For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்!

|

எப்படி ஒரு ஆண் அல்லது பெண், தனக்கு விருப்பமான பெண்ணை / ஆணை காதலிக்க, திருமணம் செய்ய ஒப்புதல் கேட்க, திருமணம் செய்துக் கொள்ள அவரவருக்கு உரிமை இருக்கிறதோ. அதே போல தான் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதற்கும் அவரவருக்கு உரிமை இருக்கின்றது.

இதற்கு பல உலக நாடுகளில் உரிமையும், சட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே போல வேறுசில உலக நாடுகளில் இதற்கு பெரும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது நேற்றோ, சென்ற வருடமோ முளைத்த ஒரு கலாச்சாரம் அல்ல. லியோனார்டோ டா வின்சி காலத்தில் இருந்தே இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லியோனார்டோ டா வின்சி!

லியோனார்டோ டா வின்சி!

ஓவிய கலை உலகில் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் லியோனார்டோ டா வின்சி. இளம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது காதல் கொண்டதால் தனது சொந்த வாழ்வில் நிறைய பிரச்சனைகளை தாண்டி வந்தார். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார்.

Image Courtesy

எட்வர்ட் II

எட்வர்ட் II

அரசர் எட்வர்ட் II தனது நண்பருடன் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தவர். இதனால், இவரது மனைவியே இவரை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தீர்கமாக இருந்தார். மேலும் இதனால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

Image Courtesy

ஆலன் டூரிங்

ஆலன் டூரிங்

ஆலன் டூரிங் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் கடந்த 1954-ல் தற்கொலை செய்துக் கொண்டார். ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் பிரிட்டிஷ் அரசு இவரை துன்புறுத்தியதால் தான் இவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

Image Courtesy

ஆஸ்கார் வைல்டு

ஆஸ்கார் வைல்டு

ஆங்கில நாடக நடிகர்களில் மிகவும் பிரபலானவர் ஆஸ்கார் வைல்டு. ஓரின சேர்க்கையாளர் என்பதால் இவர் மீது பரப்பட்ட அவதூறுகளால் பிரான்ஸ் தான் தனக்கு பாதுகாப்பான பகுதி என இடம்பெயர்ந்து சென்று விட்டார்.

Image Courtesy

பில் டில்டன்

பில் டில்டன்

பில் டில்டன் ஒரு சிறந்த அமெரிக்க டென்னிஸ் வீரர். தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் இவர் நிறைய தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டார். இரண்டு முறை இளம் சிறுவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் இவர் தண்டனை பெற்றார்.

Image Courtesy

ஹார்வி மில்க்

ஹார்வி மில்க்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி மில்க் தான் முதன் முதலில் பொது அலுவகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இவர், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவரது நண்பரால் கொலை செய்யப்பட்டார்.

Image Courtesy

மேக்னஸ் ஹிர்ச்பெல்ட்

மேக்னஸ் ஹிர்ச்பெல்ட்

மேக்னஸ் ஹிர்ச்பெல்ட் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குரல் கொடுத்த முதல் வக்கீல். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால், இவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் ஹிட்லரின் நாசி படையால் எரிக்கப்பட்டது. ஹிட்லர் இவரை நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தினார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Who Were Tortured For Being Gay

Celebrities Who Were Tortured For Being Gay, take a look on here.
Desktop Bottom Promotion