For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"டாம் அண்ட் ஜெர்ரி", "பாப்பாய்", "ஸ்கூபி டூ " எல்லா மறக்க முடியுமா? - கார்டூன் நெட்வொர்க் ஞாபகங்கள்!

|

தொண்ணூறுகளில் பிறந்த குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று பெரும்பாலும் கூறுவார்கள். ஏனெனில், கலாச்சாரம், தொழில்நுட்பம் என்று இரண்டையும் சேர்த்து கற்றுக் கொண்டு வளர்ந்தவர்கள் அவர்கள். குழந்தை பருவத்திற்கு தேவையான அனைத்தையும் அனுபவித்தவர்கள் அவர்கள்.

குழந்தை பருவம் என்றாலே அதில் கார்ட்டூன் மிக முக்கிய பங்குவகிக்கும். அந்த வகையில் தொண்ணூறுகளில் வெளியான கார்ட்டூன்களுக்கு ஈடாக இப்போது உள்ள கார்டூன்களில் அவ்வளவு பெரிய கற்பனை இல்லை. டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய், ஸ்கூபி டூ, டைனி டூன்ஸ், போக்கி மான், மாஸ்க் என அன்றைய நாட்களை சொர்கமாக காட்டிய கார்டூன்கள் ஏராளம்.

இன்றைய 3டி, மோஷன் கேப்ட்ச்சரிங் தொழில்நுட்பங்களினால் கூட அன்றைய கார்டூன்களுக்கு ஈடுக் கொடுக்க முடியாது என்பது தான் உண்மை. ஏனெனில், ஒவ்வொரு கார்டூனும் ஒரு தனித்தன்மையும், சிறப்பும், நல்ல கதையம்சமும் கொண்டிருந்தது.

இனி, நம்மை எல்லாம் கட்டி வைத்து சிரிக்க வைத்த அந்த 90-களின் கார்டூன்கள் குறித்து பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாம் அண்ட் ஜெர்ரி

டாம் அண்ட் ஜெர்ரி

திணை விதைப்பவன் திணை அறுப்பான். வினை விதை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, ஜெர்ரியை கொல்ல நினைக்கும் டாம் தான் அனைத்து தருணங்களிலும் தோற்றுப் போகும். இன்றளவும் பெரும் செல்வாக்கை கொண்ட டாம் அண்ட் ஜெர்ரியை யாரால் தான் மறக்க முடியும்.

பாப்பாய்

பாப்பாய்

"பாப்பாய் தி செய்லர் மேன்.... பாங்.. பாங்..!!! இந்த ட்யூனை உங்களால் மறக்க முடியுமா என்ன. கீரை உடலுக்கு வலுவானது என்று அன்றே எடுத்துரைத்த மகான் பாப்பாய்.

பவர் பஃப் கேர்ள்ஸ்

பவர் பஃப் கேர்ள்ஸ்

வீர தீர சக்திகள் கொண்டு எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் மூன்று பெண்கள்!! காற்றிலே பறந்து ப்ரூஸ் லீயை போல சண்டை புரியும் அவர்களை மறப்பது அவ்வளவு எளிதல்ல.

ஸ்கூபி டூ

ஸ்கூபி டூ

பேய்க்கு பயப்படும் நாய்! டி.ஆர் திரைப்பட பெயர் போல இருக்கிறது அல்லவா. ஸ்கூபி போல நாய் வேண்டும் அடம் பிடிக்காத குழந்தைகளே இருந்திருக்க முடியாது தொண்ணூறுகளில்.

போக்கி மான்

போக்கி மான்

வித, விதமாக எத்தனை போக்கி ஸ்டார்கள் வந்தாலும். "பிக்காச்சூ" போன்ற ஒரு செல்லமான போக்கி மானை என்றும் மறக்க இயலாது. மாலை ஒளிப்பரப்பாகும் இந்த கார்டூனை பார்த்திட பள்ளிகளில் இருந்து விழுந்தடித்து ஓடிய குழந்தைகள் எல்லாம் இருந்தனர்.

டைனி டூன்ஸ்

டைனி டூன்ஸ்

பாப்பாய்க்கு கீரை என்றால், டைனி டூன்ஸில் வரும் முயலுக்கு காரட். இது செய்யும் லூட்டிகள் அவ்வளவு பிரபலம். இந்த முயலின் அச்சடித்த டி-ஷர்ட்டுகள் அதைவிட பிரபலம்.

ஜானி ப்ராவோ

ஜானி ப்ராவோ

ஜானி ப்ராவோவின் உடல் வாகு, ஹேர் ஸ்டைல் என அனைத்தும் தனித்தன்மை கொண்டதாக இருக்கும். பெண்களை கண்டால் மயங்கி விழும், கார்ட்டூன் காதல் மன்னன் ஜானி ப்ராவோ.

ட்வீட்டி & சில்வர் ஸ்டார்

ட்வீட்டி & சில்வர் ஸ்டார்

கருப்பு பூனையின் தீராத பசி, அழகான மஞ்சள் பறவை, "பொக்கை வாய்" பாட்டி என சக்கை போடுப் போட்ட கார்ட்டூன் இது.

டெக்ஸ்டர் (Dexter)

டெக்ஸ்டர் (Dexter)

அறிவியல் அறிந்த தம்பி, லூசுத்தனமான அக்கா என்று பக்கா காமெடியாக வெளியான கார்ட்டூன் தான் டெக்ஸ்டர். டெக்ஸ்டர்க்கு என்று முகப்புத்தாகத்தில் தனி பக்கம், சமூகம் எல்லாம் வைத்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த கார்ட்டூனின் ரசிகர்கள்.

தி மாஸ்க்

தி மாஸ்க்

ஒரு அப்பாவி மனிதன், மாஸ்க்கை அணிந்துக் கொண்டால் அட்டகாசம் செய்யும் மனிதன். இது தான் மாஸ்க்கை அனைவரையும் ரசிக்க வைத்தது. அதுவும், மாஸ்க் அணிந்துக் கொண்டு வித விதமான தோற்றங்களில் தோன்றும் தி மாஸ்கை மறக்க முடியுமா என்ன!

ஸ்வாட் கேட்ஸ்

ஸ்வாட் கேட்ஸ்

அதிரி புதிரி செய்யும் இரண்டு பூனைகள். ஒன்று பாஸ், மற்றொன்று எடுபுடி. சகல வித்தைகளையும் கண்டமேனிக்கு இறக்கும் சாகச பூனைகள்!! குழந்தைகளை கவர்ந்த மற்றுமொரு மெகா ஹிட் கார்ட்டூன்.

கரேஜ் தி காவேர்ட்லி டாக் (Courage the cowardly dog)

கரேஜ் தி காவேர்ட்லி டாக் (Courage the cowardly dog)

தைரியத்திற்கு மறுவுருவம், பயத்தின் முழு உருவம் என்று பாய்ந்து, பாய்ந்து பயந்து ஓடும் ஒரு நாயை பற்றிய கதை!!

ஃப்ளின்ஸ்டோன்ஸ் (Flintstones)

ஃப்ளின்ஸ்டோன்ஸ் (Flintstones)

கால்களால் கார் ஓடும் அந்த கற்கால உடையணிந்த ஃப்ளின்ஸ்டோன்ஸ் கார்ட்டூன் உங்களுக்கு நினைவிருக்கிறதா? விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கார்டூன்கள் இவை எல்லாம். அவ்வளவு எளிதில் இதை மறக்க முடியாது.

தி ரோடு ரன்னர் ஷோ (The Road Runner)

தி ரோடு ரன்னர் ஷோ (The Road Runner)

கிட்டத்தட்ட இந்த கார்ட்டூன் முழுக்க அந்த ரோடு ரன்னரை பிடிக்க அந்த நரி செய்த எந்த தந்திர வேலைகளும் எடுபடவில்லை. எப்போதாவது ஒருமுறையாவது பிடிபட்டுவிடாதா என்று எதிர்நோக்கிய தருணங்கள் பல இருக்கின்றன. ஆனால், கடைசி வரை ரோடு ரன்னர் பிடிப்படவே இல்லை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nineties Cartoons That Attracted Almost All The People

Do you remember those nineties cartoons which attracted almost all the people? read here.
Story first published: Tuesday, April 28, 2015, 16:55 [IST]
Desktop Bottom Promotion