For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்!!!

|

நமது நாட்டில் இயற்றப்பட்ட பல பண்டையக் காலத்து இலக்கியங்களும், புராணக்கதைகளும் அறிவியல் பின்னல்களோடு எழுதப்பட்டிருக்கின்றன. கணிதத்தின் பயன்பாடுகளை வார்த்தைகளில் கூறி வியக்க வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

நமது இந்தியப் புராணக் கதைகள் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சென்ற இரு நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட பல அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பற்றிய கூற்றுகளை கூறியிருக்கின்றன.

பூமியின் பிறப்பிலிருந்து, ஒளியின் வேகம், கணிதம், கிரகணம், பூமியின் நிலை, தன்மை, என்று பல்வேறுப்பட்ட அறிவியல் கூற்றுகளை அசாதாரணமாக கூறி சென்றிருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!

இனி அவர்கள் பண்டையக் காலத்திலேயேக் கண்டறிந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பம்

நமது ரிக் வேதத்திலேயே, " சூரியன் தன்னை தானே சுற்றி வருவதாகவும், இது பூமி மற்றும் மற்ற கோள்களை தன் ஈர்ப்பு விசையின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும். அந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

புவி ஈர்ப்பு விசை

புவி ஈர்ப்பு விசை

ரிக் வேதத்தில் ஓர் குறிப்பில், பூமி தன்னை தானே சுற்றியப்படி சூரியனை சுற்றி வருவதாகவும், பூமியில் உள்ள உயிர்களும் அதனுடன் சேர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒளியின் வேகம்

ஒளியின் வேகம்

வேத ரிஷிகளில் ஒருவரான சயனா ரிஷி 14 ஆம் நூற்றாண்டிலேயே ஒளியின் வேகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவென்றில், " 2,202 யோஜனாவை அரை நிமிஷாவில் பயணிக்கும் சூரியனை நான் வணங்குகிறேன்" என்பது போல கூறியிருக்கிறார். ஒரு யோஜனா என்பது ஏறத்தாழ 9 மைல்கள் ஆகும். நிமிஷா என்பது 16/75 வினாடி ஆகும்.

ஆதலால், 2,202 (யோஜனா) x 9 (மைல்) x 75/8 (நிமிஷா) = 185,794 (வினாடிக்கு, மைல் தூரம்)

அறிவியலில் இப்போது ஒளியின் வேகமென வினாடிக்கு 186,282.397 மைல் தூரம் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ சயனா ரிஷி கூறியிருப்பது ஒத்துப்போகிறது.

கிரகணம்

கிரகணம்

ரிக் வேதத்தில் மற்றுமொரு இடத்தில், "கதிரவனே, நீ பரிசளித்த ஒளிக்கு நீயே திரையாகி மறைக்கும் பொழுதில் புவி இருள் சூழ்ந்து திகைக்கிறதே" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சூரிய ஒளியின் மூலம் ஒளிப் பெற்று இயங்கும் நிலவை கிரகணத்தின் பொழுது சூரியனே மறைக்கும் தருணத்தில் பூமி ஒளியின்றி காணப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

சூரியன், பூமிக்கு இடையேயான தூரம்

சூரியன், பூமிக்கு இடையேயான தூரம்

துளசிதாஸ் அவர்கள் இயற்றிய அனுமன் சாலிஸாவில், "ஆயிரம் யோஜனாக்கள் தாண்டி இருக்கும் சூரியனை பழம் என நினைத்து அனுமன் உண்டான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது, 1 யுகம் = 12,000 வருடங்கள், 1 சாஸ்ர யுகம் என்பது = 1,20,00,000 வருடங்கள், மற்றும் 1 யோஜனா என்பது ஏறத்தாழ 8 முதல் 9 மைல்கள்.

"Yug sahsra yojana par bhanu, leelyo taahi madhura phal jaanu" என்று சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 153,6000,000 கி.மீ தூரம் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அறிவியலில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் என்று, 152,000,000 கி.மீ என்று கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏறத்தாழ சரியாகக் கணக்கிட்டுள்ளனர்.

பூமியின் சுற்றளவு

பூமியின் சுற்றளவு

பிரம்மகுப்தா, 7ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு 36,000 கி.மீ என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய அறிவியல் 40,075 கி.மீ அன்று கூறுகிறது. 1% தவறு இருந்தாலும் ஏறத்தாழ எந்த கருவியும் இன்றி பிரம்மகுப்தா அவர்கள் கூறியிருக்கிறார்.

வருடத்தின் அளவு

வருடத்தின் அளவு

சூரிய சித்தார்ந்தா, ஓர் வருடத்தின் அளவை நான்கு வகையில் அளந்து கணக்கிட முடியும் என்று கூறுகிறார். அதை, நட்சத்திரா, சவனா, லூனார் மற்றும் சவுரா என்றும் குறிப்பிடுகிறார். இதில், சவுரா எனும் முறையில் சரியாக 365 நாள், 6 மணி நேரம், 12 நிமிடங்கள், 30 வினாடிகள் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான சான்று "குனார்க்" கோவிலில் இருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்.

"பை" (Pi) மதிப்பு

ஆர்யபட்டா கி.மு 499 ஆண்டே "பை" மதிப்பு 3.1416 என்று தனது 23 வது வயதில் கண்டுப்பிடித்துள்ளார். ஆனால், இதை கடந்த 1761 ஆம் ஆண்டு தான் தற்போதைய அறிஞர்கள் கண்டுப்பிடித்தனர். இது மட்டுமின்றி முக்கோணவியலின் கருத்தையும் இவர் கண்டுப்பிடித்துள்ளார்.

Image Courtesy

வடிகால் அமைப்பு

வடிகால் அமைப்பு

உலகிலேயே முதல் முறையாக இந்து சமவெளி நாகரீகத்தில் தான் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டது. கி.மு 3300 - 1300 காலக்கட்டத்திலேயே இதை பயன்படுத்தியுள்ளனர்.

Image Courtesy

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

9000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சூத்திரங்களில் ஆயிரக்கணகான வியாதிகளுக்கு, 700 வகையான மூலிகைகளின் மூலம் மருத்துவ குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Things That Prove Indian Mythological Literature Is Full Of Scientific Innovations

Do you know that several things from Indian mythological literature is full of scientific innovations? read here.
Desktop Bottom Promotion