For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரைப்படமாக வெளியான 9 கொள்ளையர்களின் திகில் நிறைந்த வாழ்க்கை!

|

காந்தி, காமராஜர், ராமானுஜர் தொடங்கி இன்று தோணி, சச்சின் போன்றவர்களை வரையிலான வாழ்க்கை தொகுப்பு, நிகழ்வுகள் திரைபடமாக வந்துள்ளன, வரவிருக்கின்றன. எப்படி ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரு பக்கம் இருக்கிறதோ அப்படி தான் வாழ்க்கைக்கும். உதாரணத்திற்கும், நல்லவை, கெட்டவை என இரு முகம் இருக்கின்றன.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

அதில் கெட்டவர்களின் வாழ்க்கை வரலாறும் கூட திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதில், முக்கியமாக பல கொள்ளையர்களை பற்றிய வாழ்க்கை மற்றும் அவர்கள் செய்த குற்றங்கள் பற்றி தான் பல திரைப்படங்கள் வந்துள்ளன. இதில் முக்கியமான குற்றவாளிகள் மற்றும் திரைப்படமாக வெளியான அவர்களது வாழ்க்கை பற்றி இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பப்லோ எஸ்கோபர்

பப்லோ எஸ்கோபர்

கொலம்பியாவின் போதை மருந்து கடத்தல் தலைவன் என போற்றப்பட்ட இவன். போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தின் பேரரசனாக திகழ்ந்தான். மேலும், இவன் ஓர் பெரும் சக்தி வாய்ந்த கடத்தல் கூட்டத்தை வழிநடத்தியும் வந்தான்.

திரைப்படம் : Narcos

 தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம்

டான் என்ற வார்த்தை மூலம் பிரபலமடைந்தவன் தாவூத். இவன் இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஓர் கடத்தல் கூட்டத்தை நிர்வகித்து வந்தான். டி-கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றும் நடத்தி வந்தான். 1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பில் இவன் முக்கிய பங்காற்றினான்.

திரைப்படம் : Once Upon a Time in Mumbaai (2010) ; Black Friday (2004)

 அல் கபோன்

அல் கபோன்

அல் கபோன் பொதுவாக அனைவராலும் ஸ்கார்ஃபேஸ் என அறியப்பட்டான். இவன் ஒரு அமெரிக்க கடத்தல் காரன். மது மற்றும் பாலியல் தொழிலுக்கு பெண்களை விற்பது போன்றவற்றை வாழ்நாள் முழுதும் செய்து வந்தான்.

திரைப்படம் : The Untouchables (1987)

 பிராங்க் லூகாஸ்

பிராங்க் லூகாஸ்

முன்னாள் ஹெராயின் டீலர் தான் இந்த பிராங்க் லூகாஸ். நியூயார்க் அருகில் இருக்கும் பகுதியான ஹார்லெம்-ல் 1960-70கள் வரை பெரியளவில் ஹெராயின் கடத்தி வந்தான்.

திரைப்படம் : American Gangster (2007)

 ஜான் டில்லின்ஜர்

ஜான் டில்லின்ஜர்

வாழ்நாள் முழுதும் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தவன் தான் இந்த ஜான். அமெரிக்காவில் மிகவும் கெட்டப்பெயர் எடுத்த கிரிமினல் குற்றவாளி இந்த ஜான் டில்லின்ஜர்.

திரைப்படம் : Public Enemies (2009)

 பிராங்க் காஸ்டிலோ

பிராங்க் காஸ்டிலோ

பிராங்க் காஸ்டிலோ-வை பரவலாக ப்ரைம் மினிஸ்டர் என்று அழைப்பார்கள். கிரிமினல் குற்றங்களின் தலைவன் என்றும் இவனை கூறி வந்தனர். இத்தாலியை சேர்ந்த இவன், அமெரிக்காவை சேர்ந்த பிரபல குற்றசெயல்களில் ஈடுபடும் கும்பல் தலைவர்களில் ஒருவனாக இருந்தான்.

திரைப்படம் : The Departed (2006)

 ஜேம்ஸ் பர்க்

ஜேம்ஸ் பர்க்

ஐரிஷ்மேன் என பரவலாக அறியப்பட்டவன் தான் இந்த ஜேம்ஸ் பர்க். ஐரிஷ்-அமெரிக்க கடத்தல் காரனாக இருந்தான் இவன். 1970-களில் இவன் பெரிய குற்ற செயலிகளில் ஈடுபட்டு வந்தான். பல கொலை வழக்குகள் இவன் மீது பதியப்பட்டு இருந்தது.

திரைப்படம் : Goodfellas (1990)

 பில்லி கிட்

பில்லி கிட்

ஹென்றி அண்டிர்ம் எனும் இவன் மற்றவர்களால் பில்லி கிட் என அழைக்கப்பட்டு வந்தான். 18 வயதிலேயே இவன் கொலை வழக்குகளில் சிக்கிய இவன் பெரும் கடத்தல் காரனாக திகழ்ந்தான். இவனது வாழ்நாளில் 30-கும் மேற்பட்டவர்களை கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.

திரைப்படம் : Billy the Kid (2013)

 ஜாக் டயமண்ட்

ஜாக் டயமண்ட்

ஜாக் டயமண்ட் ஒரு கள்ளச்சாராயக்காரன். இவனும் ஐரிஷ்-அமெர்க்கன் ஆவான். இவன் கள்ளசந்தையில் மதுவை சட்டத்திற்கு மாறாக விற்று வந்துள்ளான்.

திரைப்படம் : The Rise and Fall of Legs Diamond (1960)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Gangsters That Famous For Their Badass Lives

Nine Gangsters That Shook The World But Are Remembered For Their Badass Lives, read here in tamil.
Desktop Bottom Promotion