For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள்!

By Babu
|

உலகில் பலரும் அறிந்திராத சில சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான உண்மைகள் பல உள்ளன. அவற்றில் சில நம்மால் நம்ப முடியாத அளவில் இருந்தாலும், அவை உண்மையே. உதாரணமாக விமானத்தில் ஒரு பெண்ணின் வாய்வு தொல்லையினால் பறந்து கொண்டிருந்த விமானமே தரையிறங்கியது என்றால் பாருங்களேன்.

10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

இதுப்போன்று சில சுவாரஸ்யமான உண்மைகளும், வித்தியாசமான சில விஷயங்களும் உலகில் நிறைந்துள்ளன. அந்த விஷயங்கள் மற்றும் உண்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உலகில் உள்ள விசித்திரமான ஆல்கஹால்கள்!!!

சரி, இப்போது உலகில் உள்ள நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

உலகில் உள்ள விசித்திரமான உயிரினங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2006 இல் நடந்த சம்பவம்

2006 இல் நடந்த சம்பவம்

உ006 ஆம் ஆண்டு, விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தான் வெளியிட்ட துர்நாற்றமிக்க வாயுவை மறைக்க தீக்குச்சியை பற்ற வைத்தார். இதனால் பறந்து கொண்டிருந்த விமானமானது உடனே தரையிறங்கப்பட்டது.

கழிவறை கருப்பொருளில் ரெஸ்டாரண்ட்

கழிவறை கருப்பொருளில் ரெஸ்டாரண்ட்

தாய்லாந்தில், வெஸ்டர்ன் கழிவறை கருப்பொருளில் உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரண்ட் ஒன்று உள்ளது. தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இந்த ரெஸ்டாரண்ட் ஒருமுறை சென்று வாருங்கள்.

உலகின் மிகப்பெரிய குடும்பம்

உலகின் மிகப்பெரிய குடும்பம்

உலகிலேயே மிகவும் பெரிய குடும்பம் இந்தியாவில் தான் உள்ளது. இது ஒரு கூட்டுக்குடும்பம். இந்த குடும்பத்தில் ஒருவருக்கு 39 மனைவியும், 94 குழந்தைகளும் உள்ளனர். உண்மையிலேயே உங்களால் இதை நம்ப முடிகிறதா? ஆனால், இது உண்மையே.

நோபல் பரிசு

நோபல் பரிசு

ஐந்து முறை மகாத்மா காந்தி அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை. அதே சமயம் ஹிட்லரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடு கைது செய்யப்பட்டுள்ளது

ஆடு கைது செய்யப்பட்டுள்ளது

2007 ஆம் ஆண்டு, நைஜீரியன் போலீஸால் ஆடு ஒன்று கைது செய்யப்பட்டது. ஆடு கைது செய்யப்பட்டதற்கான காரணம், ஆடு ஆயுமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாம். (என்ன கொடுமைடா சாமி!)

உயிர் தப்பி இறந்த பெண்

உயிர் தப்பி இறந்த பெண்

2013 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் உயிர் தப்பிய பெண் ஒருவர், அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு வந்த தீயணைப்பு வண்டி மோதி நசுங்கி மரணத்தை தழுவினார்.

பூனை பயம்

பூனை பயம்

மிகவும் தைரியமான மற்றும் வீரமான மனிதர்களான ஹிட்லர், அலெக்ஸாண்டர் மற்றும் நெப்போலியன் போன்றோர் பூனை பயம் கொண்ட நோயான அலுரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள்.

மழைநீரை சேகரித்ததால் சிறை தண்டனை

மழைநீரை சேகரித்ததால் சிறை தண்டனை

அமெரிக்காவில் உள்ள ஓரிகனைச் சேர்ந்த ஒருவர் மழைநீரைச் சேகரித்ததால் $1500 அபாரதம் விதிக்கப்பட்டதோடு, சிறை தண்டனையையும் அனுபவித்தார். ஏனெனில் மழைநீரானது அம்மாநிலத்தின் சொத்தாக கருதப்படுகிறதாம்.

சடலங்களின் மூலம் அழகு பராமரிப்பு பொருட்கள்

சடலங்களின் மூலம் அழகு பராமரிப்பு பொருட்கள்

சீனா 2005 ஆம் ஆண்டு இறந்த சடலங்களின் மூலம் அழகு பராமரிப்பு பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அந்த பொருட்களை ஐரோப்பாவில் விற்பனை செய்தது.

மிகவும் பழமையான ஹோட்டல்

மிகவும் பழமையான ஹோட்டல்

ஜப்பானில் உள்ள யாமானாஷியில் இருக்கும் நிஷியாமா ஆன்சன் கெய்ன்கன் என்னும் ஹோட்டல் கி.பி.705 இல் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird And Unbelievable Facts

There are many weird and amazing facts that you must know. These facts about world and humans will make you laugh and wonder at the same time.
Desktop Bottom Promotion