கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டி.என்.ஏ பற்றிய அற்புதமான 7 தகவல்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

டி.என்.ஏ என அறியப்படும் டி-ஆக்ஸிரிபோநியூக்ளியிக் அமிலம் என்பது உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை உத்தரவிடும் மரபு ரீதியான தகவலை முறைப்படுத்தும் மூலக்கூறு ஆகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் உயிருள்ள ஜீவராசி என்றால் நீங்கள் டி.என்.ஏ.-வை கொண்டிருப்பீர்கள்.

மரபணு மூலமாக உங்களை பின்தொர்டர்ந்து வரும் சில ஆச்சரியமூட்டும் பழக்கங்கள்!!!

ஆனால் உங்களை வடிவமைக்கும் வாழ்க்கையின் மிகச்சிறிய கட்டடக் கண்டத்தை பற்றி உண்மையிலேயே உங்களுக்கு எந்தளவிற்கு தெரியும்? டி.என்.ஏ. வை பற்றி தெரிந்து கொள்ள, இதோ சில அருமையான தகவல்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நினைவாற்றல் கருவி ஒன்று தற்போது உலகத்தை சுற்றி வருகிறது

'இம்மார்டல் டிரைவ்' எனப்படும் நினைவாற்றல் கருவி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் உள்ளது. லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், ஸ்டீஃபென் கோல்பெர்ட், ஸ்டீஃபென் ஹாக்கிங் மற்றும் சில புகழ் பெற்றவர்களின் டிஜிட்டலைஸ்ட் டி.என்.ஏ. தொடர்களை இது கொண்டுள்ளது. ஒரு வேளை உலகத்திற்கு பேரழிவு ஏற்படும் பட்சத்தில், மனிதனின் டி.என்.ஏ.வை பாதுகாக்கும் முயற்சியில் அதனை கால வில்லையில் பாதுகாக்கின்றனர்.

மனித டி.என்.ஏ.வை கொண்டு பூமியில் இருந்து சூரியனுக்கு கிட்டத்தட்ட 600 முறை சென்று வரலாம்

மனிதனின் ஒரு அணுவில் உள்ள டி.என்.ஏ. இழைகளை பிரித்து ஒன்றாக இணைத்தால், அது 6 அடி நீளத்திற்கு வரும். உங்கள் உடலில் உள்ள 10 லட்ச கோடி டி.என்.ஏ. இழைகளை வைத்து இதனை செய்தால் என்னவாகும் என கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடலில் உள்ள மொத்த டி.என்.ஏ.வை கொண்டு சூரியனுக்கு சில நூறு முறைகள் சென்று வரலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

98 சதவீத மனிதர்கள் குரங்குடன் ஒத்துப்போகிறார்கள்

மனிதர்கள் எல்லாம் மரபுகள் ரீதியாக குரங்குகளை விட 1.2 சதவீதம் வேறுபட்டு இருக்கிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. இந்த இரு ஜீவராசிக்கும் பொதுவான முன்னோர் கிட்டத்தட்ட 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளது. பரிணாம வளர்ச்சி அடைந்த இந்த 100 கோடி ஆண்டுகளுக்கு பிறகு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் ஜீன்களை மனிதர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற வீதத்தில், நிமிடத்திற்கு 60 வார்த்தைகளை தட்டச்சு செய்தால், மனிதனின் மரபணுத் தொகுப்பை எழுத 50 வருடங்களாகும்

மரபணுத் தொகுப்பு என்பது மனிதர்களை பற்றிய முதுமையான மரபு ரீதியான தகவலாகும். இந்த மரபு ரீதியான தகவல்கள், 23 ஜோடி குரோமோசோம்களுடன், டி.என்.ஏ. தொடர்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கிராம் டி.என்.ஏ. 700 டெராபைட் தரவுகளை கொண்டிருக்கும்

ஒரு கிராம் டி.என்.ஏ. 5.5 பெடாபிட்ஸ் (தோராயமாக 700 டெராபைட்) அளவிலான தரவுகளை சேமிக்கும் என ஹார்வார்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.

1955-ஆம் ஆண்டிற்கு பின் பிறந்தவர்களுக்கு தங்களின் டி.என்.ஏ.வில் கதிரியக்க கார்பனின் தடயங்கள் காணப்படும்

1950-களில் நடந்த போரின் போது, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களின் தரிசு நிலங்களில் அணு ஆயுத குண்டு வெடிப்புகளை செயல்படுத்தினர். அதன் விளைவாக, மிகப்பெரிய அளவிலான கதிரியக்கம் சுற்றுச்சூழலில் வெளியேறியது. அதனால் 1955 ஆம் ஆண்டிற்கு பின் பிறந்தவர்களுக்கு தங்களின் டி.என்.ஏ.வில் கதிரியக்க கார்பன்-14 தடயங்கள் காணப்படும்.

அனைத்து மனிதர்களும் 99.9 சதவீதம் ஒத்துப்போவார்கள்

உங்கள் தனித்துவமான குடும்ப மரபை குறைத்து எடை போடும் நோக்கில் இவை சொல்லப்படவில்லை. ஆனால் மற்ற அனைவரையும் போல சில விஷயங்கள் ஒன்றாகவே இருக்கும். ஆனால் இவ்வகையான ஒற்றுமைகள் மிகவும் முக்கியமாகும். அது தான் உங்களை மனிதர்களாக ஆக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Awesome Facts about DNA

Deoxyribonucleic acid, commonly known as DNA, is a molecule that encodes the genetic information that dictates a living being's development and functioning. Simply put, if you're a living organism, you possess DNA. How much do you truly know about the minuscule building block of life that shapes who you are? Here are seven awesome facts about DNA.
Story first published: Thursday, July 9, 2015, 10:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter