For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மயில் தோகை பற்றிய சில இந்து மத புராண கதைகள்!!!

By Ashok CR
|

மயில் என்பது இந்து புராணத்தில் மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இது நம் நாட்டின் தேசிய பறவை என்ற அந்தஸ்த்தை பெற்று பெருமையையும் கொண்டுள்ளது. நம்மில் பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த 4000 வருட காலமாக மயில் இனங்கள் எப்படி வாழ்ந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்வதில் சுவாரசியமாக இருக்கும். தட்ப வெப்பநிலை மாற்றங்கள், மற்றப் பிராணிகளைத் சாப்பிடும் விலங்குகள் மற்றும் மனிதனின் அழிக்கும் போக்குகளுக்கு மத்தியில் இவை வாழ்ந்து வந்ந்துள்ளது என்பது மிகப்பெரிய விஷயமே.

உலகத்திலேயே மிக பழமையான அலங்கார பறவையாக இது இன்னும் நீடிக்கிறது. சரி, அதன் இனம் இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கான ரகசியம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? மயில் இனம் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வருவதை சுற்றி பின்னப்பட்டுள்ள சில கட்டுக்கதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.

இந்து மதத்தில் மயிலையும் அதன் தோகைகளையும் சின்னமாக மெய்பிப்பதற்கான சில இந்து மத புராண கதைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தோற்றம்

தோற்றம்

மயூரா என அழைக்கப்படும் மயில், கருடனின் (விஷ்ணு பகவானை அழைத்துச் செல்லும் புராண பறவை என இந்து மத புராணங்கள் கூறுகிறது) இறகுகளில் ஒன்றில் இருந்து உருவானது என நம்பப்படுகிறது. பாம்பை கொல்லும் புராண காலத்து பறவையாக சில ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது மயில். சில இந்து மத சமயத்திரு நூல்களின் படி, நேரம் சுழற்சியை வெளிப்படுத்தும் சின்னமாக இது உள்ளது.

அழகிய தோகைகள்

அழகிய தோகைகள்

பல காலத்திற்கு முன்பு மந்த நிறத்திலான தோகைகளைக் கொண்டுள்ளது மயில்கள். ராவணனுக்கும், இந்திரனுக்கும் நடந்த போரின் போது, தன் தோகைக்கு பின் இந்திரனை மறைத்துக் கொண்டது. தன்னை போரில் காப்பாற்றியதற்கு நன்றி கடனை காட்டும் விதமாக, அதன் தோகைகளை நீளமாக்கி அதில் வானவில்லில் உள்ள வண்ணங்களை கொண்டு வந்தான். அதனால் தான் இந்திரன் மயில் இருக்கையின் மீது அமர்ந்திருக்குமாறு பல முறை சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மயில் தோகையும்.. லக்ஷ்மி தேவியும்..

மயில் தோகையும்.. லக்ஷ்மி தேவியும்..

தனத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியுடனும் மயில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நாம் வீட்டில் மயில் தோகைகளை வைத்துக் கொள்கிறோம். அது நம் வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு சேர்க்கும் என நம்பப்படுகிறது. மேலும் மயில் தோகை இருந்தால் வீட்டில் பூச்சிகளும் ஈக்களும் அண்டாது எனவும் கூறப்படுகிறது.

இந்து மதத்தில் மயில் தோகை

இந்து மதத்தில் மயில் தோகை

இந்து மதத்தில் மயில் தோகை மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கிரீடத்தில் மயில் தோகையை அணிந்திருந்தார். சக்தி தேவியின் மற்றொரு வடிவமான குமரி தேவி மயிலின் மீது பவனி வந்தார். முருகப் பெருமான் மயிலை தன் வாகனமாக பயன்படுத்தி வந்தார். அதனால் மயிலுக்கும், அதன் தோகைகளுக்கும் இந்து மதத்தில் உள்ள முக்கியத்துவத்தை இதன் மூலம் நாம் அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symbolism Of Peacock Feather In Hinduism

Here are some stories from the Hindu mythology which substantiates the symbolism of peacock and its feathers in Hinduism.
Desktop Bottom Promotion