For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் உள்ள உண்மை: ஆஞ்சநேயரும் பீமனும் சகோதரர்களாம்!

By Ashok CR
|

இந்திர தேவனிடம் இருந்து இறைதன்மையுள்ள ஆயுதங்களை பெறுவதற்காக இமயமலைக்கு சென்றிருந்தான் அர்ஜுனன். ஏனெனில் போர் என வந்துவிட்டால் பீஷ்மர், துரோணா, கிருபா, அஸ்வத்தாமா, கர்ணன் என வெல்ல முடியாத பல வீரர்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியில் இறங்கியிருந்தான். இதற்கு கூடுதல் சக்தியைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

அர்ஜுனன் இல்லாமல் மற்ற நான்கு பாண்டவர்களுக்கும், திரௌபதிக்கும் சந்தோஷம் என்பதே இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் மாற்றான் காண, அமைதியான இடத்தை தேடி அவர்கள் சென்றார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகந்திகா மலரின் நறுமணம்

சுகந்திகா மலரின் நறுமணம்

திரௌபதியும், பாண்டவர்களுள் நால்வரும் நாராயணஸ்ராமா காட்டிற்கு வந்தனர். அங்கேயே ஓய்வெடுத்து, சில காலம் தங்கவும் முடிவெடுத்தனர். ஒரு நாள், வட கிழக்கு தென்றலுடன் வந்த ஒரு மலரின் நறுமணத்தை திரௌபதி முகர்ந்தார். அந்த மலரின் நறுமணத்தால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். சுகந்திகா என்னும் அந்த மலரை தான் அடைய வேண்டும் என அவர் ஆழமாக ஆசைப்பட்டார்.

பீமனிடம் மலரைக் கேட்ட திரௌபதி

பீமனிடம் மலரைக் கேட்ட திரௌபதி

அந்த மலரை கொண்டு வரச்சொல்லி பீமனிடம் அவர் கேட்டார். இதனை மிகவும் வற்புறுத்தினர் கேட்டுக் கொண்டார். இவருடைய இந்த குறைந்தபட்ச ஆசையை நிறைவேற்ற பீமனும் விரும்பினான். நறுமணம் வந்த திசையை நோக்கி பீமன் சென்றான்.

கரடுமுரடாக இருந்த பாதை

கரடுமுரடாக இருந்த பாதை

காட்டின் வழியாக செல்ல வேண்டிய பாதை சுலபமாக இல்லை. ஆகவே பீமன் தன் பலத்தால் மரங்களை உடைத்தவாறு சென்றான். பீமனின் அந்த செயலால் காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் பயந்தன. எனவே ஆஞ்சநேயர் பீமனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

பாதையை மறைத்த குரங்கு

பாதையை மறைத்த குரங்கு

அப்போது ஒரு மலையின் அடிவாரத்தில், பாதையை மறைத்துக் கொண்டு ஒரு மிகப்பெரிய குரங்கு அமர்ந்திருப்பதை அவன் பார்த்தான். எழுந்து தனக்கு பாதை தருமாறு அந்த குரங்கை பார்த்து கேட்டான் பீமன். ஆனால் அவன் சொல்வதை கேட்கும் மனநிலையில் இல்லை அந்த குரங்கு. "நான் வயதான குரங்கு. உடலில் பளுவும் இல்லை. என்னை தாண்டி நீ செல்லலாம்", என குரங்கு பீமனிடம் கூறியது.

குரங்கிடம் கோபமாய் பேசிய பீமன்

குரங்கிடம் கோபமாய் பேசிய பீமன்

துடுக்குத்தனமான குரங்கின் இந்த பேச்சை கேட்ட பீமன் மீண்டும் அதனை நகர்ந்து கொள்ளுமாறு கேட்டான். "ஏய் கிழட்டு குரங்கே, நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறாய். குரு வம்சத்தை சேர்ந்த சத்ரியன் நான். குந்தி மற்றும் வாயு தேவனின் மகன் நான். நான் தான் பீமன், அனுமானின் புகழ் பெற்ற சகோதரன். அதனால் நீ என்னை பகைத்துக் கொண்டால், என்னுடைய கோபத்திற்கு நீ ஆளாவாய். என் நேரத்தை வீணடிக்காமல் ஒழுங்கு மரியாதையாக எழுந்து எனக்கு வழி கொடு." என பீமன் அந்த குரங்கிடம் கூறினான்.

அனுமன் யார் என்று கேட்ட குரங்கு

அனுமன் யார் என்று கேட்ட குரங்கு

"உனக்கு அவ்வளவு அவசரம் என்றால், என் வாலை நகர்த்தி விட்டு செல்லலாம்" என அந்த குரங்கு கூறியது. பீமனின் மிரட்டலுக்கு அந்த குரங்கு அசைந்து கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, "அனுமான் யார்? அப்படி என்ன அவரிடம் சிறப்பு உள்ளது என கூறு. உனக்கு அவர் என்ன செய்தார்" என கேட்டது.

அனுமனைப் பற்றி சொன்ன பீமன்

அனுமனைப் பற்றி சொன்ன பீமன்

அதற்கு பீமன், "எப்படி இப்படி முட்டாளாய் இருக்கிறாய்? சீதா தேவியை கண்டுபிடிக்க இலங்கையை அடைய 800 மைல் கடலை கடந்த பலசாலியான அனுமானை பற்றி நீ கேட்டதில்லையா? ராமரின் மனைவி தான் சீதா தேவி. உனக்கு அதுவும் தெரியாது என நினைக்கிறேன்" என்றார். குரங்கு சிரிக்க மட்டுமே செய்தது.

வாலை நகர்த்த முயற்சித்த பீமன்

வாலை நகர்த்த முயற்சித்த பீமன்

எந்த வழியும் கிடைக்காத பீமன் குரங்கின் வாலை இழுக்க முயன்றார். ஆனால் அவரால் ஒரு பொட்டு கூட நகர்த்த முடியவில்லை. தன்னாலான முழு பலத்தை உபயோகித்த போதும் அவனால் முடியவில்லை.

குரங்கிடம் தோல்வியை ஒப்புக் கொண்ட பீமன்

குரங்கிடம் தோல்வியை ஒப்புக் கொண்ட பீமன்

வியர்க்க விறுவிறுத்து போன பீமன், தன் விடா முயற்சியை செலுத்தினாலும் அவனின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அதனால் தன் பலத்தை காட்ட குரங்கிடம் சவாலிட முடியாமல் தவித்தான். அவமானமடைந்த பீமன் "நீ சாதாரண குரங்கு அல்ல. நீ யாரென்று தயவு செய்து கூறு. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன், உன் முன் மண்டியிடுகிறேன்." என கூறினான்.

அனுமனாக மாறிய குரங்கு

அனுமனாக மாறிய குரங்கு

உடனே அனுமன், "பீமா, சற்று நேரத்திற்கு முன் கூறினாயே அதே அனுமான் தான் நான். நான் தான் உன் சகோதரன். நீ போகும் பாதையில் ஆபத்து காத்திருக்கிறது. இது ஆண்டவர்களுக்கான பாதையாகும். ஆண்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. ஆதனால் உன்னை எச்சரிக்கவே நான் வந்தேன். சுகந்திகா மலரை பறிக்க தான் நீ வந்திருக்கிறாய் என எனக்கு தெரியும். இந்த மலரும் பூக்கும் குளத்தை நான் உனக்கு காண்பிக்கிறேன். உனக்கு வேண்டிய பூக்களை எடுத்து கொண்டு செல்." என கூறினார்.

அனுமனின் சுயரூபத்தைக் கண்ட பீமன்

அனுமனின் சுயரூபத்தைக் கண்ட பீமன்

சந்தோஷமடைந்த பீமன் அனுமனை வணங்கி, 800 மைல் நீளமுள்ள கடலை கடக்க, அனுமன் எடுத்த உருவத்தை காண்பிக்க கேட்டுக் கொண்டார். கண்ணில் தெரியும் அளவிற்கு ஒரு மலையின் அளவை போல் தன் உருவத்தை பெரிதாக்கினார் அனுமன். தன் உருவம் கூசும் அளவிற்கு வெண்மையாக இருந்தது. அதனால் பீமன் தன் கண்களை மூடிக்கொண்டான்.

பீமனுக்கு ஆசி வழங்கிய அனுமன்

பீமனுக்கு ஆசி வழங்கிய அனுமன்

தன் சுய ரூபத்தை அடைந்த அனுமன் பீமனுக்கு ஆசி வழங்கினார். "போர் களத்தில் நீ சிங்கமாக உறுமும் போது என் குரலும் சேர்ந்து கொள்ளும். அதனால் உன் எதிராளிகளின் இதயம் படபடக்கும். நான் அர்ஜுனனின் ரதத்தில் உள்ள கொடியில் இருப்பேன். நீ ஜெயம் கொள்வாய்" என ஹனுமான் உறுதி அளித்தார். அனுமானின் ஆசியைப் பெற்ற பீமனின் பலம் அதிகரித்தது. தன் சகோதரனான பீமனின் அகங்காரத்தை நீக்கி, எதிரியுடன் சண்டையிடும் போது கூடுதல் பலத்தைப் பெற வேண்டும் என அவர் நினைத்தார்.

திரௌபதியிடம் மலரைக் கொடுத்த பீமன்

திரௌபதியிடம் மலரைக் கொடுத்த பீமன்

ஆசி வழங்கிய பிறகு பீமனை விட்டு சென்றார் அனுமார். அனுமானின் அறிவுரையைப் பின்பற்றிய பீமன் பல சுகந்திகா மலர்களை குளத்தில் இருந்து பறித்தான். பின் அவனின் வருகைகாக ஆவலுடன் காத்திருந்த திரௌபதியிடம் அதனை ஒப்படைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahabharat And Ramayana Truth: Lord Hanuman And Bhim Were Brothers!

Arjuna had gone to the Himalayas in quest of Divine weapons from Indra. In case of war he Would have to face invincible warriors like Bhishma, Drona, Kripa, Aswatthama, KarnaAnd many others. For this it was necessary to Acquire more power.
Desktop Bottom Promotion