ஐ-போனை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By: John
Subscribe to Boldsky

ஆப்பிள் நிறுவனத்தின் உயிர்நாடி என்றால் அது ஐ-போன் என்று கூறினால் மிகையாகாது. ஐ-போன், ஐ-பாட், ஐ- வாட்ச் என இவர்களது ஐ- பொருட்கள் அனைத்தும் செயல்திறனுக்கும், தரத்திற்கும் பெயர் போனது.

மற்றும் இந்தியாவில் இது செல்வாக்கையும் குறிக்கும் ஓர் பொருளாக விளங்கி வருகிறது. யார் எல்லாம் ஐ- போன் மற்றும், ஐ- பொருட்களை பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் செல்வாக்கும், செல்வமும் அதிகம் உடையவர்கள் என்பது இந்தியரின் மனப்பான்மை.

முதல் ஐ-போன் ஸ்மார்ட் போன் கிடையாது என்பதில் இருந்து, நீங்கள் ஐ-போனை பற்றி கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

முதல் ஐ-போன்

ஆப்பிள் நிறுவனம் ஐ-போனை வெளியிடுவதற்கு 22 நாட்கள் முன்னர் சிஸ்கோ என்னும் நிறுவனம் இதே பெயரில் ஓர் மொபைல் போனை வெளியிட்டது. அதில், கணினியின் உதவி இன்றி ஸ்கைப் கால் பேசும் வசதி இருந்தது. பின்னர், ஆப்பிள் மற்றும் சிஸ்கோ ஆகிற இரு நிறுவனங்களும் இந்த பெயருக்காக நீதிமன்ற வாசல் ஏறியது வேறு கதை.

1983ஆம் ஆண்டில்

ஐ-போனின் செயல்முறை எண்ணம், கடந்த 1983ஆம் ஆண்டே பிறந்துவிட்டது. ஆனால், அதை அப்போது லேன்ட்-லைன் போனாக வடிவமைத்து பார்த்தனர். பின்னர் இதிலிருந்து, ஐ-போன்- ஐ-பேட் போன்றவற்றை உருவாக்க யோசனைகள் முளைத்தன.

3.56 மில்லியன் டாலர்கள்

1991ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஐ-போனின் செயல்பாடு, திறன், தரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அதன் விலை 3.56 மில்லியன் டாலர் வந்திருக்கும்.

Purple - ஊதா

முதன் முதலில் ஐ-போன் திட்டம் உறவான போது, அந்த திட்டத்திற்கு "Purple Dorm"என்று தான் பெயர் வைத்தனராம்.

பிரான்க் கால்

ஐ- போனை வெளியிடும் பொது அதிலிருந்து செய்யப்பட்ட முதல் அழைப்பே பிரான்க் கால் தான் செய்தாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

நேரம் 9:42

ஐ-போன், ஐ-பாட், ஐ-பேட் என ஷோ ரூமில் இருக்கும் அணைத்து மாதிரிகளிலும் நேரம் 9:42 என்று தான் இருக்கும், ஏனெனில், அந்நேரத்தில் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் அதை ஐ-போனை வெளியிட்டார்.

சிறி -Siri

ஐ-போனில் இருக்கும் சிறி எனும் மென்பொருள் செயிலி (App), நீங்கள் கேட்கும் அனைத்தையும் இரண்டு ஆண்டுகள் வரை நினைவு வைத்துக்கொள்ளும் திறன் கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Iphone

Do you know about these lesser known facts about the Mr.Perfect Device iphone? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter