For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா?

புதிய தொழில் தொடுங்குவது, புதிய வீட்டிற்கு குடி போவது, அல்லது இந்த திருநாளில் திருமணம் செய்து கொள்வது என எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த நாளன்று நீங்கள் செய்யலாம்.

By Ashok CR
|

அக்ஷய திருதியை என்பதை மிகவும் மங்களகரமான ஒன்று நாளாக இந்துக்கள் பார்க்கின்றனர். புதிய தொழில் தொடுங்குவது, புதிய வீட்டிற்கு குடி போவது, அல்லது இந்த திருநாளில் திருமணம் செய்து கொள்வது என எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த நாளன்று நீங்கள் செய்யலாம். அனைத்து வித இந்திய பண்டிகைகளுமே மங்களகரமானவைகள் தான்.

அட்சய திருதியை வீட்டு அலங்காரம்

ஆனாலும் அக்ஷய திருதியை என்றால் கூடுதல் சிறப்பு அடங்கியுள்ளது. புதிய தொடக்கங்கள் அனைத்திற்கும் இந்த நாள் மிக உகந்ததாக பார்க்கப்படுகிறது. புனித நாட்களுக்கெல்லாம் புனிதமான ஒன்றாக இந்த இந்து பண்டிகை ஏன் பார்க்கப்படுகிறது? அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரேதா யுகத்தின் தொடக்கம்

திரேதா யுகத்தின் தொடக்கம்

திருதியை என்ற வார்த்தையை இரண்டு விதமாக விளக்கலாம். முதலில், இந்த இந்து பண்டிகை எப்போதுமே விசாக மாதத்தின் மூன்றாம் நாள் வரும். இரண்டாவதாக, திரேதா யுகம் தொடங்கியது இந்த தினத்தில் தான் என கருதப்படுகிறது. 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ள காலத்தின் மீது இந்தியர்களுக்கு நம்பிக்கை உண்டு. அவை, சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம்.

கங்கை நதியின் வருகை

கங்கை நதியின் வருகை

இந்த நாளில் தான் கங்கை நதி பூமி மீது ஓடத்தொடங்கியது என நம்பப்படுகிறது. மானிடர்களின் பாவங்களை போக்க இந்த நாளன்று பூமியில் ஓடத்தொடங்கிய நதி தான் கங்கை என நம்பப்படுகிறது. இந்து மதத்தின் படி கங்கை என்பது மிகவும் புனிதமான நதியாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் விண்ணுலகத்தில் வாழும் ஒரு தெய்வமாக கங்கை நதியை போற்றுகின்றனர்.

கோடாலியை வைத்திருக்கும் பரசுராமன்

கோடாலியை வைத்திருக்கும் பரசுராமன்

பரசுராமனுக்கு நம் இந்து புராணத்தில் ஒரு தனித்துவமான இடம் உள்ளது. அவரை பற்றி, அவரின் வீர தீரமிக்க செயல்களை பற்றி, அவரின் கடுங்கோபத்தை பற்றி பல கதைகள் உள்ளது. விஷ்ணு பகவானின் 6-ஆவது அவதாரமாக கருதப்படும் பரசுராமன் இந்த நாளில் அவதரித்ததாக கருதப்படுகிறது.

செல்வங்களின் கடவுளான குபேரன்

செல்வங்களின் கடவுளான குபேரன்

இந்த இந்திய பண்டிகையின் போது ஏன் தங்கத்தை வாங்குகிறோம் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ஒருவரின் செல்வம் பல மடங்கா பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த நாளன்று அனைவரும் தங்கம், வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த செல்வங்களை வாங்கி வருகின்றனர். ஆனால் இந்த இந்து மத சடங்கின் பின்னணியில் உள்ள நம்பிக்கையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த நாளன்று செல்வங்களின் கடவுளான லக்ஷ்மி தேவியை குபேரன் வழிபடுவாராம்.

தீர்த்தங்கரா தன் விரதத்தை உடைத்த தினம்

தீர்த்தங்கரா தன் விரதத்தை உடைத்த தினம்

அக்ஷய திருதியை என்பது மிக முக்கியமான ஜெயின் மத பண்டிகையுமாகும். அவர்கள் கூறும் கதைப்படி, வளமிக்க அயோத்யா அரசாட்சியை ஆண்டு வந்தார் ஆதிநாத் என்ற மன்னன். தனக்கு ஆன்மீக அழைப்பு வந்த போது, தன் ராஜ வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, தான் ஒரு துறவியாக மாறினார். ஆனால் ஜெயின் மதம் என்பது புதிது என்பதால் துறவியாக மாறிய இந்த மன்னருக்கு என்ன படைப்பது என மக்களுக்கு தெரியவில்லை. அதனால் பல நாட்களாக ஆதிநாத் விரதம் இருந்து வந்தார். பின் தன் பேரனே அவருக்கு கரும்புச்சாறை வழங்கினான். அந்த நாள் முதல் ஜெயின் மதத்தினருக்கு அவர் முதல் தீர்த்தங்கராவாக மாறினார். அதனால் ஜெயின் மதத்தினர் இந்த நாளை கொண்டாட தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவார்கள்.

இந்த மங்களகரமான நாளை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் எங்களிடம் பகிருங்கள் நண்பர்களே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Akshaya Tritiya So Auspicious?

Akshaya Tritiya is one of the most auspicious festivals for Hindus. To know why this Indian festival is considered auspicious for all occasions, read on..
Desktop Bottom Promotion