For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்!

|

"ஆம்பள சிங்கம் டா...." என வீரத்தை பறைசாற்றும் போது ஆண்கள் காலரை தூக்கிவிட்டப்படி கூறுவதுண்டு. உண்மையிலேயே ஆம்பள சிங்கம் வேலைக்கு (வேட்டைக்கு) போகாமல், பெண் சம்பாதித்து (இரையை) வருவதை உண்டு விட்டு வெட்டி பந்தா காட்டும் அவ்வளவு தான்.

சென்னையை சேர்ந்த திரில்லர் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் பற்றி தெரியுமா?

சிங்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. ஆனால், பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கம் தீக்கோழி உதைத்தால் கூட உயிரிழந்துவிடும் என கூறப்படுகிறது. மேலும், முள்ளம்பன்றி கூட சிங்கத்தை எதிர்த்து சண்டையிடுமாம். இதை எல்லாம் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்தியாவையே விற்ற பலே கில்லாடி நட்வர்லால் பற்றி தெரியுமா?

இதை விட அதிகமாகவே ஆச்சரியங்கள் இருக்கின்றன. இனி, சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள் குறித்து காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தகவல் #1

தகவல் #1

சிங்கங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது, ஒரு நாளுக்கு 20 - 40 முறை என இரண்டு நாட்கள் தொடர்ந்து ஈடுப்படுமாம்.

 தகவல் #2

தகவல் #2

பூனை குடும்பத்தில் இருக்கும் புலியில் இருந்து சிங்கம் வரை அனைத்து விலங்குகளுக்கும் இனிப்பை சுவைக்கும் திறன் கிடையாது. அதாவது, இனிப்பு ருசியை உணர முடியாதாம்.

 தகவல் #3

தகவல் #3

சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு இருக்கிறது.

 தகவல் #4

தகவல் #4

சிங்கம் கர்ஜிக்கும் சப்தம், 8 கிலோமீட்டர் வரை எதிரொலிக்கும் திறன் கொண்டது ஆகும்.

 தகவல் #5

தகவல் #5

2005-ம் ஆண்டு எத்தியோப்பியாவில் ஓர் இளம் பெண்ணை ஏழு ஆண்கள் மிக கொடுமையாக தாக்கிகொண்டிருந்தனர். அப்போது ஓர் சிங்க கூட்டம் அவர்களை விரட்டிவிட்டு, அந்த பெண்ணுக்கு உதவி வரும் வரை உடன் இருந்தன என்ற ஓர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 தகவல் #6

தகவல் #6

எம்.ஜி.எம் டைட்டில் கார்டில் வந்து கர்ஜிக்கும் சிங்கத்தின் பெயர் லியோ ஆப் லயன்ஸ்.

 தகவல் #7

தகவல் #7

தீக்கோழி ஒரே உதையில் மனிதர்களை மட்டுமின்றி சிங்கத்தையும் உயிரிழக்க வைத்திடுமாம்.

 தகவல் #8

தகவல் #8

காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

 தகவல் #9

தகவல் #9

பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும் ஆண் சிங்கங்களின் மீது தான் அதிக ஈர்ப்புக் கொள்ளுமாம்.

 தகவல் #10

தகவல் #10

பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து இரண்டாவது பெரிய விலங்கு சிங்கம். சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்கும்,

 தகவல் #11

தகவல் #11

சிங்கங்களில் வேட்டையாடுவதில் 90% பெண் சிங்கங்கள் தான். ஆண் சிங்கங்கள் மிகவும் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும்.

 தகவல் #12

தகவல் #12

பெண் சிங்கம் மற்றும் ஆண் சிறுத்தை கலப்பில் பிறந்தது தான் லேப்போன். இந்த லேப்போன் தலை மட்டும் பெண் சிங்கத்தை போலவும், ஏனைய உடல் சிறுத்தையை போலவும் இருந்தது.

 தகவல் #13

தகவல் #13

மலை சிங்கங்கள் அதனுடைய இரையை புதைத்து வைத்துவிட்டு, பசிக்கும் போது மீண்டும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மண்மணம் மாறாத மணப்பாறை முறுக்கு..!!

English summary

Astonishing Facts About Lions

Astonishing Facts About Lions, read here in tamil.
Desktop Bottom Promotion