For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயனாளிகளை வேவு பார்க்கும் ஃபேஸ் புக் கின் உண்மை முகம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

By John
|

முகப்புத்தகம், கடந்த 10வருடங்களாக மனிதர்களை எந்த பிரிவினையும் இன்றி அடிமைப்படுத்தியிருக்கும் ஒரே சாதனம். நின்றால், உட்கார்ந்தால், சமைத்தால், குளித்தால் என ஓர் நாளில் தான் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒருவன் பகிர்ந்துக் கொள்ளும் இடமாக திகழ்கிறது ஃபேஸ் புக்.

உங்கள் துணை ஃபேஸ்புக்கில் யாரையாவது ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுப்பிடிக்க சில அறிகுறிகள்!!!

ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பிறகு, பல மடங்கு புகழ் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வானளவு உயர்ந்து நிற்கிறது ஃபேஸ் புக். இதற்கெல்லாம் சொந்தக்காரர் மார்க் ஜுக்கர்பெர்க். ஓர் இணையத்தை உருவாக்கி உலகையே இணைத்த சாதனை மனிதன். பல கோடி மக்களின் உயிர்நாடியே இவர் தான்.

உறவுகளில் பிரச்சனைகள் வராமலிருக்க ஃபேஸ்புக்கில் நிச்சயம் செய்யக்கூடாதவைகள்!!!

ஃபேஸ் புக் பயன்படுத்துவதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம் என்று தெரியாமலே பலர் உபயோகப்படுத்துகின்றனர். இனி, உலகையே அடிமைப்படுத்தி இருக்கும் ஃபேஸ் புக் பற்றி யாருக்கும் தெரியாத உண்மை முகத்தைப் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேவுபார்க்கும் முகம்

வேவுபார்க்கும் முகம்

நீங்கள் எந்த வேறொரு இணைத்தை பார்த்து வந்தாலும் கூட, நீங்கள் என்ன தேடுகிறீர்கள், என்ன பார்கிறீர்கள் என்று வேவுபார்க்கும் முகப்புத்தகம், இதுப் பற்றி உங்களுக்கு தெரியுமா? நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு ஓகே'வும் உங்களை வேவுபார்க்கும் ஒற்றன்.

அடிமைத்தனம்

அடிமைத்தனம்

சுமாராக, ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் ஒருவர், ஒரு நாளுக்கு 14 முறையாவது தனது போனில் முகபுத்தகத்தை பயன்படுத்துகிறார்.

கொலை சம்பவங்கள்

கொலை சம்பவங்கள்

அமெரிக்காவில், முகபுத்தகத்தில் நண்பனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், நட்பில் இருந்து நீக்கியதற்காகவும் கொலைகள் எல்லாம் நடந்திருக்கிறது.

நீல வண்ணத்தின் பின்னணி

நீல வண்ணத்தின் பின்னணி

ஃபேஸ் புக் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை நீல நிறத்தில் இயங்குவதற்கு காரணம். அதன் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சிவப்பு, பச்சை நிறங்கள் தெரியாது, இதை ஆங்கிலத்தில் கலர் ப்ளைண்ட்நஸ் என்று கூறுவார்கள்.

இறந்தவர்களின் கணக்குகள்

இறந்தவர்களின் கணக்குகள்

இதுவரை முகப்புத்தகத்தில் இறந்தவர்களின் கணக்குகள் மட்டுமே 30 மில்லியனை தாண்டும் என்கின்றனர்.

சீனாவில் தடை

சீனாவில் தடை

கடந்த 2009ஆம் ஆண்டு சீனாவில் ஃபேஸ் புக், ட்விட்டர், நியூயார்க் டைம்ஸ் போன்ற இணையங்கள் தடை செய்யப்பட்டது.

விவாகரத்து

விவாகரத்து

அமெரிக்காவில், மூன்றில் ஒரு விவாகரத்து வழக்கிற்கு, ஓர் காரணமாக கூறப்படுவது ஃபேஸ் புக்காம்.

மார்க் ஜுக்கர்பெர்க்கை ப்ளாக் செய்ய முடியாது

மார்க் ஜுக்கர்பெர்க்கை ப்ளாக் செய்ய முடியாது

முகப்புத்தகத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கை எவராலும் ப்ளாக் செய்ய முடியாது என்பது கொசுறு தகவல்.

ஓட்டை விட அதிகம்

ஓட்டை விட அதிகம்

கடந்த அமெரிக்க தேர்தலில் ஓட்டு போட்டவர்களை விட, முகப்புத்தகத்தில் அதிக பயனாளிகள் இருக்கின்றனர்.

வினோத மனிதன்

வினோத மனிதன்

தான் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள ஒரு நபர், தான் எப்போதெல்லாம் முகப்புத்தகத்தை பயன்படுத்துகிறேனோ, அப்போதெல்லாம் தன்னை முகத்தில் அறைய வேண்டும் என்று ஒரு பெண்ணை நியமித்தராம்.

உடலுறவுக் கொள்ளும் போதும்...

உடலுறவுக் கொள்ளும் போதும்...

5% பிரிட்டிஷ்காரர்கள், தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது கூட முகப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

மார்க் ஜுக்கர்பெர்க், 2013 வருடம் 1 பில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்தார், இது தான் ஒரு தனி நபர் அமெரிக்காவில் செய்த மிகப்பெரிய நன்கொடையாகும்.

போலி முகங்கள்

போலி முகங்கள்

முகப்புத்தகத்தில் இருக்கும் 8.7% முகங்கள் போலி முகங்களாம்.

ஒரு நிமிடத்தில்...

ஒரு நிமிடத்தில்...

ஒவ்வொரு நிமிடத்திலும், சுமார் 1.8 மில்லியன் புதிய லைக்குகள் முகப்புத்தகத்தில் இடப்படுகின்றன.

முகப்புத்தகத்தை வாங்க மறுத்த நிறுவனம்

முகப்புத்தகத்தை வாங்க மறுத்த நிறுவனம்

மை ஸ்பெஸ் (myspace.com) என்ற நிறுவனம் முகப்புத்தகத்தை 2005ஆம் வருடம் 75 மில்லியன் டாலர்களுக்கு வாங்க மறுத்தது. ஆனால், இன்று அதன் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts About Facbook

Do you know about the unknown facts about facebook? read here.
Desktop Bottom Promotion