நீங்கள் அறிந்திராத பொது மருத்துவனையில் இருக்கும் பிரசவ அறை பற்றிய உண்மைகள்!

By: Babu
Subscribe to Boldsky

பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் தருணம் தான் பிரசவ காலம். ஓர் உயிரைப் வெற்றிகரமாக பெற்றெடுக்கும் அந்த நாள் உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் சந்தோஷமான நாளாகும். இருப்பினும் சில பெண்களுக்கு இந்நாள் மிகவும் கொடிய நாளாகவும் இருக்கும். இதற்கு காரணம் சில பொது மருத்துவமனையில் உள்ள பிரசவ அறையில் அவர்களை நடத்திய விதம் தான்.

பலருக்கும் நம் இந்தியாவில் உள்ள சில பொது மருத்துவனையில் இருக்கும் பிரசவ அறையில் நடக்கும் அட்டூழியம் மற்றும் இரக்கமற்ற தன்மையுடன் நடந்து கொள்ளும் விதம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையிலேயே அவற்றைக் கேட்டால், நீங்களே அதிர்ச்சியடைவீர்கள். இங்கு அவற்றில் சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக இவை வட இந்தியாவில் தான் அதிகம் நடக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அவமானம்

பிரசவ அறையில் உள்ள கர்ப்பிணிகள் நிம்மதியாக மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள். சில பொது மருத்துவமனையில், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களை மிகவும் இழிவாக நடத்துவதோடு, மிகுந்த அவமானத்திற்கும் உள்ளாக்குவார்கள்.

தரையில் பிரசவம் நடக்கும்

இன்னும் சில பொது மருத்துவமனைகளில், அங்குள்ள பணியாளர்கள் பெட்ஷீட்டில் கறை படியும் என்று, கர்ப்பிணிகளுக்கு தரையில் பிரசவம் செய்வார்கள். இப்படியெல்லாம் தான் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் மிகவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள்.

பணியாளர்களின் கோபம்

பொது மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமான நோயாளிகள் வருவதால், அங்கு வேலை செய்பவர்கள் யாரைக் கவனிப்பது என்று தெரியாமல் அதிகப்படியான வேலைப்பளுவினால் சில சமயங்களில் தங்களின் அமைதியை இழந்து, நோயாளிகளுடன் அமைதியாக பேச வேண்டியவர்கள், மிகுந்த கோபத்துடன் நடந்து கொள்கிறார்கள். உண்மை தானே! யார் தான் கோபப்படமாட்டார்கள்?

அடிப்பது

இன்னும் சில பொது மருத்துவமனைகளில் நடக்கும் சகிக்கமுடியாத உண்மை என்னவெனில், கர்ப்பிணிகள் வலியால் துடித்து அழும் போது, கர்ப்பிணிகளை அடிக்கவோ, குத்தவோ செய்வார்களாம்.

பணம் தான் பேசும்

சில மருத்துவமனைகளில் பணம் தான் பேசும். அதிலும் பிரசவத்திற்கு கட்டணம் ரூ.1,000 என்பது மட்டுமல்லாமல், தொப்புள் கொடியை வெட்ட ரூ.500 கட்ட வேண்டியதிருக்கும். இப்படி நம் இந்திய மருத்துவ அமைப்பு இருந்தால் பிரசவத்தினால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை எப்படி குறையும்?

ஜெயில் கைதி

சில பொது மருத்துவமனையில் உள்ள பிரசவ அறையில் இருக்கும் கர்ப்பிணிகள் ஜெயில் கைதிகளைப் போல் நடத்தப்படுவார்கள். அதுவும் சொல்ல முடியாத அளவில் கர்ப்பிணிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

பிரசவம் வேகமாக நடைபெற..

பிரசவம் வேகமாக நடைபெறுவதற்கு சில மருத்துவமனைகளில் தேவையில்லாத மருந்துகளான Buscopan மற்றும் Drotaverine போன்றவற்றைப் பயன்படுத்துவது மற்றும் தேவையில்லாமல் பிறப்புறுப்பை வெட்டிவிடுவது என்று செய்வார்களாம்.

குறிப்பு

நிச்சயம் இவையெல்லாம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த மாதிரியான விஷயங்கள் அனைத்து பொது மருத்துவமனைகளிலும் நடப்பதில்லை. இருப்பினும் இப்படியும் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கொடுமையான விஷயங்கள் நமக்கும் தெரியாமல் நடக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Reality Of Indian Labour Rooms

Do you know the reality of indian labour rooms? Read on to know more...
Story first published: Thursday, December 17, 2015, 12:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter