For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது உடலின் கட்டமைப்பு பற்றிய இன்றியமையாத அதிசயத்தக்க தகவல்கள்!!!

|

இவ்வுலகிலேயே இன்று வரை முழுதாய் யாராலும் அறிந்துக் கொள்ள முடியாத ஓர் மெக்கானிசம் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது, அது தான் மனித உடலின் கட்டமைப்பு. ஓர் விந்தணு, ஓர் கரு முட்டையோடு இணைந்து எப்படி இவ்வாறு உருவாகிறது என்ற கேள்விக்கான விடையை கடந்த நூற்றாண்டில் இருந்து மிக கடினமாக தேடி, தேடி, ஏறத்தாழ விடையை நெருங்கிவிட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.

நமது உடலின் கட்டமைப்பு பற்றய பல தகவல்கள் நமது புருவத்தை வில் போல உயர்த்த கூடியது ஆகும். அணுக்களின் கூட்டமைப்பால் உருவான இந்த உடலை மீண்டும் தனித்தனி அணுக்களாக பிரித்து காற்றோடு, காற்றாக கலக்க முடியும்.

ஆச்சரியத்தையே ஆச்சரியப்பட வைக்கும் அளவு நமது உடல் திகழ்கிறது. இனி, நமது உடலின் கட்டமைப்பு பற்றிய இன்றியமையாத அதிசயத்தக்க தகவல்கள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
50,000

50,000

நமது மூக்கினால் 50,000 வகையான வாசனைகளை நினைவில் கொள்ள முடியும்.

உடலில் உள்ள அணுக்களின் கூட்டமைப்பு

உடலில் உள்ள அணுக்களின் கூட்டமைப்பு

ஏறத்தாழ ஓர் முதிர்ச்சியான மனிதனின் உடல் 7,000,000,000,000,000,000,000,000,000 அணுக்களால் உருவாகியிருக்கிறதாம்.

60 எலும்புகள்

60 எலும்புகள்

குழந்தையின் உடலில், வளர்ந்த நபர்களை விட 60 எலும்புகள் அதிகமாக இருக்கும். வளர, வளர சில எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக இனனைந்து விடுகிறது.

ஒரு லட்சம் மைல்

ஒரு லட்சம் மைல்

ஓர் மனித உடலில் இருக்கும் இரத்த நாளங்களை இணைத்தால் அது ஒரு லட்சம் மைல் தூரம் இருக்குமாம்.

எச்சில்

எச்சில்

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 23.65 லிட்டர் எச்சிலை சுரக்கிறான். இது ஓர் நீச்சல் குளத்தை நிரப்புவதற்கு போதுமான நீர் அளவு ஆகும்.

ஆணியை உருவாக்கலாம்

ஆணியை உருவாக்கலாம்

நமது உடலில் இருக்கும் இரும்பின் அளவை கொண்டு, மூன்று இன்ச் நீளமுள்ள ஓர் ஆணியை உருவாக்கலாம்.

வியர்வைக்கு வாடை கிடையாது

வியர்வைக்கு வாடை கிடையாது

உண்மையில் வியர்வை வாசனை அற்றது. அது உடல் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களோடு இணையும் போது தான் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது.

 மூக்கும், காதும்

மூக்கும், காதும்

ஓர் மனிதனின் உடலில் கடைசி வரை வளர்ந்துக்கொண்டே இருக்கும் உடல் பாகம் மூக்கும், காதும் தான்.

இரும்பை விட உறுதியானது

இரும்பை விட உறுதியானது

மனிதர்களின் எலும்பு இரும்பை விட உறுதியானது, வலிமையானது.

10 மில்லியன்

10 மில்லியன்

மனிதனின் கண்கள் 10 மில்லியன் வண்ணங்களை பிரித்து காணும் திறன் கொண்டது.

கண்ணும் கேமராவும்

கண்ணும் கேமராவும்

ஒருவேளை மனித கண்கள் டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் திறன் 576 மெகா பிக்சல் திறன் கொண்டிருக்கும்.

பாக்டீர்யாவின் எடை

பாக்டீர்யாவின் எடை

மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் ஒட்டுமொத எடை ஏறத்தாழ 1.82 கிலோ வரை இருக்கும்.

சளியின் அளவு

சளியின் அளவு

ஓர் நாளுக்கு ஒரு லிட்டர் அளவு வரை சளியை உருவாக்குகிறதாம் மனித உடல்.

புற்றுநோய் வகைகள்

புற்றுநோய் வகைகள்

ஏறத்தாழ நூறு வகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் தாக்கம் ஏற்படலாம்.

எலும்பில் தண்ணீர் அளவு

எலும்பில் தண்ணீர் அளவு

எலும்பின் 31% தண்ணீரின் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mind blowing Facts About Our Body

Do you know about the mind blowing facts about our body? read here.
Story first published: Saturday, August 29, 2015, 14:22 [IST]
Desktop Bottom Promotion