For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமாயணத்தில் ராமரின் தந்தை தசரதன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா?

By Srinivasan P M
|

தசரதர் என்ற மாமனிதரின் கதை பழம்பெரும் நகரமான அயோத்தியில் இருந்து தொடங்குகிறது. தசரத மன்னரால் ஆளப்பட்டு வந்த நாட்டின் அழகிய தலைநகர் புனித நதியான சரயுவின் கரையில் அமைந்திருந்தது. வரிசையான மரங்கள் அமைந்த தெருக்கள், திறமை வாய்ந்த கைவினைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் நிறைந்திருந்த சந்தைகள் என ஒரு ரம்மியாமான நகரம் அது.

பலருக்கு தெரியாத நளன் மற்றும் தமயந்தியின் அழகான காதல் கதை!

அந்நகரம் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு அறிவை வளர்க்கவும் பகிரவும் விருப்பமுள்ள கல்வியாளர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாகவும் திகழ்ந்தது. அயோத்தியில் வாழ்ந்த மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையுணர்வுடனும் வாழ்ந்தனர். வளமையான பூமியும், செழிப்பான விளைச்சலையும் தரும் நிலங்களைக் கொண்ட நகரம் அது. அயோத்தியின் மக்கள் பசி அறிந்திராதவர்களாக இருந்தனர். மொத்தத்தில் அது ஒரு மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கம் என்றே சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாமனிதர் தசரதர்

மாமனிதர் தசரதர்

தசரதர் ஒரு கருணை மற்றும் ஈகை நிறைந்த தாராள மனமுடைய தலைவராகத் திகழ்ந்தார். அவருடைய நாட்டு மக்கள் அவரை மிகவும் நேசித்ததுடன் அவரின் ராஜ்ஜியம் வளமையுடன் திகழ்ந்தது. அவருக்கு அன்பும் அழகும் நிறைந்த மூன்று மனைவிகள் இருந்தனர் (பழங்காலத்தில் அது ஒரு வழக்கமாகவே இருந்தது). இருப்பினும் தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தவும் தங்கள் புகழைத் தொடர்ந்து எடுத்துச் செல்லவும் அவசியமான ஒரு வாரிசை எண்ணி அவரின் இதயம் கனத்திருந்தது.

குழந்தை வரத்திற்காக சடங்கு நடத்திய தசரதர்

குழந்தை வரத்திற்காக சடங்கு நடத்திய தசரதர்

அவர் ஒரு புனிதச் சடங்கை கடவுள்களுக்கு நடத்தினால், அவர்கள் மனம் குளிர்ந்து அவருக்கு குழந்தை வரம் தருவார்கள் என நம்பி அதை நடத்த முடிவு செய்தார். இந்த சடங்கில் நெருப்பில் இருந்து ஒருவர் தோன்றி இனிய ஒரு பானத்தை வழங்கினார். அவர் குழந்தை பிறக்க அந்த பானத்தை மூன்று அரசிகளுக்கும் வழங்குமாறு அரசனைப் பணித்தார்.

நான்கு குழந்தைகள்

நான்கு குழந்தைகள்

ஒரு நாள் அரசரின் கனவு நிஜமானது அவருடைய பிரார்த்தனைகளுக்கு விடை நான்கு மடங்காகக் கிடைத்தது. அதாவது அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். ராமர், ராணிகளில் மூத்தவரான கவுசல்யையின் வயிற்றில் பிறந்த முதல் மகன் ஆவார். ராணி சுமித்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். பரதன், அரசருக்கு மிகவும் பிடித்தமான ராணி கைகேயிக்குப் பிறந்தார்.

நால்வரும் நல்ல சகோதரர்கள்

நால்வரும் நல்ல சகோதரர்கள்

இந்த நான்கு பிள்ளைகளும் அரசப் பரம்பரையின் பழம்பெரும் பாரம்பரிய முறையில் இளவரசர்களாக வளர்க்கப்பட்டனர். நாட்டின் தலைச்சிறந்த ஆசிரியர்களால் வில்வித்தை, குதிரையேற்றம், வாள் பயிற்சி மற்றும் இளவரசர்களுக்கே உரிய பண்புகள் ஆகியவற்றில் திறம்படக் கற்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு தைரியம், உண்மை, கலாச்சாரம் மற்றும் ஆன்றோர் சான்றோர் ஆகியவரிடத்தில் மரியாதை ஆகியவற்றின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அவர்கள் வெறும் சகோதரர்களாக மட்டுமின்றி, நல்ல நண்பர்களாகவும் விளங்கினர்.

விஸ்வாமித்திரரின் வருகை

விஸ்வாமித்திரரின் வருகை

வருடங்கள் ஓடின அவர்கள் வளர்ந்து திறன் மிக்க ஆடவர்களாக மாறினர். ஒருநாள் தசரதரின் அரசவைக்கு விஸ்வாமித்திர மாமுனிவர் வருகை தந்தார். அவரை மிகவும் மரியாதையுடனும், இன்முகத்துடனும் அரசர் வரவேற்று உபசரித்தார். அரசர் முனிவரிடம் அவருக்குச் சேவை செய்யக் காத்திருப்பதாகவும், அவருக்குத் தேவையானவற்றை கேட்குமாறும் வேண்டிக் கொண்டார். அவர் கேட்கும் எதையும் தான் செய்யத்தயாராய் இருப்பதாக அரசர் தெரிவித்தார்.

