For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஒன்பது தகவல்கள்!!!

By Ashok CR
|

பெரும்பாலும், மரியாதையாக "மகாத்மா" (சிறந்த ஆத்மா) என்று அழைக்கப்படுபவரான மோகன்தாஸ் காந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த சுதந்திர போராட்டத்திற்கு தலைமை வகித்தவர். காந்தியின் "சத்தியாகிரகம்" அல்லது "உண்மையை வலியுறுத்துதல்" தத்துவத்திற்கு தொடர்புடைய ஒத்துழையாமை மற்றும் அமைதியான எதிர்ப்பின் அடிப்படையைக் கொண்டது அவரது அகிம்சை வழி போராட்டம்.

இருப்பினும், தன் வாழ்நாள் முழுவதும் தன் கருத்துக்களை பெருமளவில் மாற்றிக் கொண்டு புரிந்து கொள்ள முடியாத நபராக விளங்கினார். 1918 வரை ஆங்கிலேயர் ஆட்சியின் ஆர்வலராக இருந்த அவர், 1919-ல் நடந்த அம்ரித்சர் படுகொலைக்கு பின்னர் தான் முழு சுதந்திரத்திற்காக போராட துவங்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

இரத்த கறை படிந்த அந்த நிகழ்வை தொடர்ந்து, ஜெனரல் ரெஜினால்ட் டையர் ஆணைப்படி குருக்கா சிப்பாய்கள், குறைந்தது 379 இந்திய ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற போது, காந்தி கூறியதாவது, "கண்டிப்பாக இறந்தவர்கள் வீர தியாகிகள் கிடையாது. அவர்கள் வீரர்களாக இருந்திருந்தால், தங்கள் வாள்களை உறையிலிருந்து உருவியிருப்பார்கள் அல்லது குறைந்தது தங்கள் கைத்தடிகளையாவது பயன்படுத்தியிருப்பார்கள் அல்லது டையரிடம் நெஞ்சை நிமிர்த்தி வீர மரணம் அடைந்திருப்பார்கள். மாறாக இப்படி கால் தெறிக்க ஓடியிருக்க மாட்டார்கள்."

தகவல் #2

தகவல் #2

1893 முதல் 1915 வரை காந்தி தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்தார். அப்போது சிறுபான்மையினராக அங்கிருந்த இந்தியர்களின் உரிமைகளுக்காக அவர் தொடர்ச்சியான முகாம்களுக்கு தலைமை வகித்தார். அப்போது, இன சமத்துவத்திற்காக அவர் போராடவில்லை. அவருடைய கொள்கை எல்லாம் "கஃப்பிர்ஸ்" என அவர் தன் எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ள ஆப்ரிக்கர்களுக்கு சமமாக இந்தியர்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதில் தான் இருந்தது.

தகவல் #3

தகவல் #3

விரைவில் அவர் இந்தியா திரும்பியவுடன், மார்ச் 1915 ஆம் ஆண்டில் மெட்ராஸ் பார் அசோசியேஷனில் நடைபெற்ற இரவு விருந்தில், ஆங்கிலேய அரசாங்கத்திடம் இப்படி ஒரு பாராட்டு செய்தியை முன்மொழிந்தார், "ஆங்கிலேய ஆட்சியில் உள்ள சில குறிப்பிட்ட கருத்துக்களை நான் கண்டுபிடித்தேன். அவற்றின் மீது நான் காதலில் விழுந்தேன். அப்படிப்பட்ட கொள்கைகளில் ஒன்று தான் - பிரிட்டிஷ் பேரரசின் ஒவ்வொரு பொருளிலும் தமது ஆற்றல்கள் மற்றும் முயற்சிகளுக்கான சுதந்திர நோக்கம் இருக்கும்".

தகவல் #4

தகவல் #4

முதலாம் உலகப்போரின் போது காந்தி பிரிட்டனுக்கு ஆதரவை தெரிவித்து வந்தார். 1918 ஆம் ஆண்டு கடைசியில், ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் தன்னார்வத்துடன் சேர்ந்திட இந்தியர்களுக்காக அரசாங்க முகாமில் இணைந்தார்.

