For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பழங்குடியினர் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

|

ஸ்மார்ட் போன், இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள் என்றில்லை, இவர்களில் பலருக்கு இட்லி, தோசை என்றால் கூட என்னவென்று தெரியாது. இன்றும் இயற்கையோடு ஒன்றி தங்கள் வாழ்க்கையை இனிமையாக, ஆரோக்கியமாக வாழும் அப்பழுக்கற்ற மக்கள் இவர்கள்.

உலகில் உள்ள விநோதமான மற்றும் கொடுமையான சில கலாச்சாரங்கள்!!!

இவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கீறார்கள். ஆனால், உண்மையில், நாம் அங்கு செல்லாமல் இருப்பதால் தான் அவர்கள் நிம்மதியான அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

மனிதர்களை மாயமாக மறையச் செய்யும் பயங்கரத் தீவு பற்றி தெரியுமா?

இல்லேயேல் அங்கேயும் பிளாஸ்டிக் பைகளை நிரப்பி இயற்கையை நாம் சீரழித்து விடுவோம். இனி, இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செண்டிநெல்ஸ் பழங்குடியினர் (Sentinelese), அந்தமான்

செண்டிநெல்ஸ் பழங்குடியினர் (Sentinelese), அந்தமான்

இவர்கள் ஏறத்தாழ 60,000 ஆண்டுகளாக அந்த தீவில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களை பிற்படுத்தப்பட்டவர்கள், காட்டுமிராண்டிகள் என தவறாக சிலர் கூறுகிறார்கள்.

செண்டிநெல்ஸ் பழங்குடியினர் (Sentinelese), அந்தமான்

செண்டிநெல்ஸ் பழங்குடியினர் (Sentinelese), அந்தமான்

இவர்கள் மூர்க்கத்தனமாக இருப்பதற்கான காரணம் இவர்கள் வெளியுலகை சுத்தமாக அறியாமல் இருப்பது தான். தங்கள் பகுதியில் வெளியாட்கள் நுழைந்தாலோ, தங்க நினைத்தாலோ இவர்கள் தாக்குதல் நடுத்துவார்கள்.

செண்டிநெல்ஸ் பழங்குடியினர் (Sentinelese), அந்தமான்

செண்டிநெல்ஸ் பழங்குடியினர் (Sentinelese), அந்தமான்

தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் நிலையில் இருப்பினும், இவர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், தற்காப்புடனும் இருக்கிறார்கள். இவர்களிடம் வினோதமாக தென்படுவது இவர்கள் பயன்படுத்தும் சிவப்பு பக்கெட். அனைவரிடமும் அது இருக்கும்.

ஜரவா பழங்குடியினர் (Jarawa), அந்தமான்

ஜரவா பழங்குடியினர் (Jarawa), அந்தமான்

மொத்தமே இவர்கள் 400 பேர்கள் தான். 40-50 குழுக்களாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வாழும் வீட்டை சத்தாஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஜரவா பழங்குடியினர் (Jarawa), அந்தமான்

ஜரவா பழங்குடியினர் (Jarawa), அந்தமான்

பன்றி, ஆமை, நண்டு, மீன் போன்றவற்றை வில், அம்பு கொண்டு வேட்டையாடுகிறார்கள்.இவர்களது வாழ்வாதாரத்திற்காக பழங்கள், வேர்கள், தேன் போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஜரவா பழங்குடியினர் (Jarawa), அந்தமான்

ஜரவா பழங்குடியினர் (Jarawa), அந்தமான்

இவர்கள் ஒருபோதும் வெளியாட்களிடம் தொடர்புக் கொள்வதில்லை. சுற்றுலா பயணிகள் இவர்களை பிராதான சாலைகளில் அவ்வப்போது காண்பதுண்டு. சுற்றுலா பயணிகள் இவர்களை கேளிக்கை பொருள் போல காண நெருங்கினால் அபாயம் தான் மிஞ்சும் என கூறப்படுகிறது.

சென்சுஸ் (Chenchus), ஆந்திரபிரதேசம்

சென்சுஸ் (Chenchus), ஆந்திரபிரதேசம்

பற்ற பழங்குடியினர் உடன் ஒப்பிடும் போது இவர்கள் சற்று முன்னேறியவர்கள் என்றே கூறலாம். இவர்கள் வேட்டையாடும் பொருட்களை, இறைச்சிகளை விற்று பணமாக்கி தங்கள் அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர்.

சென்சுஸ் (Chenchus), ஆந்திரபிரதேசம்

சென்சுஸ் (Chenchus), ஆந்திரபிரதேசம்

இவர்கள் காட்டில் கிடைக்கும் பொருட்களான, வேர்கள், கிழங்குகள், பழங்கள், பீடி இலைகள், இலுப்பைப் பூ, தேன், பசை, புளி மற்றும் பச்சை இலைகள் போன்றவற்றையும் வணிகர்களிடம் விற்று சம்பாதிக்கிறார்கள்.

பில்ஸ் (Bhils), ராஜஸ்தான்

பில்ஸ் (Bhils), ராஜஸ்தான்

இந்த பழங்குடியினர் மத்தியில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. சமூகத்தில் பெண்களை சமநிலையில் இவர்கள் நடத்துகின்றனர். ஆண்களை போல, பெண்களும் மறுமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது. வேளாண்மை தான் இவர்களது அடிப்படை தொழில் மற்றும் எல்லாமே.

சந்தல்ஸ் (Santhals), கிழக்கிந்தியா

சந்தல்ஸ் (Santhals), கிழக்கிந்தியா

ஆரியர்கள் வருகைக்கு முன்பிருந்தே இவர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது வாழ்க்கை முறையில் மரங்கள் நடுவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மீன் பிடிப்பது சாகுபடி இவர்களது தொழிலாக இருந்து வருகிறது.

சந்தல்ஸ் (Santhals), கிழக்கிந்தியா

சந்தல்ஸ் (Santhals), கிழக்கிந்தியா

பேய், பிசாசு என்றால் இவர்களுக்கு மிகவும் பயம். பேய்களை விரட்ட பல முறைகளை இவர்கள் கையாள்கிறார்கள். விலங்குகளை பலிக் கொடுப்பது போன்றவை இதில் உள்ளடங்குகின்றன. நடனமாடுவது இவர்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும்.

காஸி (Khasi) பழங்குடியினர், மேகாலயா

காஸி (Khasi) பழங்குடியினர், மேகாலயா

ஆரம்பக் காலத்திலேயே இவர்கள் மியான்மரில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். கிழக்கு அசாம் பகுதியில் குடியமர்ந்தனர். இவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆண்களை விட, பெண்களுக்கு இங்கு மதிப்பு அதிகம்.

காஸி (Khasi) பழங்குடியினர், மேகாலயா

காஸி (Khasi) பழங்குடியினர், மேகாலயா

சொத்துக்கள் அம்மாவிடம் இருந்து இளைய மகளுக்கு செல்வது இவர்களது வழக்கம். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Peek Into The Hidden World of India’s Most Isolated Tribes

A Peek Into The Hidden World of India’s Most Isolated Tribes, take a look.
Story first published: Tuesday, March 29, 2016, 11:40 [IST]
Desktop Bottom Promotion