For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் வீர மரணம் அடைந்த மாவீரன் அபிமன்யூவின் கதை!

By Ashok CR
|

அர்ஜுனனின் மகன் தான் அபிமன்யூ. தன் தந்தையை போலவே இளம் வயதிலேயே மிகப்பெரிய போர் வீரனாகவும், தைரியசாலியாகவும், திறமையுடன் விளங்கினான் அபிமன்யூ. சொல்லப்போனால் போர்களத்தில் குறைந்த வயதில் காணப்பட்ட போர்வீரனாக இவன் தான் இருந்திருப்பான். ஆனால் தன்னுடைய வீரதீர செயல்களால் அவனுக்கென ஒரு பெயரை உருவாக்கியிருந்தான்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

அதிலும் பாண்டவர்களின் கஷ்ட காலத்தில், தன்னுடைய உயிரையே கொடுத்து வரலாற்றில் மிகவும் திறமை வாய்ந்த வீரன் என்ற பெயரைப் பெற்றவன் தான் அபிமன்யூ. இங்கு அந்த அபிமன்யூ எப்படி போரில் இறந்தான் என்ற கதை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுபத்ராவிடம் சக்ரவியூகம் கதையை சொன்ன கிருஷ்ணர்

சுபத்ராவிடம் சக்ரவியூகம் கதையை சொன்ன கிருஷ்ணர்

கிருஷ்ணரின் தங்கையான சுபத்ராவை திருமணம் செய்தான் அர்ஜுனன். குருகுல நாட்களில் நடந்த கதைகளை தன் மனைவியிடம் கூறி அவன் மகிழ்ந்தான். அவைகளை கேட்பதற்கு அவளுக்கும் சுவாரசியமாக இருந்தது. ஒரு நாள், அவள் கர்ப்பமாக இருந்த போது, சக்ரவியூஹா (சக்கரம் போன்ற இந்த அமைப்பில் நுழைவது மிகவும் கடினமாகும், அதேப்போல் வெளியேறுவது அதை விட கடினமாகும்) எனப்படும் ராணுவ அமைப்பை உருவாக்கும் ரகசியத்தை அர்ஜுனன் கற்றுக்கொண்ட கதையை கிருஷ்ணர் சுபத்ராவிடம் கூறினார். களைப்படைந்த சுபத்ரா சற்று நேரத்தில் தூங்கி விட்டாள். ஆனால் அதை கவனிக்காத கிருஷ்ணர் பேசிக்கொண்டே இருந்தார். இருப்பினும் அவள் வயிற்றில் இருந்த சிசு தன் தந்தையின் சுவாரசியமான கதையை கேட்டுக் கொண்டிருந்தது.

சக்ரவியூகத்தில் இருந்து வெளிவருவது பற்றி சொல்லாத கிருஷ்ணர்

சக்ரவியூகத்தில் இருந்து வெளிவருவது பற்றி சொல்லாத கிருஷ்ணர்

தொடர்ந்து கதையை கேட்டு வந்த சிசு, அதனை அப்படியே உள்வாங்கியது. இதனால் இந்த அமைப்பை உருவாக்கும் ரகசியத்தை அக்குழந்தை கற்றுக்கொண்டது. தன் தங்கை தூங்கி விட்டதை பின்னர் உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் கதை கூறுவதை நிறுத்தி விட்டார். இதனால் வருத்தமடைந்த சிசு தன் தாயின் வயிற்றில் எட்டி உதைத்து, அவளை விழிக்க செய்தது. ஆனால் அதற்குள் கிருஷ்ணர் சென்று விட்டார். அந்த குழந்தை தான் அபிமன்யூ. சக்ர வியூகத்தை எப்படி வகுப்பது என தெரிந்தே பிறந்த அவன், அதை விட்டு எப்படி வெளியேறுவது என்பது தெரியவில்லை.

 சிறுவயதிலேயே திருமணம் செய்த அபிமன்யூ

சிறுவயதிலேயே திருமணம் செய்த அபிமன்யூ

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, தன் தாய் வழி குடும்பத்துடன் துவாரகையில் வாழ்ந்து வந்தான் அபிமன்யூ. அவர்களின் வனவாசம் முடிவடைந்த போது, விராட்டா ராஜ்யத்தில் ஒரு வருட காலம் இருந்தனர். ஒரு வருட காலம் முடிவடைந்த போது, பாண்டவர்களின் அறிமுகம் கிடைத்த சந்தோஷத்தில் தன் மகளான உத்தாராவை அர்ஜுனனுக்கு மனம் முடித்து வைக்க விரும்பினார் அந்நாட்டின் அரசர். இருப்பினும் உத்தாராவை தன் மகள் போல் பாவித்த அர்ஜுனன், அவளை அபிமன்யூவின் மனைவியாக, தன் மருமகளாக ஏற்றுக் கொண்டான். அதனால் அபிமன்யூ இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.

