For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துர்வாச முனிவரிடம் குந்தி பெற்ற வரமும், அதனால் கர்ணன் பிறந்த கதையும்!!!

|

கர்ணன் அவரது தாய் குந்திதேவிக்கு, அவரது தந்தை சூரியக் கடவுள் சூரியன் மூலமாகப் பிறந்தார். இளவரசர் பாண்டுவை அவரது தாய் குந்தி திருமணம் செய்வதற்கு முன்னரே கர்ணன் பிறந்தார்.

கார்பரேட் அலுவலகங்களில் உலாவிக் கொண்டிருக்கும் மகாபாரத கதாப்பாத்திரங்கள்!!!

இதற்கு காரணம், துர்வாச முனிவர் குந்திக்கு வழங்கிய வரமே ஆகும். துர்வாச முனிவர் வழங்கிய வரத்தை பிரயோகித்த காரணத்தினால் தான் சூரிய கடவுளுக்கும், குந்திக்கும் மகனாய் பிறந்தார் கர்ணன்.

கிருஷ்ணர் ஏன் கர்ணனை கொன்றார்?: ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

அந்த வரம் என்ன என்ன காரணத்திற்காக குந்திக்கு அந்த வரத்தை துர்வாச முனிவர் வழங்கினர் என்பதை பற்றி இனி காணலாம்...

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குந்தியின் இளமை காலம்

குந்தியின் இளமை காலம்

குந்தி இளமையாக இருந்தபோது, துர்வாச முனிவர் அவரது தந்தையின் இடத்திற்கு வந்தார். குந்திதேவி முனிவருக்கு மிகுந்த கனிவோடு ஒரு ஆண்டு முழுவதும் பணிவிடை செய்தார்.

துர்வாச முனிவர் அருளிய வரம்

துர்வாச முனிவர் அருளிய வரம்

குந்தியின் சேவை மற்றும் விருந்தோம்பலில் மகிழ்ந்த முனிவர் அவரது எதிர்காலத்து துயரம் பற்றி கணித்து திருமணத்திற்குப் பின்னர் பாண்டு மூலம் குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல் பற்றி அறிந்து அந்த துன்பத்தை தீர்க்க வரம் ஒன்றை முன்பே அளித்தார்.

விரும்பிய கடவுளின் மூலம் குழந்தை பெறலாம்

விரும்பிய கடவுளின் மூலம் குழந்தை பெறலாம்

துர்வாச முனிவர் வழங்கிய வரத்தினால், குந்தி தனது விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து குழந்தை பெற முடியும்.

சோதிக்க முடிவு செய்த குந்தி

சோதிக்க முடிவு செய்த குந்தி

குந்தி மணமாகாமல் இருந்த போது, அவர் அந்த வரத்தின் சக்தியைச் சோதிக்க முடிவுசெய்தார். அவர் மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானை அழைத்தார்.

சூரிய பகவானுக்கு பிறந்த குழந்தை

சூரிய பகவானுக்கு பிறந்த குழந்தை

மந்திரத்தின் சக்தியால் கட்டுப்பட்டு, சூரியன் குந்தியின் முன்னாள் தோன்றி அவருக்கு மகனை அளித்தார். அவர் சூரியனைப் போன்றே பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்.

கவசகுண்டலத்தோடு பிறந்த கர்ணன்

கவசகுண்டலத்தோடு பிறந்த கர்ணன்

இந்த குழந்தையானது போர்க்கவசம் ('கவசா') மற்றும் காதுவளையங்கள் ('குண்டலா') இணைந்திருந்தே பிறந்தது.

கண்ணித்தன்மை இழக்காத குந்தி

கண்ணித்தன்மை இழக்காத குந்தி

குழந்தை பிறந்தும் கூட குந்தி தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை. ஆயினும் குந்தி, மணமாகாத தாயாக உலகத்தைச் சந்திக்க விருப்பமின்றி இருந்தார்.

தோழியின் துணையோடு குழந்தையை ஆற்றில் விட்டார்

தோழியின் துணையோடு குழந்தையை ஆற்றில் விட்டார்

குந்தியின் தோழியான தத்ரியின் துணையுடன், அவர் தனது குழந்தை கர்ணனை கூடையில் வைத்து, புனித நதியான கங்கையில், வேறொரு குடும்பத்தால் எடுத்துக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் மிதக்க விட்டார்.

தேரோட்டியின் மகன்

தேரோட்டியின் மகன்

கங்கையில் மிதந்து வந்த கர்ணன் பின்னாளில் ஒரு தேரோட்டியால் எடுத்து வளர்க்கப்பட்டார்.

துரியோதனனின் நட்பால் அரசனான கர்ணன்

துரியோதனனின் நட்பால் அரசனான கர்ணன்

குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தது துரியோதனன் தான். தீயவர் பக்கம் இருப்பினும், கடைசி வரை நட்பிற்கு ஓர் இலக்கணமாய் திகழ்ந்தவன் கர்ணன்.

கொடை வள்ளல்

கொடை வள்ளல்

கேட்டவருக்கு இல்லை என்ற பதிலை தவிர அனைத்தையும் கொடுத்தவன் கர்ணன். கொடையினால் தான் பெற்ற புண்ணியத்தையும் கூட கண்ணனுக்கு தானம் செய்த நிகரற்ற வள்ளல் கர்ணன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Story Behind Birth Of Karna And Kundhi's Wish From Durvasa Muni

The Story Behind Birth Of Karna And Kundhi's Wish From Durvasa Muni, Take a look.
Desktop Bottom Promotion