For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவண்ணாமலை கோவிலை பற்றி பலரும் அறிந்திராத அதிசயிக்கத்தக்க ஆன்மீக தகவல்கள்!!!

|

நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பை தான் நாம் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுகிறோம். சிவன் குடியிருக்கும் தலங்களில் நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பை அடிப்படையாய் கொண்டு இருக்கும் தலங்களை தான் நாம் சிவனின் பஞ்ச பூதத் தலங்கள் என்று கூறுகிறோம்.

இதில் தமிழகத்தில் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் திருவண்ணாமலை சிவனின் தலங்களில் நெருப்பை குறிக்கிறது. மாதாமாதம் இங்கு பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதை மக்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

சித்திரா பௌர்ணமி (சித்திரை மாதம்), கார்த்திகை தீபம் (கார்த்திகை மாதம்), மாட்டுப் பொங்கல் போன்றவை இங்கு திருவிழா போல கொண்டாப்படுகின்றன. இது மட்டுமின்றி சிவனின் உக்கிரமான தலம் என்று கூறப்படும் திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் இருக்கின்றன அவற்றை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர்

சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய சிறப்பு பெற்ற தலம் ஆகும்.

ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்

ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும்

ரமண மகரிஷி திருவண்ணாமலை எனும் இந்த தலத்தில் தான் தவம் இருந்தார். இது இந்த தலத்தின் மற்றுமொரு தனி சிறப்பாக இருந்துவருகிறது.

சிவமும் சக்தியும்

சிவமும் சக்தியும்

சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.

கார்த்திகை மாத சிறப்பு

கார்த்திகை மாத சிறப்பு

சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

ரமண மகரிஷி குறிப்பீடு

ரமண மகரிஷி குறிப்பீடு

மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.

தீப தரிசனம் சிறப்பு

தீப தரிசனம் சிறப்பு

தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. "ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" --- பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதாகும்.

வைகுண்ட வாசல்

வைகுண்ட வாசல்

சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை ‘வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

விநாயகருக்கு செந்தூரம்

விநாயகருக்கு செந்தூரம்

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், இந்த தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். இது தனி சிறப்பாக இருந்து வருகிறது.

மாட்டு பொங்கல் சிறப்பு

மாட்டு பொங்கல் சிறப்பு

மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.

முருகன் காட்சியளித்தார்

முருகன் காட்சியளித்தார்

அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்' (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார். இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளினார் இந்த இரண்டு முருகனின் தரிசனமும் மிகவும் விசேஷம்.

முக்கியமாக தரிசிக்க வேண்டியவை

முக்கியமாக தரிசிக்க வேண்டியவை

பிரம்ம லிங்கம், யோக நந்தி, பாதாள லிங்கம், கிளி கோபுரம், அருணகிரி யோகேசர் ஆகியவை முக்கியமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டியவையாகும்.

பெளர்ணமி கிரிவலம்

பெளர்ணமி கிரிவலம்

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது.

சித்தர்கள் வாழும் மலை

சித்தர்கள் வாழும் மலை

திருவண்ணாமலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகவும், இன்றளவும் கூட அவர்கள் வாழ்ந்து வருவதாகவும், சிலர் சித்தர்களை நேரில் கண்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

ஆட்டோ கிரிவலம்

ஆட்டோ கிரிவலம்

ஏறத்தாழ 14 கிலோமீட்டர் தூரம் இந்த மலையை சுற்றி வர முடியாதவர்கள். பகல் நேரத்தில் ஆட்டோ பிடித்து மலையை சுற்றியுள்ள சிறு சிறு கோயில்களை தரிசனம் செய்து வருவதை இங்கு ஆட்டோ கிரிவலம் என்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of Thiruvannamalai Temple

Do you know about the significance of Thiruvannamalai Temple? Read here.
Desktop Bottom Promotion