For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"நிழல் உலக தாதா" தாவூத் இப்ராஹிமின் மறுப்பக்கம் - திடுக்கிடும் தகவல்கள்!!!

By John
|

"நிழல் உலக தாதா" என்று கூறப்படும் தாவூத் இப்ராஹிம், இந்தியாவின் மிகபெரிய கடத்தல் மன்னன். இவனது வாழ்க்கையை மையமாக வைத்தும், கடத்தல் நிகழ்வுகளை கொண்டும் பல இந்திய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

இவனது சொத்து மதிப்பு மட்டும் 6.7 பில்லியன் டாலர்கள். அல்-கொய்தாவுடன் இவனுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ (Inter-Service-Intelligence) எனப்படும் பாகிஸ்தானின் பாதுகாப்பு வளையம் இவனை பாதுகாத்து வருவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. 1993 மற்றும் 2008 ஆண்டுகளில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இவனுக்கும் தொடர்பு இருந்தது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாவூதின் தந்தை போலீஸ்

தாவூதின் தந்தை போலீஸ்

நமது ஊர்களில் பொதுவாக ஓர் வழக்கு சொல் இருக்கும்,"போலிஸ் மகன் திருடனாக தான் இருப்பான்" என்று. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தாவூத் இப்ராஹிம். இவரது தந்தை ஓர் ஹெட் கான்ஸ்டபிள். தாவூத்துடன் பிறந்தோர் மொத்தம் 11பேர்.

சர்வதேச தீவிரவாதி முத்திரை

சர்வதேச தீவிரவாதி முத்திரை

இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டதற்கு பிறகு அமேரிக்கா 12 வருடங்களுக்கு முன்பு (2003) தாவூத்தை சர்வதேச குற்றவாளி என்று அறிவித்தது. மற்றும் இவனையும், இவனது உடமைகளையும் முடக்க கோரி சர்வதேச போலீஸிடம் கூறப்பட்டது.

கிரிக்கெட் வீரின் மகனுடன் திருமணம்

கிரிக்கெட் வீரின் மகனுடன் திருமணம்

தாவூத்தின் மகள் மாஹ்ரூக் இப்ராஹிம் திருமணம் செய்துக் கொண்டது, பிரபல கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்தத்தின் மகனை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மியாண்தத் இந்தியவிற்குள் வர தடைவிதிக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர்களுக்கு சொகுசு கார் பரிசு...

கிரிக்கெட் வீரர்களுக்கு சொகுசு கார் பரிசு...

ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வந்து பாகிஸ்தான் அணியை மிகவும் கேவலமாக தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அப்படி செய்தால் அனைவருக்கும் சொகுசு கார்கள் பரிசளிப்பதாவும் கூறியதாக முன்னாள் விளையாட்டு வீரர் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

மந்தாகினியுடன் தொடர்பு

மந்தாகினியுடன் தொடர்பு

தாவூத் இப்ராஹிம்மிற்கும் பாலிவுட் நடிகையான மந்தாகினிக்கும் தொடர்பு இருந்ததாம். இவர்களை பற்றிய பல செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

டி- கம்பெனியின் உரிமையாளர்

டி- கம்பெனியின் உரிமையாளர்

தெற்கு ஆசியாவிலேயே பெரிய கடத்தல்காரனாக திகழும் தாவூத் இப்ராஹிம் தான் டி-கம்பெனியின் தலைவர் என்று கூறப்படுகிறது.

உலகின் மிகவும் அச்சத்திற்குரிய குற்றவாளிகள்

உலகின் மிகவும் அச்சத்திற்குரிய குற்றவாளிகள்

கடந்த 2011ஆம் ஆண்டு போர்பஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உலகின் மிகவும் அச்சத்திற்குரிய குற்றவாளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஒருவனாக தாவூத்தின் பெயர் வெளியிடப்பட்டது.

சார்ஜாவில் பெரிய

சார்ஜாவில் பெரிய "கை"

ஒரு காலத்தில் மிக சாதரணாமாக மக்களோடு மக்களாக சார்ஜாவில் சுற்றி வந்தான் தாவூத். அங்கு நடந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை கூட கண்டு ரசித்துள்ளான்.

மும்பையில் கொள்ளைக் கூட்டம்

மும்பையில் கொள்ளைக் கூட்டம்

மும்பையில் "கரீம் லாலா கேங்" என்ற இவனது கட்டுப்பாட்டிற்கு கீழே இயங்கும் கூட்டம் ஒன்று இன்றளவிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

 திரைப்படங்கள்

திரைப்படங்கள்

தாவூதின் வாழ்க்கை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து பல படங்கள் வெளிவந்துள்ளன. பாலிவுட்டில் வெளிவந்த "டி-டே" திரைப்படம் கூட தாவூதின் வாழ்க்கையை தழுவியது தான் எனக் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Things To Know About Dawood Ibrahim

Everyone should know these ten things about the India's under world don Dawood Ibrahim. Take a look..
Desktop Bottom Promotion