அல்லாவின் நூறு பெயர்களும் அதன் அற்புத அர்த்தங்களும்!!!

Subscribe to Boldsky

அல்லா என்பவர் ஒருவரே. அவருக்கு இணை என யாரும் இல்லை, துணை என்று யாரும் இல்லை. அல்லாவிற்கு பெற்றோர்கள் இல்லை, பிள்ளைகள் இல்லை. அல்லா என்பவர் தனியானவர். தன்னிலே நிலையானவர். உலகில் அனைத்துப் படைப்புகளும் அல்லாவின் ஆதரவில் நிலைப் பெற்று இருக்கின்றன.

அல்லா சர்வ வல்லமையும் பெற்றிருப்பவர். உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் அறியக் கூடியவர் அல்லா. அல்லா உருவம் இல்லாதவர், உள்ளத்தில் அமையான நிலைப் பெற்றிருப்பவர். மிகுந்த கருணையுள்ளம் கொண்டவர், தாயை விடவும் அன்பு காட்டக் கூடியவர், அவரை நம்புவோரையும், நம்பாதோரையும் உணவு கொடுத்துப் பாதுகாப்பவர்.

அல்லா விரும்பாமல் உலகில் ஒன்றும் நடைப்பெறாது. அவரை நாடியவர்களை மேன்மைப்படுத்த அருளுவார். இனி, அல்லாவின் வேறு பல திருப்பெயர்களாக கருதப்படும் பெயர்கள் என்னென்ன? அவற்றின் அர்த்தங்கள் என்ன என்றி இனி காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.
2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.
3. அல் மலிக் = மன்னன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.
5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.
6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.
8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்.
9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.
11. அல் காலிக் = படைப்பவன்.
12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.
14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.
15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

16. அல் வஹ்ஹாப் = பெருங்கொடையாளன்.
17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதி அளிப்பவன்.
18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.
20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.
21. அல் பாஸித் = தாராளமாகக் கொடுப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.
23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.
24. அல் முஇஸ் = மேன்மை அடையச் செய்வோன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்.
26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.
27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.
29. அல் அதல் = நீதி செய்வோன்.
30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.
32. அல் ஹலீம் = அமைதியானவன்.
33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.
35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.
36. அல் அலிய் = உன்னதமானவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.
38. அல் க(K)பீர் = பெரியவன்.
39. அல் முகீத் = பழிப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.
41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.
42. அல் கரீம் = கொடை கொடுப்போன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.
44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.
45. அல் வாஸிஃ = எங்கும் நிலவுகிறவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.
47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.
48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.
50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.
51. அல் ஹக் = சத்தியமானவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.
53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.
54. அல் மத்தீன் = உறுதியானவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

55. அல் வலீ = கிருபை செய்பவன்.
56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.
57. அல முஹஸீ = தீர்க்கமாகத் தெரிந்தவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக் கொள்பவன்.
59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.
60. அல் முப்திஃ = ஆதியில் வெளியிடுபவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

61. அல் முயீத் = மரணிக்கச் செய்பவன்.
62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.
63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

64. அல் வாஜீத் = கண்டுபிடிப்பவன்.
65. அல் மாஜித் = தலைமை வகிப்பவன்.
66. அல் வாஹித் = தனித்தவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

67. அல் ஆஹத் = ஒருமைக்கு உரியவன்.
68. அல் ஸமத் = தேவையற்றவன்.
69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச் செய்பவன்.
71. அல் முகத்திம் = முன்னேறச் செய்பவன்.
72. அல் முஅக்கிர் = பின் தங்கச் செய்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.
74. அல் ஆகிர் = இறுதியானவன்.
75. அல் ஸாஹிர் = பகிரங்கமானவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

76. அல் பாதின் = அந்தரங்கமானவன்.
77. அல் வாலி = அதிகாரப் பொறுப்புள்ளவன்.
78. அல் முத்த ஆலி = உயர் பதவியுள்ளவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

79. அல் பர் = நன்றி அளிப்பவன்.
80. அல் தவ்வாப் = பட்சாத்தாபிகளை மீட்பவன்.
81. அல் முன் தகீம் = பழி வாங்குபவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

82. அல் அஃபூ = சகிப்பவன்.
83. அல் ரவூஃப் = இரக்கச் சிந்தனையுள்ளவன்.
84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்கு உரியவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும், சிறப்பும் உள்ளவன்.
86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.
87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

88. அல் கனீ = தேவையற்றவன்.
89. அல் முக்னீ = தேவையற்றவனாக ஆக்குவோன்.
90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.
92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.
93. அல் நூர் = ஒளி தருபவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

94. அல் ஹா தீ = நேர்வழி செலுத்துவோன்.
95. அல் பதீஃ = புதுமை செய்வோன்.
96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.

பெயர்களும் அதன் அர்த்தங்களும்

97. அல் வாரித் = உரிமையாளன்.
98. அல் ரஷீத் = நேர்வழியில் இருப்பவன்.
99. அல் ஸபூர் = பொறுமையாளன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Various Names And Meaning Of Allah

Do you know about the various names and meaning of allah? read here.
Story first published: Friday, September 25, 2015, 11:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter