For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்வதி தேவியை அடைய சிவனை அழிக்க முயன்ற பசுமாசுரனின் கதை!

By Ashok CR
|

இந்து மத புராணத்தில் உள்ள பசுமாசுரன் மற்றும் சிவபெருமான் அல்லது பசுமாசுரன் மற்றும் மோகினியின் கதையை பற்றி தெரிந்து கொள்வோமா? நம் இந்திய புராணங்களில் தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையே உள்ள பகையை பற்றி பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்கள் என்றால் வானளாவிய தெய்வீக நபர்கள்; அதுவே அசுரர்கள் என்றால் எப்போதும் ஆபத்தை விளைவிக்க கூடிய கொடூரமான மற்றும் ஆபத்தான நபர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

புராணங்களில் கூறியுள்ளதை போல் இவ்வகையான அசுரர்களை அழிப்பது தேவர்களின் கடமையாக இருந்தது. அதில் பசுமாசுரன்வின் கதை புகழ் பெற்றதாகும். இங்கு உங்களுக்காக அந்த பசுமாசுரனின் புகழ்பெற்ற கதை கொடுக்கப்பட்டுள்ளது.

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவனின் தீவிர பக்தன் பசுமாசுரன்

சிவனின் தீவிர பக்தன் பசுமாசுரன்

பசுமாசுரன் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவான். சிவபெருமானிடம் இருந்து வரத்தை பெறுவதற்கு அவன் தீவிர தியானத்தில் ஈடுபட்டான். தன் தவத்தின் பயனால், அவன் முன் தோன்றிய ஈசன் அவனுக்கு என்ன வரம் வேண்டும் என கட்டார். சாகா வரத்தை கேட்டான் பசுமாசுரன். ஆனால் சாகா வரத்தை அளிக்கும் சக்தி தன்னிடம் இல்லை என கூறினார் சிவபெருமான்.

பசுமாசுரன் கேட்ட வரம்

பசுமாசுரன் கேட்ட வரம்

தான் கேட்ட வரத்தை வேறு மாதிரி கேட்க முடிவு செய்தான் பசுமாசுரன். தன் ஆள்காட்டி விரலால் யாருடைய தலையை அவன் தொடுகிறானோ, அந்த நபர் எரிந்து சாம்பலாகி விட வேண்டும் என்பதே அந்த வரமாகும். இதனை அவன் உரிமையுடன் கேட்டான். சிவபெருமானும் இந்த வரத்தை அளித்தார்.

வரத்தை சோதித்துப் பார்க்க முயன்ற பசுமாசுரன்

வரத்தை சோதித்துப் பார்க்க முயன்ற பசுமாசுரன்

இதை கேட்ட பசுமாசுரன் மிகுந்த சந்தோஷமும், குதூகலமும் அடைந்தான். ஈசன் அளித்த வரத்தை சோதித்து பார்க்க முடிவு செய்தான். அதனால் சிவபெருமானின் தலையை தன் ஆள்காட்டி விரலால் தொட முயற்சித்தான். சிவபெருமானை எரித்து, சாம்பலாக்கி, பார்வதி தேவியை அடைவதே அவனது எண்ணமாகும்.

விஷ்ணுவிடம் உதவி கேட்ட சிவன்

விஷ்ணுவிடம் உதவி கேட்ட சிவன்

பசுமாசுரனிடம் இருந்து சிவபெருமான் தப்பித்து ஓடினார். அவரை தொடர்ந்து சென்றான் பசுமாசுரன். கடைசியாக, விஷ்ணு பகவான் வசிக்கும் இடத்தை சென்றடைந்தார் சிவபெருமான். தன்னாலே உருவான இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு கோரினார்.

மோகினியாக மாறிய விஷ்ணு

மோகினியாக மாறிய விஷ்ணு

சிவபெருமானின் பிரச்சனையை கேட்ட மகாவிஷ்ணு அவருக்கு உதவிட முன் வந்தார். மோகினி உருவத்தை எடுத்த விஷ்ணு அந்த அசுரன் முன் தோன்றினார். அளவில்லா அழகில் ஜொலித்த மோகினியை பார்த்த பசுமாசுரன், அவள் அழகில் உடனடியாக ஈர்க்கப்பட்டான். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மோகினியிடம் கோரினான் பசுமாசுரன்.

மோகினியை அடைய நடனம் ஆடிய பாமாசுரன்

மோகினியை அடைய நடனம் ஆடிய பாமாசுரன்

தனக்கு நடனம் என்றால் மிகவும் பிரியம் என்றும், தன்னுடன் ஈடு கொடுத்து ஆட முடிந்தால் மட்டுமே அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக அவள் கூறினாள். இதற்கு ஒத்துக் கொண்ட பசுமாசுரன், அவளுடன் நடனம் ஆட ஆரம்பித்தான். மோகினிக்கு இணையாக பசுமாசுரன் போட்டிப் போட்டு கொண்டு ஆடியதால், இந்த நிகழ்வு சில நாட்களுக்கு தொடர்ந்தது.

தன் தலையையே தொட்ட பாமாசுரன்

தன் தலையையே தொட்ட பாமாசுரன்

அப்படி ஆடும் போது, ஒரு அசைவில், மோகினி தன் ஆள்காட்டி விரலை எடுத்து தன் தலையில் தொட்டால். பசுமாசுரன் அவள் நடனத்தை அப்படியே பின்பற்றியதால், தன் தலையை தன் ஆள்காட்டி விரலால் தொட்டான். அவ்வளவு தான், அவன் வரத்தை நிறைவேற்றும் வண்ணம், உடனடியாக அவன் எரிந்து சாம்பலாக போனான்.

இந்த கதையை வேறு மாதிரியும் கூறுவார்கள். ஆனால் கதை கருவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. "ஒருவரின் செயல்களே அவருக்கு ஆபத்தாய் முடியும்" என்ற பழமொழி கூட இவனின் கதையில் இருந்து தான் தோன்றியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Story Of Bhasmasura

Story of Bhasmasura and Shiva or Bhasmasur and Mohini in Hindu Mythology. Enmity between the Devas and Asuras is widely depicted in Indian mythology.
Desktop Bottom Promotion