For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் வன்முறை தலைவிரித்தாடும் அதிபயங்கர நாடுகள் - 2015

By John
|

நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பது கலியுகம் என்பதைவிட "கிலி"யுகம் என்று கூறலாம். அந்த அளவு அதிகாரம் கொண்ட நாடுகள் மற்றும் மேல் நிலையிலுள்ளவர்களின் மேல் உள்ள பேரச்சம், நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஓர்புறம் இவர்கள் என்றால், மறுபுறம் இவர்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தீவிரவாதம் கையாண்டு மக்களை அச்சுறுத்தும் கும்பல் மற்றொரு புறம் ஆக்கரமித்து கிலியூட்டுகிறது.

ஆகமொத்தம் இவர்கள் இருவரின் இடையிலும், இடையூரிலும் சிக்கிக்கொண்டு தவிப்பது என்னவோ அப்பாவி பொது மக்கள் தான். பெரும்பாலும் மேலை நாடுகள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை தான் வன்முறை தலைவிரித்தாடும் அதிபயங்கர நாடுகள் என முத்திரை பதித்துக் காட்டும். ஆனால், உலகில் வாழவே அஞ்சும் வகையில் இருக்கும் 2015-ன் அதிபயங்கரமான நாடுகள் பல இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10.ரஷ்யா

10.ரஷ்யா

உலகிலேயே பெரிய நாடு ரஷ்யா. உலகில் எட்டில் ஒரு பங்கு நிலம் ரஷ்யா. மக்கள் தொகையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது இந்த நாடு. உலகில் மிகவும் அபாயமான நாடாக கருதப்படுகிறது ரஷ்யா. இதற்கு காரணம் இங்கு அதிகரித்து வரும் குற்றப்பதிவுகளின் விகிதம் தான். கொலை, தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், பண மோசடி, கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் என்ற குற்றங்கள் இங்கு அதிக அளவில் நடந்து வருகிறது.

09.மெக்ஸிகோ

09.மெக்ஸிகோ

வட அமெரிக்காவில் இருக்கும் மெக்ஸிகோ ஓர் கூட்டாட்சி குடியரசு நாடாகும். அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய நாடு மெக்ஸிகோ. மக்கள் தொகையில் 11வது இடத்தில் இருக்கின்றது. போதை மருந்து, கடத்தல், பிக் பாக்கெட், பாலியல் வன்முறை, துப்பாக்கி முனையில் பணம் பறித்தல் போன்ற பயங்கரங்கள் இங்கு அதிகமாக நடக்கிறது.

08.பாகிஸ்தான்

08.பாகிஸ்தான்

தீவிரவாதத்திற்கு பெயர் போன நாடு என முத்திரை பதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். இஸ்லாமிய குடியரசு நாடு பாகிஸ்தான். மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.கருப்பு சந்தை, பண மோசடி, தீவிரவாதம், போதை பொருள் கடத்தல், திருட்டு போன்ற வகைகளில் மிகவும் பயங்கரமான நாடு என்று பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது பாகிஸ்தான்.

07.ஈராக்

07.ஈராக்

முஸ்லிம்களின் நாடு, ஆயினும் இங்கு ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பாகுபாடு உள்ளது. கடந்த 2011 ஆண்டு அமெரிக்காவுடனான சிரியன் போரில் பலத்த சேதத்தை கண்ட நாடு. ஆயுதமேந்திய எழுச்சி படை தான் இந்த நாட்டை மிகவும் பயங்கரமான நாடு என்ற பட்டியலில் இடம்பெற செய்துள்ளது. துப்பாக்கி சண்டை என்பது இங்கு அவ்வாப்போது நடக்கும் சாதாரண பழக்கமாக ஆகிவிட்டது.

06.அமெரிக்கா

06.அமெரிக்கா

பன்னாட்டுக் கலாச்சாரம் கொண்ட நாடு அமெரிக்கா. நிலம் அளவில் உலகில் நாலாவது இடத்திலும், மக்கள் தொகை அளவில் உலகின் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது அமெரிக்கா. "சூப்பர் பவர்" ஏகபோக பெயரை கொண்டிருப்பதால், நினைத்தைதை எல்லாம் செயும் திமிரும் கொஞ்சம் சேர்ந்திருக்கிறது. திருட்டு, கொள்ளை, கட்டாயப்படுத்தி கற்பழிப்பது, மோசமான தாக்குதல்கள் போன்ற வகைகளில் அமெரிக்கா மிகவும் பயங்கரமான நாடு என வரையறுக்கப்பட்டுள்ளது.

05.சூடான்

05.சூடான்

ஆப்ரிக்காவின் மிக பெரிய நாடு சூடான், அரப் குடியரசு நாடு. உலகின் அதிபயங்கர நாடாக கருதப்படுகிறது.. கொலைவெறித் தாக்குதல், கொன்று குவிப்பது, சுற்றுலா பயணிகளை கடத்துவது, மிரட்டுவது, கொலை செய்வது என பல வகைகளில் பாதுகாப்பிற்கு "பூஜ்ஜியம்" என கருதப்படும் நாடு சூடான்.

 04.ஆப்கானிஸ்தான்

04.ஆப்கானிஸ்தான்

31 மில்லியன் மக்கள் வாழும் நாடு ஆப்கானிஸ்தான். ஊழல், கடத்தல், போதை பொருள் கடத்தல், ஒப்பந்தத்தின் பெயரில் கொலைகள் செய்வது மற்றும் படுகொலைகள் செய்வது போன்றவை இந்த நாட்டை அதி பயங்கரமான நாடு என்ற பட்டியலில் இடம்பெற செய்துள்ளது.

03.இந்தியா

03.இந்தியா

மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில இருக்கும் நாடு இந்தியா.அனைத்து மதங்களும் ஒன்றுனைந்து வாழும் தேசம் இந்தியா. ஆயுதக் கடத்தல், முறையற்ற போதை பொருள் வர்த்தகம்,கற்பழிப்பு, பெண் சிசு கொலை போன்றவற்றில் பயங்கரமான நாடென கருதப்படுகிறது இந்தியா.

02.சோமாலியா

02.சோமாலியா

பயங்கரவாதத்திற்கு தலைமை இடமாக இருக்கும் நாடு சோமாலியா. ஆப்ரிக்காவில் இருக்கும் இந்த நாடு, கடத்தல், கொலை, திருட்டு, லஞ்சம், கொடூரமான, சட்ட விதிமுறைகள் இல்லாதஇடம் என்று கருதப்படுகிறது. இது, மிகவும் ஏழை நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

01.சிரியா

01.சிரியா

அரபு (Arab), க்ரீக்ஸ் (Greeks), ஆர்மேனியன்ஸ் (Armenians), குர்திஸ்(Kurds), துர்க்ஸ் (Turks), மற்றும் பல பிரிவினைகள் கொண்ட கூட்டங்கள் கொண்டுள்ள நாடு சிரியா.சிரியன் உள்நாட்டு போர் தான் இந்த நாட்டை பாதுகாப்பற்ற நாடாக மாற்றியது. ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அரசு படைகளும் கூட இந்த நாட்டில் அமைதி நிலவாமல் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Most Dangerous Countries In The World 2015

Do you know about the Top 10 Most Dangerous Countries In The World 2015? read here.
Story first published: Thursday, June 25, 2015, 11:02 [IST]
Desktop Bottom Promotion