For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் பின்பற்றப்படும் சில விசித்திரமான பழக்கவழக்கங்கள்!!!

|

நமது ஊர்களில் இடது கைகளில் பணம் பெறவோ, தரவோ கூடாது என்பார்கள். வெள்ளிக் கிழமைகளில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பார்கள் இதுப் போல பல விஷயங்களை நாம நமது முன்னோர்கள் கூறியதன் காரணமாக ஓர் கொள்கையாகவே பின்பற்றி வருகிறோம்.

உலகில் வன்முறை தலைவிரித்தாடும் அதிபயங்கர நாடுகள் - 2015

இதுப் போன்ற சில கொள்கைகள் நமது நாட்டில் மட்டுமில்லாது, மற்ற உலக நாடுகளிலும் கூட பின்பற்றப்படுகிறது. ஆனால், அவற்றில் சில கொஞ்சம் விசித்திரமாகவும், புருவத்தை உயர்த்தும் வகையிலும் இருக்கிறது.

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் !!!

அதைப்பற்றி தான் இனி, இங்கு காணவிருக்கிறோம்....

உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க சில விசித்திரமான உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில், பணத்தை பற்றி பேசுவதோ, பணம் கேட்பதோ அநாகரீகமாக கருதப்படுகிறது.

உக்ரைன்

உக்ரைன்

மலர்கள் தருவது உக்ரைனில் கொலைக்குற்றம் போல பார்க்கப்படுகிறதாம் (பூவுக்கு எல்லாம் அக்கப்போரா???)

நியூ சிலாந்து

நியூ சிலாந்து

நியூ சிலாந்தில், சாலைகளில் வாகனங்களில் "ஹாரன்" அடித்து கூச்சலிடுவது மற்ற மக்களை அவமதிப்பது போலவும், அநாகரீகமான செயலாகவும் கருதப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் நாட்டில் உணவு விடுதிகள் அல்லது காபி ஷாப்களில் டிப்ஸ் வைத்து விட்டு செல்வதை அவர்கள் அநாகரீக செயலாக பார்க்கின்றனர்.

நார்வே

நார்வே

நார்வே நாட்டில் சர்ச்சுக்கு போகும் வழியைக் கேட்பதை தவிர்க்க கூறுகின்றனர். (அப்படியா? இதுல என்னப்பா குத்தம்.)

துர்கி

துர்கி

எதற்கெடுத்தாலும் ஓ.கே என்பதை பல தோரணையில் இருப்பது துர்கியில் மிகவும் அவமதிப்பான செயலாம். (பணிவா தான் இருக்கணும் போல..)

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பாவில், ஒருவர் மற்றவரிடம் நீங்கள் எவ்வளவு சம்பளம் அல்லது சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்பது அநாகரீகமாக கருதுகின்றனர்.

அயர்லாந்து

அயர்லாந்து

அந்நாட்டு பேச்சு வழக்கை / உச்சரிப்பை நீங்கள் கிண்டல் செய்வதை அவர்கள் வெறுக்கிறார்கள்.

ஜெர்மனி

ஜெர்மனி

பிறந்தநாளுக்கு முந்தைய நாளே பிறந்தநாள் வாழ்த்து செல்வது ஜெர்மனியில் அநாகரீகமாக கருதப்படுகிறது.

கென்யா

கென்யா

கென்யா மக்களை அவர்களது முதல் பெயரை வைத்து கூப்பிடக்கூடாதாம். (அப்பறம் எதுக்கும்மா அத பேரா வெச்சுருக்கீங்க???)

சிலி

சிலி

சிலி நாட்டில் அவரவர் கைகளில் சாப்பிடுவதே அநாகரீகமாம். (மத்தவன் சாப்பிட்ட எச்சில் ஸ்பூன்'ல தான் சாப்பிடனும் போல)

இத்தாலி

இத்தாலி

இத்தாலி உணவகங்களில் கப்பூசீனோ (cappuccino) ஆர்டர் செய்வது அநாகரீகமாம்!!! (ஒருவேளை கேட்காமலே ஓசி'ல தருவாங்களோ?? - நம்ம புத்திய யாராலையும் மாத்தவே முடியாது!!!)

ஹங்கேரி

ஹங்கேரி

இந்த நாட்டில் கண்ணாடி டம்ளர்களை கொண்டு கலகலவென சப்தம் ஏற்படுத்துவது அநாகரீகமாக கருதப்படுகிறது.

சீனா

சீனா

சீனா நாட்டில் கடிகாரம் அல்லது குடையை கொடையாக தரக்கூடாதாம்!!!

 சிங்கப்பூர்

சிங்கப்பூர்

பொது போக்குவரத்து வாகனங்களில் சாப்பிடுவது சிங்கப்பூரில் அநாகரீகமாக கருதப்படுகிறது.

 அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில், உணவகங்களில் உணவருந்திய பிறகு டிப்ஸ் வைக்காமல் செல்வது அநாகரீகமாக பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Things You Should Not Do Abroad

Do you know about the Weird things you should not do abroad? read here.
Desktop Bottom Promotion