For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை சூழ்ந்திருக்கும் மர்மங்களும்.. வரலாற்று குறிப்புகளும்..

|

நாம் அறிந்தது எல்லாம், இந்தியா அடிமைப்பட்டு இருக்கும் போது ஆங்கிலேயர்கள் நமது வரலாற்று பொக்கிஷமாக கருதப்பட்ட கோஹினூர் வைரத்தை அபகரித்து சென்றுவிட்டனர் என்ற தகவல் மட்டும் தான். ஆனால், கோஹினூர் வைரத்தின் பின்னணியில் இருந்த மர்மங்களும், பெரும் வரலாறு பற்றியும் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலே போய்விட்டது.

கோஹினூர் வைரத்தை பல முறை திரும்ப கேட்டும் ஆங்கிலேயர்கள் தர முடியாது என்ற பதிலையே பல காலமாக கூறி வருகிறார்கள். இடையில் பாகிஸ்தான் கூட ஒருமுறை உரிமை கோரியது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, கோஹினூர் வைரத்தின் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் மற்றும் வரலாற்று தகவல்கள் குறித்து பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பிடம்

பிறப்பிடம்

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி தான் கோஹினூர் பிறந்த இடம்.

பெயர் வரலாறு

பெயர் வரலாறு

கோஹினூர் என்ற பெயருக்கு ஓர் பொருள் இருக்கிறது, கோஹினூர் என்றால் மலைகளில் இருந்து வரும் ஒளி என்று பொருள். அதாவது மலையின் ஒளி எனப்படுகிறது. அது போன்ற பெரும் வெளிச்சத்தை தரக்கூடிய தன்மையுடைய வைரம் என்பதால் இதற்கு கோஹினூர் வைரம் என்ற பெயர் வந்தது.

பலரது கை மாறிய கோஹினூர்

பலரது கை மாறிய கோஹினூர்

கோஹினூர் வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது. இந்த சண்டைகளுக்கு இடையில் இது சிறிது பாழாகிப் போனது என்று கூறப்படுகிறது.

தொடரும் மர்மம்

தொடரும் மர்மம்

கோஹினூர் வைரத்தை வைத்திருக்கும் அரசர்கள் அவர்களது மகுடத்தையும் ஆட்சியையும் இழப்பார்கள் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் சாபக் கேடு. அதே போல, வரலாற்றில் கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர்.

ஆண்களை தொடரும் சாபம்

ஆண்களை தொடரும் சாபம்

இந்த கோஹினூர் வைரத்தின் சாபம் எனப்படும் மர்மம் ஆண்களை மட்டுமே பின் தொடர்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடைசியில், இந்த கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பெண்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் தான், இப்பது விக்டோரியா, எலிசபெத் போன்ற ராணிகளின் கைமாறி வருகிறது கோஹினூர் வைரம்.

விக்டோரயாவை சேர்ந்த விதம்

விக்டோரயாவை சேர்ந்த விதம்

கடந்த 1877ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட போது, கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரசின் ஆபரணங்களின் ஓர் பகுதியாக மாறியது.

5000 வருடம் பழமையானது

5000 வருடம் பழமையானது

கோஹினூர் வைரமானது ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான வைரம் என்று கூறப்படுகிறது.

பாபர் கைக்கு வந்த கோஹினூர்

பாபர் கைக்கு வந்த கோஹினூர்

டெல்லி சுல்தான் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து கை மாறி, கை மாறி, இறுதியாக 1526 ஆம் ஆண்டில் முதல் முகலாயப் பேரரசர் பாபர் கைகளுக்கு வந்தது கோஹினூர் வைரம் என்று வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

விக்கிரமாதித்திய சிக்கிந்தர்

விக்கிரமாதித்திய சிக்கிந்தர்

தோமராக்களின் இறுதி அரசனான விக்ரமாதித்யா சிக்கந்தர் லோடியால் தோற்கடிக்கப்பட்டார், இவர் டெல்லி சுல்த்தான் ஆவார் மற்றும் டெல்லியில் வசித்த டெல்லி சுல்த்தானின் ஓய்வுரிமை பெற்றவரானார். லோடியின் வீழ்ச்சியில் முகலாயர்களின் பதிலாக்கத்தால், அவரது வீடு முகலாயர்களால் சூறையாடப்பட்டது மற்றும் இளவரசர் ஹூமாயூன் குறுக்கிட்டு சமரசம் செய்து அவரது சொத்தை மீட்டு அவரை டெல்லியை விட்டு வெளியேற்றி சித்தவூரில் உள்ள மேவாருக்கு நாடு கடத்தவும் அனுமதித்தார்.

ஹூமாயூன்

ஹூமாயூன்

ஹூமாயூனின் பண்பினால், இளவரசர் விக்ரமாதித்யாவிற்கு சொந்தமான கோஹினூர் போன்ற வைரங்களில் ஒன்று ஹூமாயூனுக்கு அளிக்கப்பட்டது. ஹூமாயூன் மிகவும் மோசமான அதிர்ஷ்டத்தை தனது வாழ்க்கை முழுவதும் அனுபவித்தார். ஷேர் ஷா சூரி ஹூமாயூனை தோற்கடித்தார், அவர் பீரங்கி வெடிவிபத்தில் உயிரிழந்தார்.

ஜலால் கான்

ஜலால் கான்

ஹூமாயூனின் மகன் ஜலால் கான், அவரது மந்திரியால் சட்டத்திற்குப் புறம்பாக நடந்ததால் அவரது மைத்துனரால் கொலைசெய்யப்பட்டார், அவர் வெற்றியின் அடியால் துரதிர்ஷடவசமாக கண்களில் தாக்கப்பட்டதால் தனது இந்தியாவின் பேரரசர் உரிமையை இழந்தார். ஹூமாயூனின் மகன் அக்பர் அந்த வைரத்தை தன்னிடம் வைத்ததில்லை.

 ஷாஜஹான்

ஷாஜஹான்

பின்னர் ஷாஜகான் மட்டுமே அதை அவரது கருவூலத்திலிருந்து வெளியே எடுத்தார். அக்பரின் பேரனான ஷாஜகான் அவரது மகன் ஔரங்கசீப் மூலமாக கவிழ்க்கப்பட்டார், அவர் அவரது மூன்று சகோதரர்களைத் திட்டமிட்டு கொலை செய்தார்.

மிகப்பெரிய கண்காட்சியில் கோஹினூர் வைரம்

மிகப்பெரிய கண்காட்சியில் கோஹினூர் வைரம்

1851 ஆம் ஆண்டில் லண்டனின் ஹைட் பார்க்கில் கிரேட் எக்ஸிபிஷன் நிகழ்ந்த போது பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு அந்த கோஹினூர் வைரத்தைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kohinoor Diamond Mystery And Historical Facts

Do anyone know about the mysterious story about Kohinoor Diamond and its historical facts? Take a look.
Desktop Bottom Promotion