For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விசித்திர ஆயுதங்கள்!!!

|

இரண்டாம் உலகப்போர் உலக வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது கருப்பு படிந்த பக்கங்கள். வருடம் முழுக்கு, ஒவ்வொரு நாளும் தனது பெயரை அழியா சுவடாய் பதித்து சென்றிருக்கிறது. இந்த போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளும், கொலைகளும், அணு குண்டுகளும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் அளவே கிடையாது. நிகரும் கிடையாது.

சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளுக்கும், வீரர்களுக்கும், அப்பாவி பெண்கள் உட்பட அனைவருக்கும் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன. அதிலும் பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதிகளை துன்புறுத்தி தண்டனைகளை நிறைவேற்றினர் அடங்கா வெறிப்பிடித்த நாய்கள். இதுவெல்லாம் போதாது என சில வித்தியாசமான ஆயுதங்களும் கையாளப்பட்டன.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கப்பலில் இணைக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்

கப்பலில் இணைக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்

ஆயிரம் அடிக்கு தூரம் சென்று தாக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டது இந்த கப்பலோடு இணைக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர். இது, வானில் வரும் விமானங்களை தகர்க்க உருவாக்கப்பட்டது.

Image Courtesy

தற்கொலை தாக்குதல் நாய்கள்

தற்கொலை தாக்குதல் நாய்கள்

ஹிட்லரின் நாசி படையில் தற்கொலை படை நாய்கள் வளர்க்கப்பட்டன. எதிரிகளின் டாங்க்குகள், உணவு சேமிப்பு கிடங்கு, ஆயுத கிடங்கு போன்ற இடங்களுக்கு சென்று, மறைந்திருந்து, தனது உடலில் கட்டப்படிருக்கும் குண்டை, சொல்லிக்குடுத்த வண்ணம் அந்த நாபை எழுத்து வெடிக்க செய்யுமாம். 1920-களிலேயே இது போன்ற தாக்குதல்களை நடத்தியிருந்ததாம் ஹிட்லரின் நாசி படை.

Image Courtesy

போரில் பயன்படுத்தப்பட்ட மாபெரும் துப்பாக்கி

போரில் பயன்படுத்தப்பட்ட மாபெரும் துப்பாக்கி

155 அடி நீளமுள்ள இந்த துப்பாக்கியின் எடை 1350 டன்கள் ஆகும். 98 அடி உள்ள இதன் பேரல் மூலம் 10,000 முறை சுடலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் ஹிட்லர் கூறியதன் படி உருவாக்கப்பட்ட ஆயுதம் ஆகும். இதை, ஜெர்மனியின் ஆயுத உற்பத்தி நிறுவன உரிமையாளர் ஃபிரெயிட்ரிச் என்பவர் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

Image Courtesy: Screen Gram

வி3 பீரங்கி

வி3 பீரங்கி

ஒன்பது அடி நீளமுள்ள குண்டுகளை ஒவ்வொரு மணி நேர இடைவேளையிலும் வெடிப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் இந்த வி 3 பீரங்கி. இது வி1, வி2 ரக பீரங்கிகளின் தொடர்ச்சி ஆகும். 300 குண்டுகள் வரை தொடர்ந்து வெடிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.இது ஒரு வினாடியில் 3,280 அடி தூரம் வரை சென்று தாக்கம் தன்மை கொண்டதாம்.

Image Courtesy

மினி பீரங்கிகள்

மினி பீரங்கிகள்

முற்றிலும் வினோத சிந்தனையுடன் தயாரிக்கபப்ட்டது தான் இந்த மினி பீரங்கிகள். ரிமோட் மூலம் இயக்கம் திறன் கொண்டது இந்த மினி பீரங்கி. ஹிட்லரின் நாசி படை இதற்கு கோலிநாத் ட்ரேக் மைன் (Golinath Tracked Mine) என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது. 2000 அடி தூர தொலைவில் இருந்து கூட இயக்கம் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது இதுப் போன்ற 7,500 மினி பீரங்கிகள் தயாரிக்பட்டனவாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Five Mostost Bizarre Weapons of World War II

Do you know about the five most bizzarre weapons of world war II? read here.
Desktop Bottom Promotion