 போர் அறிவிப்பினால் மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியாத அபிமன்யூ

போர் அறிவிப்பினால் மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியாத அபிமன்யூ

ஆனால் தன் தந்தை மற்றும் மனைவிக்கு அவனால் நேரம் செலுத்தவே முடியவில்லை. அதற்கு காரணம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே போர் அறிவிக்கப்பட்டு விட்டது. வீட்டில் தங்க மறுத்த அந்த இளம் போர் வீரன், தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த வீரர்களை எதிர்த்து போரில் சண்டையிட விரும்பினான்.

சக்ரவியூகத்தை அமைத்த துரோணாச்சாரியார்

சக்ரவியூகத்தை அமைத்த துரோணாச்சாரியார்

வீரமாக சண்டையிட்ட அபிமன்யூ, அவனை விட மூத்தவர்களை கூட ஈர்க்கத் தொடங்கினான். கௌரவர்களின் படைக்கு இவன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தான். 13 ஆம் நாள் போரின் அன்று காலையில், அர்ஜுனன் ஒரு மூலையில் சண்டையிட்டு கொண்டிருந்தான். கௌரவர்களின் தளபதியான துரோணாச்சாரியார், தன் படையை சக்ர வியூகத்தை வகுக்க சொன்னார்.

சக்ரவியூகத்தை உடைத்து செல்ல தயாரான அபிமன்யூ

சக்ரவியூகத்தை உடைத்து செல்ல தயாரான அபிமன்யூ

அர்ஜுனனால் மட்டுமே இந்த அமைப்பை உடைக்க முடியும் என தெரிந்து தான் இதற்கு அவர் கட்டளையிட்டார். இந்த நிலையை கையாள முடியாமல் திணறினான் யுதிஷ்டிரர். இந்த வியூகத்தை உடைக்கவில்லை என்றால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்பதையும் அவன் உணர்ந்தான். கடைசியாக அபிமன்யூவை நோக்கிய அவன், சக்ர வியூகத்தில் நுழைய கூறினான்.

உள்ளே செல்லும் வழி மட்டும் தெரிந்த அபிமன்யூ

உள்ளே செல்லும் வழி மட்டும் தெரிந்த அபிமன்யூ

அதற்கு அபிமன்யூ, "பெரியப்பா, நம் படைக்கு தலைமை தாங்கி, இந்த வியூகத்திற்குள் நுழைய தான் சந்தோஷமடைகிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. எனக்கு அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்ற ரகசியம் தெரியாது. என்னால் வெளியே வர முடியாது. என் உயிர் போவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இந்த படையை என்னால் தனியாக கையாள முடியாது." என கூறினான்.

தைரியம் சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரர்

தைரியம் சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரர்

தன் தம்பியின் மகனின் தைரியமான பேச்சை கேட்டு சந்தோஷமடைந்த யுதிஷ்டிரர், "மகனே, நீ தனியாக இருக்க மாட்டாய். நாங்கள் அனைவருமே உன் பின்னால் தான் இருப்போம். நீ இந்த வியூகத்திற்குள் வெற்றிகரமாய் நுழைந்து விட்ட உடனேயே உன்னை பின் தொடர்ந்து நாங்களும் வந்து விடுவோம். எங்களுக்கும் வெளியே வர தெரியாது என்றாலும் கூட நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சண்டையிடுவோம். எப்படியாவது அதனை விட்டு வெளியேற முயற்சி செய்வோம்" என கூறினார்.

