For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவனுடன் சண்டையிட்டு, அனுமானிடம் வீழ்ந்த ''காண்டீபன்'' அர்ஜுனன் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

By John
|

பாண்டவர்களில், அழகும் வீரமும் ஒருசேரப் பெற்ற வில்வித்தைக்காரன். பீஷ்மரை சாய்த்து, வில் படுக்கையில் வீழ்த்திய மாபெரும் வீரன். கண்ணனை சாரதியாக்கி, பாரதப் போரில் தர்மம் வென்றிட போரிட்டவன், அர்ஜுனன்.

வெளிநாட்டு பெண்களை மணந்த பண்டையக் கால அரசர்கள் !!!

இவனது வீரத்தை போற்றாத ஆணில்லை, அழகைக் கண்டு மயங்காத பெண்ணில்லை. மகாபாரதத்தின் மாபெரும் புத்திரனாக திகழ்ந்த அர்ஜுனனை சுற்றிலும் எண்ணற்ற சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. காதல், காமம், நட்பு, வீரம், தியாகம் என மரணம் வரையிலும் சுவாரஸ்யங்கள் கொண்ட வாழ்க்கையைக் கண்டவன் ''காண்டீபன்'' அர்ஜுனன்...

தன் தாயின் தலையை பரசுராமன் ஏன் வெட்டினான் என தெரியுமா?

இனி, அர்ஜுனன் பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய விஷயங்கள் பற்றிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணனுடன் நெருக்கம்

கண்ணனுடன் நெருக்கம்

மகாபாரத்தில், நட்புக்கு கர்ணனுக்கு அடுத்து கண்ணன் தான். அர்ஜுனனும், கண்ணனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக திகழ்ந்தனர்.குருஷேத்திர போரில் பல முறை அர்ஜுனனின் உயிரை கண்ணன் காப்பாற்றியுள்ளான். ஏன், அர்ஜுனனின் தங்கையைக் காப்பாற்றவும் கூட கண்ணன் உதவியுள்ளான்.

காதல் மன்னன்

காதல் மன்னன்

அர்ஜுனனுக்கு, திரெளபதி, உலுப்பி, சுபத்திரா, சித்ராங்கதா என நான்கு மனைவி உள்ளனர். வீரத்தைக் காட்டிலும் இவனது கட்டழகைக் கண்டு மகிழ்ந்துறுகியவர்களே அதிகம். இவனுடன் சேர பெண்கள் அலை மோதுவர் என்றும் கூறப்படுகிறது. வீரத்தில் காண்டீபனாக திகழ்ந்த அர்ஜுனன், அழகில் மன்மதனைப் போல இருந்திருக்கிறான்.

விலகியிருந்த காதல்

விலகியிருந்த காதல்

திரௌபதியை தன் வீரத்தினால் மணந்து வந்தாலும், பாண்டவர்களின் தாயினால், அவர்கள் ஐவருக்கும் பொதுவாக இருந்தாள் திரௌபதி. ஆயினும் ஐவரில் அர்ஜுனன் மீது தான் தீராத காதல் கொண்டிருந்தால் திரௌபதி. அர்ஜுனனின் நான்கு மனைவிகளில் அதீத காதல் கொண்டவளாக திகழ்ந்தாள் திரௌபதி. ஆயினும், அதை வெளிக்காட்ட முடியாமல் தவித்தாள். அர்ஜுனனுடன் வனத்திலும் சந்தோசமாக வாழ்ந்தவள் திரௌபதி.

ஊர்வசியின் மாயவலை

ஊர்வசியின் மாயவலை

ஊர்வசி ஓர் தேவதை, அவளது மட்டற்ற அழகினால் மேலோகம் புகழும் பெயர் பெற்றவள். முனிவர்களையும் கூட கொஞ்சம் அசைத்து பார்த்தவள் ஊர்வசி. ஓர் இரவில், தனது காம லீலைகளை அர்ஜுனனிடம் காண்பித்து, அவனை மயக்க நினைத்தால் ஊர்வசி. ஆயினும் தொடர்ந்து மறுத்து வந்தான் அர்ஜுனன். இது ஒரு முறைக்கேடான விஷயம் என்று கூறி அவளுடன் இரவை கழிக்க மறுத்தான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் நடன திறமை

அர்ஜுனனின் நடன திறமை

அர்ஜுனன், வில்வித்தை மட்டுமின்றி நடனம் ஆடுவதிலும், இசையிலும் திறமை வாய்ந்தவன்.

சிவனுடன் மல்யுத்தம் புரிந்த அர்ஜுனன்

சிவனுடன் மல்யுத்தம் புரிந்த அர்ஜுனன்

ஓர் முறை வேடனாக தோன்றிய சிவனுடன் அர்ஜுனன் சண்டைக் கட்டியுள்ளான். பிறகு அவர் சிவன் என்று அறிந்ததும் மன்னிப்பு கோரி நின்றுள்ளான் அர்ஜுனன். சிவனும் அர்ஜுனனை மன்னித்து அருளியுள்ளார்.

அனுமானிடம் வீழ்ந்த அர்ஜுனன்

அனுமானிடம் வீழ்ந்த அர்ஜுனன்

அர்ஜுனனுக்கு பணிவு கொஞ்சம் குறைவு. அர்ஜுனனின் திமிர் அவனது உயிரையே விலைப் பேசியது. ஓர் முறை, ஒரு வயதான குரங்கிடம் கடலுக்கு நடுவே தனது வில்வித்தை திறமையைக் கொண்டு பாலம் கட்டுவேன் என்று சவால் விடுத்தான் அர்ஜுனன். ஆனால், அந்த வயதான குரங்கு பொறுமையாக மறுத்தது, இது உன் படையை கடந்து செல்ல உதவாது என்று. சவாலில் தோல்வியுற்றான் அர்ஜுனன். பிறகு அந்த வயதான குரங்கு அனுமான் என்று அவனுக்கு தெரியவந்தது.

போரிட மறுத்த அர்ஜுனன்

போரிட மறுத்த அர்ஜுனன்

குருஷேத்திரம் தொடங்கி போரிட்டுக் கொண்டிருக்கும் போது, நடுவே தனது குடும்பத்தை தானே அழிப்பதா, என்று போரை விட்டு விழக முற்பட்டான் அர்ஜுனன். அப்போது தான் கண்ணன் பரமாத்மாவாக உருவெடுத்து அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து,அவனது பிறப்பின் இரகசியத்தை எடுத்துரைத்துப் போரிட வைத்தார்.

பீஷ்மரையே வீழ்த்த வைத்தது...

பீஷ்மரையே வீழ்த்த வைத்தது...

அந்த உபதேசத்தின் பிறகு குருஷேத்திரத்தில் தொடர்ந்து போரிட்ட அர்ஜுனனை, அஸ்தினாபுரதின் பிதாமகர் பீஷ்மரையே வீழ்த்த வைத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Did Not Know About Arjuna

Do you know the ten things about Arjuna that no one know? Read here.
Desktop Bottom Promotion