For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் நற்குணங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்!!

By John
|

பொதுவாக தமிழக மக்களால் "அம்மா" என்று அழைக்கப்படுபவர் ஜெயலலிதா. இவர் தமிழக அரசியலில் பல தடைகளையும், இன்னல்களையும் தாண்டி வந்தவர். தமிழகத்தின் வெற்றிகரமான முதல் பெண் முதல்வரும் இவர் தான். அ.இ.அ.தி.மு.க. அரசியல் கட்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

அவரது மறைவிற்கு பிறகு, அ.இ.அ.தி.மு.க. எனும் அரசியல் கட்சியை செயலாளர் பொறுப்பில் இருந்து வழிநடத்திக் கொண்டிருப்பவர் செல்வி.ஜெயலலிதா அவர்கள். பிரதமர்களில் இந்திராவும், முதல்வர்களில் ஜெயலிதாவும் ஆளுமை திறனில் நல்ல திறம்பட ஆட்சி செய்தவர்கள் என்று கூறலாம். அதாவது, ஆண்கள் செய்ய தயங்கியதைக் கூட தைரியமாக இந்திய அரசியலில் செய்தவர்கள் இவர்கள்.

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலிதா அவர்களின், ஆச்சரியமூட்டும் அரசியல் நற்குணங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இனி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்சி சார்ந்த் கட்டுப்பாடு

கட்சி சார்ந்த் கட்டுப்பாடு

ஓர் பெண்ணாக இருந்தாலும், தான் செயலாளராக பொறுப்பேற்ற நாள் முதல் தனது கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எந்த நிலையிலும், தனது கட்டுப்பாட்டை விட்டு விலகாத வண்ணம் தனது கட்சியை நடத்தி வருகிறார்.

 கட்சி உறுப்பினர் நலம்

கட்சி உறுப்பினர் நலம்

தனது கட்சி உறுப்பினர்கள் அனைவரைப் பற்றியும் முழுதாய் அறிந்து வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட, இவரது ஊழல் வழக்கின் தீர்ப்புக்கு முந்தைய நாள் தற்கொலை செய்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு கட்சியின் சார்பில் நல உதவிகள் செய்தார்.

ஆளுமை திறன்

ஆளுமை திறன்

கட்சி சார்ந்தும், அரசியல் சார்ந்தும், எந்த கூட்டங்களாக இருந்தாலும், சந்திப்புகளாக இருந்தாலும் அனைத்திலும் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்து ஆளுமையை வலுவாக்குவதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயலலிதா அவர்கள்.

தேர்ந்தெடுப்பதில் வல்லவர்

தேர்ந்தெடுப்பதில் வல்லவர்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தொகுதி வாரியாக தேர்ந்தெடுப்பதில் வல்லவர். ஓர் நபரின் நற்பெயர், முந்தைய நடவடிக்கைகள் பற்றி அறிந்த பிறகு தான் தேர்வு செய்வாராம். மற்றும் பதிவி கிடைத்த பிறகு, அவர்களால் ஏதாவது தவறு நேர்ந்தால் உடனடியாக பதவி விலக செய்து தண்டிப்பதிலும் கண்டிப்பானவர்.

புத்திசாலி

புத்திசாலி

ஆளுமை திறனில் மட்டுமின்றி, மொழியில் நல்ல தேர்ச்சிப் பெற்றவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆங்கிலத்தில் பேசுவதிலும், எழுதுவதிலும் நல்ல ஆற்றல் உடையவர்.

தமிழும் நன்கு எழுதுவார்

தமிழும் நன்கு எழுதுவார்

ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் கூட நல்ல எழுதும் திறன் கொண்டவர் ஜெயலலிதா. "தாய்" பத்திரிக்கைளில் தினமும் எழுதி வருகிறார்.

ஆணாதிக்கத்தை எதிர்த்து

ஆணாதிக்கத்தை எதிர்த்து

தமிழக அரசியில் ஆணாதிக்கத்தை எதிர்த்து வென்றுக் காட்டியவர் தமிழக முதல் ஜெயலலிதா. முன்னாள் முதல்வர் கலைஞர். கருணாநிதி அவர்களுக்கு இணையாக ஐந்து முறை முதல்வர் பதவி ஏற்றவர் ஜெயலலிதா.

மக்கள் சேவை

மக்கள் சேவை

இவரது கடந்த ஆட்சி காலத்தில் பல மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அம்மா உணவகம், அம்மா உழவர் பொருள் விற்பனை கடைகள், மற்றும் குறைந்த விலை உணவுப் பொருள்கள் போன்ற பல திட்டங்கள் செயலாக்கம் செய்யப்பட்டன.

சிறந்த நிர்வாகம்

சிறந்த நிர்வாகம்

ஜெயலலிதா அவர்களது ஆட்சியின் சிறப்பு என்று கூற வேண்டும் என்றால், அது நிர்வாக திறன் தான். இவரது ஆட்சியில், மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் அவர்களது வேலைகளை திறன்பட செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Politics Positive Qualities About Amma Jayalalitha

Do You Know About Positive Qualities About Amma Jayalalitha? Read Here.
Desktop Bottom Promotion