வியூகத்திற்குள் செல்ல முடியாத பாண்டவர்கள்

வியூகத்திற்குள் செல்ல முடியாத பாண்டவர்கள்

இதனை கண்டு ஊக்கமடைந்த அந்த இள போர் வீரன், படைக்கு தலைமையேற்று, அந்த வியூகத்திற்கு தலைமை வகித்த துரோணாச்சாரியாவை நோக்கி முன்னேறினார்கள். மிக சுலபமாக அவன் இந்த வியூகத்திற்குள் நுழைந்து விட்டான். ஆனால் இந்த ஒரு வாய்ப்புக்காக காத்திருந்த கௌரவர்கள், வியூகம் திறக்கப்பட்ட உடனேயே மூடி விட்டார்கள். இதனால் அதற்குள் அபிமன்யூ மட்டும் மாட்டிக்கொண்டான். அவனைச் சுற்றி கர்ணன், துரியோதனன், துச்சாதனன், துரோணாச்சாரியார், அஸ்வதம்மா மற்றும் இன்னும் பல வீரர்கள் சூழ்ந்து கொண்டனர்.

பல வீரர்களை தைரியமாக எதிர்த்த அபிமன்யூ

பல வீரர்களை தைரியமாக எதிர்த்த அபிமன்யூ

இந்த இளம் போர் வீரன் அனைத்து எதிரிகளையும் தைரியமாக, ஒற்றை ஆளாக சமாளித்தான். இதனால் மிகுந்த திறமைசாலியான போர்வீரர்கள் கூட திணறினார்கள். தன் மாமாவான கிருஷ்ணரிடம் தான் கற்றுக்கொண்ட அனைத்து கலைகளையும் பயன்படுத்தி எதிரிகளை திறமையாக சமாளித்தான்.

அபிமன்யூவின் திறமையைக் கண்டு கோபமடைந்த துரியோதனன்

அபிமன்யூவின் திறமையைக் கண்டு கோபமடைந்த துரியோதனன்

தன் எதிரியின் மகனின் இந்த ஆற்றலை கண்டு கோபமுற்றான் துரியோதனன். போர் கலையின் மீது அவனுக்கு இருந்த திறமையை பார்த்து துரோணாச்சாரியார் புகழ்ந்ததனால் அவன் மேலும் கோபமடைந்தான். கௌரவர்களின் படையின் மீது தனக்கு இருக்கும் கடமையை துரோணாச்சாரியாவுக்கு ஞாபகப்படுத்தினான் துரியோதனன். கடமையை செய்து எதிரியை வீழ்த்த கூறினான். விருப்பமில்லாமல், தன் அனுபவம் மற்றும் ஆற்றலை கொண்டு அபிமன்யூவின் தாங்கும் தன்மையை உடைத்தார் துரோணாச்சாரியார்.

ஆயுதங்கள் அனைத்தையும் இழந்த பின்னும் போர் புரிந்த அபிமன்யூ

ஆயுதங்கள் அனைத்தையும் இழந்த பின்னும் போர் புரிந்த அபிமன்யூ

அனைத்து திசைகளில் இருந்தும் வீரர்கள் சூழ்ந்தாலும் அபிமன்யூ விட்டு விடவில்லை. இன்னும் உற்சாகத்துடன் சண்டையிட்டான். தன் தேரை இழந்த போது, தரையில் இறங்கி, எதிரிகளை தைரியமாக எதிர்த்து நின்றான். அவன் வில் உடைந்த போது, தன் வாளையும் கேடயத்தையும் எடுத்தான். தன் வாளும் உடைந்த போது, தன் கதை மற்றும் ஈட்டியை எடுத்தான். தன் அனைத்து ஆயுதங்களும் தொலைந்த போதும் கூட உடைந்த தன் தேரில் இருந்து ஒரு சக்கரத்தை பயன்படுத்தி எதிரிகளை சமாளித்தான்.

போர் விதியை மீறிய கௌரவர்கள்

போர் விதியை மீறிய கௌரவர்கள்

கடைசியாக தேரின் சக்கரமும் உடைந்து போனது. ஆனால் அபிமன்யூ இன்னும் சண்டையை முடிக்கவில்லை. துச்சாதனின் மகனோடு நேருக்கு நேர் சண்டையிட்டான். அவனிடம் எந்த ஆயுதமும் இல்லாத போது, விதியை மீறி அவன் எதிரிகள் ஆயுதங்களுடன் வந்தனர். அதனால் தான் கடைசியில் அவன் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Legend Of Abhimanyu In Mahabharat Story

Abhimanyu was the son of Arjuna, a young warrior as brave and skillful as his father, probably the youngest warrior on the battlefield, but one who made a name for himself by his valorous deeds.
Desktop Bottom Promotion