For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருநீறு பூசுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? - அறிவியல் பூர்வ உண்மை!

|

விபூதி (அ) திருநீறை எந்த காரணமும் இன்றி வெறும் ஆன்மீகத்தின் பெயர் கொண்டு மட்டுமே தினமும் பயன்படுத்த கூறவில்லை. இப்போது நாம் பயன்படுத்தும் விபூதி பெரும்பாலும் போலியாக தான் தயாரிக்கப்படுகின்றன. உண்மையில் விபூதியை அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டை ஆக்கி வெயிலில் காயவைக்க வேண்டும்.

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மை சுற்றி நிறைய அதிர்வுகள் இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான். நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

புரட்டாசி மாதம் நான் வெஜ் சாப்பிடக்கூடாது ஏன்? - அறிவியல் பூர்வமான தகவல்கள்!!!

இனி ஏன் திருநீறு பூச வேண்டும் என்ற ஐதீகம் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் பயன்கள் என்ன என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல அதிர்வுகளை உள்வாங்க

நல்ல அதிர்வுகளை உள்வாங்க

திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

நெற்றி மிகவும் முக்கியம்

நெற்றி மிகவும் முக்கியம்

மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள்.

பசு மாட்டு சாணத்தில் இருக்கும் மருத்துவ தன்மை

பசு மாட்டு சாணத்தில் இருக்கும் மருத்துவ தன்மை

பசு மாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு ஏன் செய்கிறார்கள்? ஏனெனில், மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலை நல்ல உடற்சக்தியுடன் வைத்திருக்கிறது. இது இடும் சாணத்தை தீயிலிடும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையாக அமைகிறது.

புருவங்களுக்கு மத்தியில் நுண்ணிய நரம்பு

புருவங்களுக்கு மத்தியில் நுண்ணிய நரம்பு

நமது இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. அதனாலேயே மன வசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை பூசப்படுவதாய் சில கருத்துகள் கூறப்படுகின்றன.

சந்தனம் ஏன்?

சந்தனம் ஏன்?

சந்தனத்தின் குளிர்ச்சியானது நெற்றியிலுள்ள மூளையின் புறணி (frontal cortex) என்னும் இடத்தில் அணியப்படும் போது வெப்பத்தின் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்க உதவுகிறது.

புருவம்

புருவம்

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

தொண்டைக்குழி

தொண்டைக்குழி

தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

நெஞ்சுக் கூடு

நெஞ்சுக் கூடு

நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம்.

அறிவியல்

அறிவியல்

அறிவியல் சார்ந்த விஷயங்கள் காலப்போக்கில் வெறுமென ஆன்மிகம் என்று கூறப்பட்டு பிறகு மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அறிவியல் புறம் தள்ளப்பட்டு, மதம் முன் நின்றதால் தான் இந்த விஷயங்கள் எல்லாம் மெல்ல, மெல்ல மறைந்துவிட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of Thiruneer Or Viboothi

Here we have discussed about the Significance Of Thiruneer Or Viboothi in tamil, take a look.
Desktop Bottom Promotion