For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

|

இவர் யாரிடமும் அடி வாங்கி சிரிக்க வைக்கவில்லை, யாரையும் துன்புறுத்தும் வகையில் இகழ்ச்சி செய்து பேசியோ கவுண்டர் வசனங்கள் பேசியோ சிரிக்க வைக்கவில்லை. இவர் நடித்த காலத்தில் அதற்கான இடமும் இல்லை. ஊமை படங்களிலேயே வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை ஜாம்பவான் தான் சார்லி சாப்ளின்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

உலகையே வயிறு வலிக்க சிரிக்க வைத்த இந்த சிரிப்பு சக்ரவர்த்தியின் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை. அமெரிக்காவில் இருந்து சில ஆண்டுகள் நாடுக்கடத்தப்பட்டார். தான் மழையில் நனைவதை விரும்புவதாகவும், அப்போது தான் நான் அழுவது யாருக்கும் தெரியாது. என்று இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் பிரபலம்.

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

இனி, நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் பற்றிய அவ்வளவாக யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்க்கலாம்....

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்யமான தகவல்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹிட்லருக்கு மூத்தவர்

ஹிட்லருக்கு மூத்தவர்

சார்லி சாப்ளின் பிறந்தது 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள், சரியாக ஹிட்லர் பிறந்ததற்கு நான்கு தினங்களுக்கு முன்பு பிறந்தார் சாப்ளின்.

டைம் பத்திரிக்கையில் அட்டைப்படத்தில்

டைம் பத்திரிக்கையில் அட்டைப்படத்தில்

உலகின் பிரபல பத்திரிக்கையான "டைம்"மின் (TIME) அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ளின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு முறை திருமணம்

நான்கு முறை திருமணம்

மில்ட்றேத் ஹாரிஸ் (Mildred Harris, 1918 - 1920), லிட்டா கிரே (1924-1927), பவுல்ட்டே (1936-1942), மற்றும் இன்னொருவர் என நான்கு முறை திருமணம் செய்தவர் சார்லி சாப்ளின்.

ஹிட்லருக்கு புகழாரம்

ஹிட்லருக்கு புகழாரம்

ஒரு முறை சாப்ளின் பொது நிகழ்ச்சியில், "ஹிட்லர் ஓர் சிறந்த சர்வாதிகாரி என புகழாரம் சூட்டினர்." இது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது

சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது

கடந்த 1973 ஆம் ஆண்டு இவரது லைம் லைட் (Lime Light) படத்திற்காக சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது வென்றார். இதற்கு முன்பு "தி சர்கஸ்" என்ற படத்திற்காக நடிப்பு, எழுத்து, இயக்கத்திற்கு ஆஸ்கர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஹால் ஆப் ஃபேம்-இல் இருந்து வெளியேற்றம்

ஹால் ஆப் ஃபேம்-இல் இருந்து வெளியேற்றம்

ஹாலிவுட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹால் ஆப் ஃபேம் என்று ஓர் நட்சத்திர அந்தஸ்த்து வழங்கப்படும். இவருக்கும் வழங்கப்பட்டது, ஆனால் இவர் அரசியல் ரீதியாக கம்யூனிஸம் பற்றிய கருத்துகள் வெளியிட்டதால் அந்த அந்தஸ்த்து பறிக்கப்பட்டது.

மகள் தாயக நடித்தார்

மகள் தாயக நடித்தார்

சார்லி சாப்ளினின் மகள் ஜெரால்டைன் சாப்ளின் (Geraldine Chaplin), இவருக்க தாயாக படத்தில் நடித்திருக்கிறார்.

திருடப்பட்ட சாப்ளினின் உடல்

திருடப்பட்ட சாப்ளினின் உடல்

சார்லி சாப்ளின் இறந்த பிறகு, பணத்திற்காக அவரது உடல் திருடி செல்லப்பட்டது. பிறகு 11 வாரங்கள் கழித்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது வீட்டார்கள் ஆறடிக்கு கீழே புதைத்து அதன் மேல் கான்க்ரீட் பயன்படுத்தி யாரும் திருட முடியாத அளவிற்கு பாதுகாப்பு செய்தனர்.

நாடுக் கடத்தப்பட்ட சாப்ளின்

நாடுக் கடத்தப்பட்ட சாப்ளின்

சார்லி சாப்ளின் அமெரிக்க குடிமகனாக அல்லாமல் இருந்ததால், அவர் அங்கு வாழ உரிமம் மறுக்கப்பட்டு நாடுக் கடத்தப்பட்டார். பிறகு 1953ஆம் ஆண்டு உரிமமோடு திரும்பவும் அமெரிக்கா திரும்பினார். இடைப்பட்ட காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தார் சார்லி சாப்ளின்.

73 வயதில் தந்தை ஆனா சாப்ளின்

73 வயதில் தந்தை ஆனா சாப்ளின்

சாப்ளினின் கடைசி மகன் அவரது 73வது வயதில் பிறந்தார்.

இசைக் கலைஞர்

இசைக் கலைஞர்

சார்லி சாப்ளின் ஓர் தேர்ந்த வயலின் இசைக்கலைஞர் எனது பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு விஷயமாகும்.

விண்கலம்

விண்கலம்

சாப்ளினின் பெயரில் "3626-சாப்ளின்" என்ற விண்கலம் / சிறிய கோள் இருக்கிறது. விஞ்ஞானிகள் இவரது ஞாபகமாக பெயர் சூட்டினர்.

எளிமையானவர்

எளிமையானவர்

பெரும் பணக்காரராக இருந்த போதிலும் கூட, சிறிய ஹோட்டல்களில் தாங்கும் பழக்கம் கொண்டிருந்தார் சாப்ளின்.

 நீலநிற கண்கள்

நீலநிற கண்கள்

இவரது கண்களின் நிறம் நீல நிறமாகும். இவர் கருப்பு வெள்ளை படங்களில் மட்டுமே நடித்திருந்ததால் இது யாருக்கும் தெரியாத விஷயமாக இருந்துவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Interesting Facts About Charlie Chaplin

o you know about the unknown interesting facts about Charlie Chaplin? read here
Desktop Bottom Promotion