தகவல் #5

தகவல் #5

1918 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், காந்தி கூறியதாவது, "ஆங்கிலேயர்கள் இல்லாமல் இந்தியா ஒன்றுமே இல்லாதது. ஆங்கிலேயர்கள் ஜெயிக்கவில்லை என்றால் யாரிடம் போய் நாம் சம கூட்டான்மையை கோருவது? அதற்காக வெற்றி பெற்ற ஜெர்மானியர்கள், துருக்கியர்கள் அல்லது ஆப்கானியர்களிடம் நாம் செல்ல முடியுமா? சுதந்திரத்தை விரும்பும் ஆங்கிலேயர்களுக்காக நாம் நம் உயிரை தருவதை அவர்கள் கண்டால் நாம் அதற்கான பயனைப் பெறலாம்."

தகவல் #6

தகவல் #6

அம்ரித்சர் படுகொலையை கண்ட பிறகு, காந்தியின் கண்ணோட்டம் மாறியது. இந்தியா முழு சுதந்திரத்தை;g பெற வேண்டும் என அவர் முடிவெடுத்தார். 1919-22 வருடங்களில் அவர் மிகப்பெரிய போராட்டங்களுக்கு தலைமை வகித்தார். 1930 ஆம் ஆண்டு தண்டி யாத்திரைக்கு தலைமை வகித்தார். இதனால் 1931 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுய அரசாங்க அந்தஸ்தை தருவதற்கான வாக்குறுதியை கொடுக்க வேண்டிய நிலை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. இருந்த போதிலும் முழு சுதந்திரத்தை அளிக்க அவர்கள் சம்மதிக்கவில்லை.

தகவல் #7

தகவல் #7

ஹிட்லர் மீது தெளிவற்ற மனப்பான்மையை காந்தி கொண்டிருந்தார். "ஆதிக்கம்" மற்றும் "வெற்றி"-க்காக அவருக்கு கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் நாஜி ஜெர்மனியுடன் அமைதியான தீர்வை காண பிரிட்டன் நாட்டிடம் வலியுறுத்தினார்.

தகவல் #8

தகவல் #8

அமைதியைக் கோரி காந்தி ஹிட்லருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதினர். டிசம்பர் 24, 1940 ஆம் ஆண்டில் எழுதிய அக்கடிதத்தில் அவரை "அன்பு நண்பா" என குறிப்பிட்டிருந்தார். "உங்கள் வீரம் மற்றும் தந்தை நாட்டின் மீதான பக்தியின் மீது எங்களுக்கு எந்த ஒரு ஐயமும் இல்லை. உங்கள் எதிராளிகள் கூறுவதை போல் உங்களை நாங்கள் அசுரனாகவும் நம்பவில்லை.," என காந்தி எழுதியிருந்தார். "ஆனால் சந்தேகமே இல்லாமல், குறிப்பாக என்னை போல் உலகளாவிய நேசத்தை நம்பும் நபர்களுக்கு, உங்களின் பல செயல்கள் அசுரத்தனமாகவும், மனித கண்ணியத்திற்கு ஏற்றதாக இல்லாததாகவும் உள்ளது என்பதற்கு உங்களின் சொந்த எழுத்துக்கள் மற்றும் பிரகடனங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் ஆமோதிப்பவர்களின் எழுத்துக்கள் மற்றும் பிரகடனங்களே சான்றாகும்."

தகவல் #9

தகவல் #9

ஆங்கிலேய போரை எதிர்க்கும் முயற்சியில் காந்தி, 1942 ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை தொடங்கினார். இருப்பினும், 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த போது, இந்தியாவின் பிரிவினையோடு அது ஒத்துப்போய், பாகிஸ்தான் பிறக்க நேர்ந்தது. இந்த நிகழ்வை கொண்டாட மறுத்த காந்தி, வழிபாடு மற்றும் விரதம் இருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Facts You May Not Know About Mahatma Gandhi

Here are some of the facts you may not know about Mahatma Gandhi. Take a look...
Story first published: Thursday, October 1, 2015, 16:13 [IST]
Desktop Bottom Promotion