன்னன் மலையத்துவசன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியர் வேள்வி செய்து பெற்ற தவப்புதல்வியும், சுந்தரேஸ்வரர்-ன் மனைவியும் ஆவாள். மீனாட்சி அம்மனை தடாதகை பிராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக சில கூற்றுகள் இருக்கின்றன.

மூன்று மார்பகங்கள்!

உண்மையில், பிறப்பில் மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் மணவாளனை பார்த்த பிறகு, தனது மூன்றாவது மார்பகம் மறந்து போகும் எனும் நிலை கொண்டிருந்தார்.

Image Courtesy

கயிலை மலையில் சிவன்...

கயிலை மலையில் சிவனை கண்ட பிறகு மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது என சிவப்புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வீர மங்கை மீனாட்சி...

மீனாட்சி அம்மன் மிகுந்த வீரம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு, பாண்டிய நாட்டிலிருந்து படையுடன் கிளம்பி, கயிலை மலை வரை சென்று வென்று வந்தார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

சிவனை கண்டு வெட்கம்...

கயிலை மலையில் சிவனை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை மீனாட்சி அம்மன் அடைந்த பிறகு, சிவனையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டார் என்றும் அறியப்படுகிறது.

மீனாட்சிக்கு பிறகே, சுந்தரேஸ்வரர்!

இன்றளவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடந்த பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைப் பெற்று வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Know About Three Breast Goddess Meenakshi

Do You Know About Three Breast Goddess Meenakshi? take a look on here.
Story first published: Thursday, October 13, 2016, 10:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter