For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் குருவிற்கு கட்டைவிரலை வெட்டி அளித்த ஏகலைவன் ஏன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்?

By Ashok CR
|

மகாபாரதம் முழுவதும் அதன் பிரதான கதைக்களத்தைச் சுற்றி பகையார்ந்த கதைகள் பல உள்ளது. அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்லவர்களாக கூறி விட முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் உட்பட அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே எதிர்மறை குணங்களை கொண்டவர்கள் தான்.

பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர்

அதில் வரும் ஒவ்வொருவருக்கும் நல்ல குணம் மற்றும் தீய குணம், நேர்மை மற்றும் கேடு, நீதிநெறி மற்றும் ஒழுக்கமற்ற குணம் என இரண்டுமே கலந்து இருந்தது.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட ஒருவன் தான் ஏகலைவன். அவனுடைய குணத்தைக் கூறும் கதைகள் பல உள்ளது. குரு தட்சணையாக கருதி, தன் குருவான துரோணாச்சாரியாவிற்கு தன் கட்டை விரலை வெட்டி அளித்த கதையை தான் நம்மில் பலரும் அறிவோம். ஆனால் ஏகலைவன் பற்றி நீங்கள் அறிந்திராத பல தகவல்களும் உள்ளது. அதில் ஒன்று தான் கிருஷ்ணரின் கையால் ஏகலைவனுக்கு ஏற்பட்ட மரணம்.

சகுனியின் சூழ்ச்சி முடிச்சுகளால் பின்னப்பட்ட குருஷேத்திரப் போர்!!!

மிகவும் நல்லவனாக இருந்த ஏகலைவனை ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் கொல்ல வேண்டும்? அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏகலைவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உறவு

ஏகலைவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான உறவு

கிருஷ்ணருக்கு சகோதரன் முறையாவான் ஏகலைவன். ஏகலைவனின் தந்தையான தேவஷ்ராவா, வாசுதேவனின் சகோதரன் ஆவார். காட்டினில் தொலைந்து போன அவரை வேட்டையர்களின் அரசனான நிஷாத வியாத்ராஜா ஹிரன்யதனுஸ் தத்தெடுத்தார்.

Source

குரு தட்சணையின் பின்னணியில் ஸ்ரீ கிருஷ்ணர்

குரு தட்சணையின் பின்னணியில் ஸ்ரீ கிருஷ்ணர்

அம்பு விட உதவும் கட்டை விரலை தனக்கு குரு தட்சணையாக அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை துரோணாச்சாரியாவின் மனதில் வித்திட்டவரே ஸ்ரீ கிருஷ்ணர் தான் என கூறப்படுகிறது. அர்ஜுனனை விட ஏகலைவன் மிகப்பெரிய வில்வித்தைக்காரனாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு.

Source

ஏகலைவனும்.. ஜரசந்தாவும்..

ஏகலைவனும்.. ஜரசந்தாவும்..

நிஷாத வியாத்ராஜா ஹிரன்யதனுஸ் காலம் முதல் ஏகலைவனும் அவனுடைய குலமும் ஜரசந்தாவின் ஆதரவாளர்கள். ஜரசந்தா கிருஷ்ணரின் பகைவன் ஆவான். அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் ஏகலைவனின் சகோதரன் முறையாக இருந்தாலும் கூட, அவருக்கு எதிரியானான் ஏகலைவன்.

Source

கிருஷ்ணரால் கொல்லப்பட்ட ஏகலைவன்

கிருஷ்ணரால் கொல்லப்பட்ட ஏகலைவன்

கிருஷ்ணரும் ருக்மணியும் காதலித்து ஓடிப்போன போது, சிஷ்புலா மற்றும் ஜரசந்தாவுடன் சேர்ந்து ஏகலைவன் எதிர்த்து சண்டையிட்டான். கோபமடைந்த கிருஷ்ணர் ஒரு கல்லை எடுத்து ஏகலைவன் மீது எரிந்து அவனை கொன்றார்.

Source

ஏகலைவன் மரணத்திற்கு பின்னணியில் இருந்த காரணம்

ஏகலைவன் மரணத்திற்கு பின்னணியில் இருந்த காரணம்

சிஷ்புலா, ஜரசந்தா மற்றும் ஏகலைவன் போன்றவர்கள் பின்னாட்களில் கௌரவர்களுடன் சேர்ந்து கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவதில் தடையாக இருப்பார்கள் என்பதை அறிந்ததால் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என துரோணா-பர்வாவில் கிருஷ்ணர் வெளிப்படுத்தியுள்ளார்.

Source

ஏகலைவன் சிறந்த வில்லாளர்

ஏகலைவன் சிறந்த வில்லாளர்

அம்பை எய்தும் கட்டை விரலை இழந்த போதிலும் கூட, ஏகலைவன் ஒரு சிறந்த வில்லாளனாக விளங்கினான் என கூறப்படுகிறது. அவன் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய திறமையையும் கொண்டிருந்தான்.

Source

ட்ரிஷ்டத்யும்னனாக ஏகலைவன்

ட்ரிஷ்டத்யும்னனாக ஏகலைவன்

தன் மரணத்தின் போது, துரோணாச்சாரியாரைக் கொல்ல அவன் மீண்டும் மறுபிறப்பை எடுப்பான் என கிருஷ்ணர் வரமளித்தார் என நம்பப்படுகிறது. ட்ரிஷ்டத்யும்னனாக பிறந்த ஏகலைவன் தான் துரோணாச்சாரியாரைக் கொன்றான் என்றும் கூறப்படுகிறது.

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Was Eklavya Killed By Krishna?

Did you know that Ekalavya met with death at the hands of Lord Krishna? Read on to know the answer.
 
Desktop Bottom Promotion