For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகுனியின் சூழ்ச்சி முடிச்சுகளால் பின்னப்பட்ட குருஷேத்திரப் போர்!!!

By John
|

துரியோதனைின் தாய் காந்தாரி, காந்தார நாட்டை சேர்ந்தவள். சகுனி காந்தாரியின் அண்ணன். மகாபாரதத்தில் சகுனியை அறியாதவர் யாரும் இல்லை. துரியோதனன் மற்றும் அவனது சகோதரர்கள் மட்டுமின்றி, சகுனியின் சகோதரர்களும் நூறு பேர் ஆவர். இது நிறைய பேருக்கு தெரியாது.

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் ஏற்பட முக்கியக் காரணம் சகுனியின் சூழ்ச்சிகள் தான். ஆனால், அந்த சூழ்ச்சிகள் எல்லாம் பாண்டவர்களை பழிவாங்க அல்ல, துரியோதனனைப் பழி வாங்க. இதன் பின்னணியில் சகுனிக்கு நேர்ந்தக் மிகப்பெரிய கொடுமைகள் இருக்கின்றன.

ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

அந்த கொடுமைகளை விளைவித்தவனே துரியோதனன் தான். அதன் காரணத்தினால் தான் உடன் இருந்தே குழிப் பறித்தான் சகுனி. அதற்கு தனது சூழ்ச்சி முடிச்சுகளால் சகுனி பின்னிய வலை தான் குருஷேத்திரப் போர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்தினாபுரம் வந்த சகுனி

அஸ்தினாபுரம் வந்த சகுனி

துரியோதனனின் தாய் காந்தாரியின் அண்ணனான சகுனியுடன் பிறந்தோர் மொத்தம் நூறு பேர். ஏதோ ஒர் காரணத்திற்காக இவர்கள் நூறு பேரும் அஸ்தினாபுரத்திற்கு வந்தனர்.

புணைப் பெயர்கள்

புணைப் பெயர்கள்

இந்த நூறு பேரையும், ஈரைம்பதினர், மற்றும் நூற்றவர் என்று புணைப் பெயர் கொண்டு அழைப்பதும் உண்டு.

மரியாதைக் காரணமாக ...

மரியாதைக் காரணமாக ...

எந்நேரமும் நூறு மாமன்களில் யாரேனேும் ஒருவர் மாளிகையில் அங்கும் இங்கும் சுற்றி வருவர். மரியாதைக் காரணமாக அவர்கள் முன் உட்கார முடியாத சூழல் ஏற்பட்டது துரியோதனன் மற்றும் அவனது சகோதரர்களுக்கு.

சினம் கொண்ட துரியோதனன்

சினம் கொண்ட துரியோதனன்

யார் முன்னும் தலை வணங்கா குணம் கொண்ட துரியோதனன். இவர்கள் காரணமாய் உட்கார கூட வழியின்றி தவித்தான், தனது மாமன்கள் மீது சினம் கொண்டான்.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

நேரம் வரும் வரை காத்திருந்த துரியோதனன், சரியான நேரத்தில் சகுனி உட்பட தனது நூறு மாமன் களையும் சிறையில் அடைத்தான்.

சிறையில் நேர்ந்த கொடுமை

சிறையில் நேர்ந்த கொடுமை

இவர்கள் மீண்டும் வெளி வந்தால் பிரச்சனை தொடரும் என்பதலால், சிறையிலேயே வைத்துக் கொன்று விட திட்டமிட்டான் துரியோதனன்.

ஒரு அரிசி உணவு

ஒரு அரிசி உணவு

சிறையில் அடைக்கப்பட்ட நூறு பேருக்கும் தலா ஒரு அரிசி உணவாக அளிக்கப்பட்டது. மற்றும் தாகத்திற்கு நத்தைக் கூட்டில் தண்ணீர் கொடுக்கப்பட்டது.

சகுனியின் திட்டம்

சகுனியின் திட்டம்

இச்செயல்களால் கடுங்கோபம் கொண்ட சகுனி, தனது நூறு சகோதரர்களையும் அழைத்து ஓர் திட்டமிட்டான். எப்படியும் இந்த ஒரு அரிசி உணவை உண்டு வந்தால் நாம் அனைவரும் மாண்டுவிடுவோம். ஆதலால், நமது அனைவரின் உணவையும் ஒருவருக்கு அளித்து நம்மில் ஒருவரையாவது பிழைக்க வைக்கலாம் என்றான்.

சகுனி உயிர் பிழைத்தல்

சகுனி உயிர் பிழைத்தல்

நூறு பேரும் நீதான் புத்திசாலி, நீ உயிரோடு இருந்தால் தான் துரியோதனனை பழி வாங்க முடியும் என்று சகுனியை உயர் பிழைக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

சிறைக்கு துரியோதனன் வருகை

சிறைக்கு துரியோதனன் வருகை

நூறு பேரும் இறந்து விட்டனரா என்று பார்க்க சிறைக்கு வந்தான் துரியோதனன். சகுனி மட்டும் உயிரோடு இருந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்றான் துரியோதனன்.

சகுனியின் சூழ்ச்சி

சகுனியின் சூழ்ச்சி

துரியோதனன் வந்ததும், காந்தார நாட்டு இளவரசே வாருங்கள், இதோ உங்களை காந்தார நாட்டு அரசனாக தடுக்க முயன்ற பாவிகள் எல்லாம் மடிந்து போயினர். இனி நீங்கள் தான் முடி சூடா மன்னன் என்று தனது சூழ்ச்சி வார்த்தைகளின் மூலம் துரியோதனன் மனதில் நீங்கா இடம் பிடித்தான் சகுனி.

 பாண்டவர்களிடம் பகை வளர்த்தல்

பாண்டவர்களிடம் பகை வளர்த்தல்

துரியோதனனை தனி ஆளாக அழிக்க முடியாது என்பதால், பாண்டர்வர்கள் உடன் பகை வளர்த்து, அவர்கள் மூலம் துரியோதனனை அழிக்க திட்டமிட்டான் சகுனி.

பகடையின் சிறப்பு

பகடையின் சிறப்பு

சூது விளையாட்டில் சகுனி பயன்படுத்திய பகடை அவனது தந்தையின் எலும்பில் செய்யப்பட்டது. அதனால் அந்த பகடை அவன் நினைக்கும் படி தான் உருளும்.

சூதில் வெற்றி

சூதில் வெற்றி

தனது சூழ்ச்சியினால், சூதில் பாண்டவர்களை வென்று, பாஞ்சாலியை மானபங்கமும் செய்ய கருவியாக இருந்தான் சகுனி.

 சூழ்ச்சி வலை

சூழ்ச்சி வலை

துரியோதனைின் அருகிலேயே இருந்து அவனை தான் சொல்வதைக் கேட்கும் கிளிப் பிள்ளையாக்கி, தனது சூழ்ச்சிகளை பலமாக பின்னி, குருஷேத்திரப் போர் எழ மூலக் காரணமாகினான் சகுனி.

சிரித்துக் கொண்டே இறந்தான்

சிரித்துக் கொண்டே இறந்தான்

தனது சகோதரர்கள் மரணத்திற்கு காரணமான துரியோதனன் குருஷேத்திரப் போரில் கட்டாயம் மடிவான் என்ற மகிழ்ச்சியில், போர்களத்தில் சிரித்துக் கொண்டே இருந்தான் சகுனி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sagunis Mysterious Knots Behind Gurushetram War

Do you know about the saguni's mysterious knots behind gutushetram war? Read here.
Desktop Bottom Promotion