For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!!

சீரியல் கொலையாளிகள், தொடர்ந்து கொலை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளவர்கள். இவர்கள் எல்லாம் கூலிப்படையை சேர்ந்தவர்கள் அல்ல, ஏன் இவர்கள் எந்த கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அல்ல.

|

சீரியல் கொலையாளிகள், தொடர்ந்து கொலை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளவர்கள். இவர்கள் எல்லாம் கூலிப்படையை சேர்ந்தவர்கள் அல்ல, ஏன் இவர்கள் எந்த கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அல்ல. சாதாரணமாக மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்தவர்கள் தான்.

இன்டர்போல் வலைவீசித் தேடும் உலகின் டாப் 10 அதிபயங்கரவாதிகள்!!!

இதில் சிலர் அனைவரையும் போல வேலைக்கு சென்று வந்தவர்கள். சிலர் மருத்துவராக இருந்துள்ளார்கள். மனதில் திடீரென ஏற்பட்ட உணர்வுகளே இவர்களை இதுப் போன்ற காரியங்களில் ஈடுபாட தூண்டியுள்ளது. பெரும்பாலும் இவர்கள் பெண்களை தான் கொலை செய்துள்ளார்கள்.

இந்தியர்கள் செய்த டாப் 10 விசித்திரமான கின்னஸ் சாதனைகள்!!!

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது காம உணர்வும், கற்பழிப்பு முயற்சியும் தான்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கில்ஸ் டே ரைஸ்

கில்ஸ் டே ரைஸ்

15ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு ராஜ பிரபு இந்த கில்ஸ். கொலை செய்வதையும், சித்திரவதை செய்வதையும் தனது தொழிலாக கொண்டிருந்தான் கில்ஸ். இவன் ஜான் ஆப் ஆர்க் எனும் படையின் தலைவனாக இருந்து வந்தான். இவனது வாழ்நாளில் பெரும்பாலான பிஞ்சு குழந்தைகளை சித்திரவதை செய்து, கற்பழித்து கொடுமை செய்துள்ளான். 1440-ல் இவனை தூக்கிலிட்டு எரித்து சாம்பலாக்கினர்.

ஆண்ட்ரி சிக்கட்டிலோ

ஆண்ட்ரி சிக்கட்டிலோ

ஆண்ட்ரி எனும் இவன் உக்ரைன் நாட்டை சேர்ந்தவன். இவனது 42வது வயதில் முதன் முதலில் 9 வயது சிறுமியை கற்பழிக்க முயன்று கொலை செய்தான்.இவனது வாழ்நாளில் 56 கொலைகள் செய்துள்ளான். கடந்த 1994ஆம் ஆண்டு இவனை தலையில் துப்பாகியால் சுட்டுக் கொன்றனர்.

கொலின்

கொலின்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கொலின் எனும் இவன், 10 கொலைகள் தான் செய்திருக்கிறான் அதையும் நான்கு மாதங்களுக்குள் செய்துள்ளான். இவன் கொலை செய்த அனைவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவனுக்கு ஐந்து ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டது.

டென்னிஸ் ரேடர்

டென்னிஸ் ரேடர்

அமெரிக்காவின் கன்சாஸ் எனும் மாகாணத்தை சேர்ந்தவன் இந்த டென்னிஸ் ரேடர். இவன் ஓர் வெறித்தனமாக கொலையாளன், இவன் செய்த கொலைகளுக்கு இவனே போலீசுக்கு கடிதம் எழுதி, அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் அனுப்பி வைத்துள்ளான். இவனுக்கு பத்து வாழ்நாள் ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டது.

டாக்டர். ஹரோல்ட் ஷிப்மேன்

டாக்டர். ஹரோல்ட் ஷிப்மேன்

இங்கிலாந்து மருத்துவ வரலாற்றில் டாக்டர் ஹரோல்ட் ஷிப்மேன் ஒரு கரும்புள்ளி என குறிப்பிடுகிறார்கள். இவர் இவரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை கொன்றுள்ளார். அதிலும் நடுவயது பெண்மணிகளை. ஏறத்தாழ 200 பேரை இவன் கொலை செய்துள்ளான், காம எண்ணமும், கற்பழிப்பு முயற்சியுமே இதற்கு பின்னணி காரணமாக இருந்துள்ளது.

கேரி

கேரி

அமெரிக்காவின் சால்ட் லேக் நகரத்தை சேர்ந்தவன் இவன். இவன் மூன்று முறை திருமணம் செய்தவன். இவனது மனைவிகளுக்கே தெரியாது இவன் 49 பெண்களை கொலை செய்தவன் என்று. பெரும்பாலும் இவன் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மற்றும் வீட்டைவிட்டு ஓடிவந்த பெண்களை தான் கொலை செய்துள்ளான். இவனுக்கு 48 ஆயுள் தண்டனை வழங்கியது நீதி மன்றம்.

ஜேக் தி ரிப்பர்

ஜேக் தி ரிப்பர்

உலக வரலாற்றிலேயே மிகவும் பிரபலமானவன் இந்த ஜேக். இவன் ஐந்து பாலியல் தொழில் செய்யும் பெண்களை கொலை செய்தான். ஆனால், இன்னும் சரியான தடயங்கள் கிடைக்காமலும், மிகவும் மர்மமாகவும் இருந்து வருகிறது இந்த கொலை வழக்கு.

ஜாவத் இக்பால்

ஜாவத் இக்பால்

பாகிஸ்தான் லாகூர் பகுதியை சேர்ந்த ஜாவத் இக்பால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் வீட்டை விட்டு ஓடிவந்த குழந்தைகளை கொன்றுள்ளான். இதில் பலரை இவன் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தில் போட்டு ஆற்றில் வீசியுள்ளான். இவனுக்கும் இவனுக்கு உதவிய நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெப்ரி டாஹ்மர்

ஜெப்ரி டாஹ்மர்

அமெரிக்காவை சேர்ந்த ஜெப்ரி டாஹ்மர், இவன் 18 பேரை கொலை செய்துள்ளான். இவனிடம் இருந்து தப்பித்த ஒரு நபர் போலீஸிடம் சென்று தகவல் கூறிய பிறகு இவனது வீட்டு ஃபிரிட்ஜ் மற்றும் இதர இடங்களில் இருந்து மனித உடல் உறுப்புகள், தலை போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

அலோன்சோ லோபஸ்

அலோன்சோ லோபஸ்

கொலம்பியா நாட்டை சேர்ந்த அலோன்சோ லோபஸ் 300க்கும் மேற்ப்பட்ட தென் அமெரிக்க பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளான். இவன் பெரும்பாலும் இளம் பெண்களையே குறிவைத்து தேர்வு செய்துள்ளான். முதலில் போலீசுக்கு இவன் மீது சந்தேகம் எழவில்லை. பிறகு தான் இவனை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். இவனுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

டென்னிஸ் நில்சன்

டென்னிஸ் நில்சன்

டென்னிஸ் நில்சன் எனும் இவன் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவன். இவன் 15க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுவன் மற்றும் ஆண்களை கொன்றுள்ளான். இவன் உடலை பதப்படுத்தி படுக்கை அறையில் வைத்திருந்தான். கெட்டுப் போக ஆரம்பிக்கும் போது துண்டு துண்டாட வெட்டி கழிவறையில் வீசியுள்ளான். ஒருமுறை பிளம்பர் சரி செய்ய வந்த போது குழாய்களில் மனித உடல் உறுப்புக்கள் இருப்பதைக் கண்டு அதிரிச்சியுற்று போலீசிடம் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு இவனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது.

டெட் பண்டி

டெட் பண்டி

அமெரிக்காவின் மற்றுமொரு பிரபல சீரியல் கில்லர் இந்த டெட் பண்டி. யாருக்கும் சந்தேகம் வராத விதத்தில் கடத்தி, கற்பழித்து மலை பகுதிகளில் உடல்களை மறைத்து வைத்துள்ளான் டெட் பண்டி. இவன் ஏறத்தாழ 30 பெண்களை கொலை செய்துள்ளான். இவன் மிகவும் புத்திசாலி, இவனே இவனுக்கு வழக்கறிஞராக இருந்து வாதாடினான் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Worst Serial Killers World has Ever Seen

These guys are the top 10 worst serial killers world has never seen, take a look.
Desktop Bottom Promotion