ராமரைக் கேட்ட விஸ்வாமித்திரர்

ராமரைக் கேட்ட விஸ்வாமித்திரர்

தான் மிகவும் பலம் வாய்ந்த அரசனாக இருப்பினும் விஸ்வாமித்திரர் தனக்கு கடினமான ஒன்றைக் கேட்பார் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுவே இறுதியில் நடந்தது. விஸ்வாமித்திரர் அரசரின் நாடு மற்றும் செல்வங்கள் ஆகிய அனைத்தையும் விட மதிப்பு வாய்ந்த அரசன் மிகவும் நேசித்த ஒன்றை அதாவது ராமரைக் கேட்டார்.

வேள்வியை நடத்த ராமரைக் கேட்ட விஸ்வாமித்திரர்

வேள்வியை நடத்த ராமரைக் கேட்ட விஸ்வாமித்திரர்

விஸ்வாமித்திரர் காட்டில் இருக்கும் தன்னுடைய ஆசிரமத்தில் வேள்வி ஒன்றை நடத்த உள்ளதாகவும், ஆனால் அதனை ராவணனால் அனுப்பப்பட்ட இரு அசுரர்கள் இடர்பாடுகள் செய்து தடுப்பதால், அவரால் அதனை முடிக்க இயலவில்லை என்றும் அரசரிடம் தெரிவித்தார். அந்த அசுரர்கள் வேள்வியைக் கலைத்து பொருட்களை துவம்சம் செய்தனர். அந்த மாமுனி நினைத்தால் தன்னுடைய போர் திறமையால் அந்த அசுரர்களை பூச்சிகளை நசுக்குவதைப் போல் நசுக்க முடியும். ஆனால் அவர் ஒரு புனித முனிவராக இருப்பதால், அவருடைய திறமைகளை கோபத்திற்காகப் பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் அவர் தன் வேள்வியைக் காப்பதற்கு ராமனை அனுப்பும்படி தசரதரிடம் கேட்டு கொண்டார்.

சாபத்தினால் மகனைப் பிரிந்த தசரதன்

சாபத்தினால் மகனைப் பிரிந்த தசரதன்

அரசருக்கோ பேரதிர்ச்சி. தன்னுடைய பதினாறே வயது நிரம்பிய அன்பான மகனை அசுரர்களை எதிர்க்க அனுப்புவது என்பது அவருக்கு ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அரசர் முனிவரிடம் இது குறித்து வாதிட முயன்றார், மன்றாடிப் பார்த்தார். தானே வருவதாகவும் அல்லது தன்னுடைய பெரும் படையையும் அனுப்பத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் முனிவருக்கோ கடும் கோபம் மேலிட்டது. அவர் அரசனைப் பார்த்து வாய்மை தவறியவன் என்று குற்றம் சாட்டினார்.

எதிர்பாராத விளைவை சந்தித்த தசரதர்

எதிர்பாராத விளைவை சந்தித்த தசரதர்

அப்போது தசரத மன்னர் தான் இளைய வயதில் இருக்கும் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று அவருக்கு நினைவிற்கு வந்தது. அவர் ஒரு நாள் காட்டில் வேட்டையாடுகையில், ஒரு குளத்தினருகே மான் நீர் பருகும் ஓர் ஓசையை கேட்டு அந்த திசையில் அம்பை எறிந்தார். ஓசை வரும் திசையை வைத்து குறி தவறாமல் அம்பு எய்யும் ஒரு அற்புதமான வில்வித்தைக்காரர் அவர். ஆனால் அந்தோ பரிதாபம் அவர் திறமையனைத்தும் ஒரு எதிர்பாராத விளைவை ஏற்படுத்திவிட்டது.

சாபம் பெற்ற தசரதர்

சாபம் பெற்ற தசரதர்

தசரதர் விடுத்த அம்பின் இலக்கு தண்ணீரை சேகரித்துக் கொண்டிருந்த ஒரு இளம் துறவி, மான் இல்லை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. செய்த தவறால் வாயடைத்துப் போன அவர் கடும் துன்பத்தை அனுபவித்தார். இந்த துக்க செய்தியை ஆசிரமத்தில் உள்ள அந்த இளம் துறவியின் வயதான பெற்றோரிடம் எடுத்துரைக்கச் சென்றார். இதைக் கேட்ட அவர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானார்கள். இதன் விளைவாக அந்த வயதான தந்தை தசரதனுடைய மகனும் அவரை விட்டுப் பிரிவான் என்றும் அந்த துக்கத்தில் தசரதரும் மடிய வேண்டும் என்றும் தசரதருக்கு சாபமிட்டு விட்டார். இந்த சம்பவம் மகனை பிரிந்த பெற்றோர் அடையும் துன்பத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Curse on King Dasaratha in Ramayana

This legend begins in the ancient city of Ayodhya. This fair city, capital of the powerful kingdom of King Dashratha, stood on the banks of the holy river Sarayu. Ayodhya was a beautiful city with wide tree-lined streets, markets filled with skilled artisans, dancers and musicians. So what happen after then have a look....
Desktop Bottom Promotion