For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இடது மற்றும் வலது மூளையைப் பற்றிய வியக்க வைக்கும் குணாதிசயங்கள்!!!

By John
|

அனைவரின் எண்ணங்களும், செயல்பாடுகளும், குணாதிசயங்களும் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முறைகளும் வேறுப்பட்டு இருக்கும். என்னதான் ஒரே மாதிரியான உணவு உட்கொண்டாலும், ஒரே சூழ்நிலைகளில் வாழ்ந்து வந்தாலும் கூட நம் அனைவரது மூளையும் வெவ்வேறு மாதிரி தான் செயல்படும்.

மனித மூளையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

இதற்கு காரணம் நமது வலது மற்றும் இடது மூளை தானாம். பொதுவாக இடது மூளை திட்டமிட்டு செயல்படும் வகையிலும், வலது மூளை கற்பனைகள், உணர்வுகள் சார்ந்து செயல்படும் வகையிலும் இருக்கும். இன்னும் தெளிவாக கூறவேண்டும் எனில், வலது மூளை கலை சார்ந்து வேலைகளிலும், இடது மூளை தொழில் சார்ந்த வேலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும்.

மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா - ஆச்சரியமான உண்மைகள்!!!

இனி, இந்த இடது மற்றும் வலது மூளை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள் குறித்து காணலாம்....

இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் - ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடது மூளை - திட்டமிடுதல்

இடது மூளை - திட்டமிடுதல்

இடது மூளை எப்பொதும் திட்டமிட்டு தான் வேலைகளில் ஈடுபடும். எந்த ஒரு விஷயமும் அது ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தும் முறையை அது பின்பற்றும். எடுத்துக்காட்டாக: நீங்கள் சமைக்கும் முறையில் இருந்து, துவைக்கும் முறை வரை, உடை உடுத்துதலில் இருந்து, வேலைக்கு பயணம் மேற்கொள்ளுவது வரை.

வலது மூளை - திட்டமிடுதல்

வலது மூளை - திட்டமிடுதல்

வலது மூளை, அவ்வளவாக திட்டமிடாது. ஆனால், வேலையில் இறங்கிவிட்டால் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிடும். எடுத்துக்காட்டாக, கவிஞர்கள் எல்லா நேரமும் பேனாவும் கையுமாக திரியமாட்டார்கள். ஆனால், எழுத ஆரம்பித்துவிட்டால் எழுதி முடிக்காமல் எழுந்திரிக்க மாட்டார்கள். இது, அனைத்து கலை துறைகளுக்கும் பொருந்தும்.

அறிவுத்திறன்

அறிவுத்திறன்

இடது மூளை தான் கற்றறிந்ததை வைத்து இயங்கும். அதற்கான கோட்பாடுகளுக்குள் தான் இருக்கும். கூண்டு கிளியை போல. ஒருவேளை அதன் கோட்பாடுகளுக்குள் மறுப்பு இருந்தால் அதில் ஈடுபடாது. கணக்கு, இயற்பியல், வேதியல் போல.

அறிவுத்திறன் - வலது மூளை

அறிவுத்திறன் - வலது மூளை

வலது மூளை, உணர்வுகள் சார்ந்த இயங்குவது. உணர்வுகள் இன்றி வலது மூளை இயங்குவது பெட்ரோல் இன்றி வாகனம் செயல்படுவதை போல, சாத்தியமற்றது. பாடல், கதை, ஓவியம், நாட்டியம் என எதுவாக இருந்தாலும் அதனுள் உணர்வு இருக்கும்.

தீர்வுக் காணும் முறை - இடது மூளை

தீர்வுக் காணும் முறை - இடது மூளை

இடது மூளை எப்போதும் துல்லியமாக செயல்பட கூடியது. ஓர் பிரச்சனை என்றால், அதை அறிந்து, யோசித்து, என்ன செய்தால், என்ன நடக்கும், அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என ஆயிரம் முறை யோசித்து இயங்கும்.

தீர்வுக் காணும் முறை - வலது மூளை

தீர்வுக் காணும் முறை - வலது மூளை

ஆனால் வலது மூளை இதற்கு எதிர்மாறாக, தனது உள்ளுணர்வு எதை சொல்கிறதோ அதை வைத்து தான் முடிவுகள் எடுக்கும். உணர்வுகள் காட்டும் வழியில் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்.

உலகம் - இடது மூளை

உலகம் - இடது மூளை

இடது மூளை எப்பொதும் யதார்த்தமான உலகில் வாழ்வது. நிதர்சனம் என்னவோ அதை மட்டுமே எண்ணி, ஓர் வட்டத்திற்குள் வாழும் முறையினை பின் தொடரும் குணமுடையது.

உலகம் - வலது மூளை

உலகம் - வலது மூளை

வலது மூளை எப்போதும் கற்பனை உலகில் பயணிக்கும் திறனுடையது. இவர்களது உலகம் மிகவும் வித்தியாசமானது. தெளிவாக கூற வேண்டுமானால், வலது மூளை செல்வராகவன், இடது மூளை மணி ரத்தினம்.

 பயிற்றுவிக்கும் முறை - இடது மூளை

பயிற்றுவிக்கும் முறை - இடது மூளை

இடது மூளையை சார்ந்திருக்கும் ஆசிரியர்கள், எப்போதும் தியரிகள் சார்ந்து இருப்பார்கள். கலந்தாய்வு, மற்றும் வீட்டு பாட வேலைகள் கொடுப்பார்கள்.

பயிற்றுவிக்கும் முறை - வலது மூளை

பயிற்றுவிக்கும் முறை - வலது மூளை

வலது மூளையை சார்ந்து இயங்கும் ஆசிரியர்கள், எதையும் செயல்முறையாக காண்பிப்பார்கள். இவர்கள் நான்கு சுவர்களை தாண்டி கற்பிக்கும் முறையை கையாளுபவர்கள்.

பயிற்சி செய்யும் முறை - இடது மூளை

பயிற்சி செய்யும் முறை - இடது மூளை

இடது மூளையை சார்ந்து இருக்கும் மாணவர்கள், ஆசிரியர் என்ன கூறினாரோ அதை அவ்வாறே பின்பற்றி செய்து முடிக்கும் திறன் கொண்டிருப்பார்கள்.

பயிற்சி செய்யும் முறை - வலது மூளை

பயிற்சி செய்யும் முறை - வலது மூளை

வலது மூளையை சார்ந்து இருப்பவர்கள், பலருடன் ஆலோசித்து, பயிற்சியை எப்படி புதுமையாக செய்ய முடியும், அவ்வாறு செய்தால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என யோசிப்பவர்களாக இருப்பார்கள்.

 செயல்படும் முறை - இடது மூளை

செயல்படும் முறை - இடது மூளை

இடது மூளையை சார்ந்து இருப்பவர்கள் சொல் புத்தியை போல, என்ன கூறப்பட்டதோ அதை வைத்து தான் செயல்படுவார்கள். கிட்டத்தட்ட கணினியை போல, அவர்கள் படித்த, சேகரித்து விஷயங்களை சார்ந்து தான் அவர்களது செயல்பாடுகள் இருக்கும்.

செயல்படும் முறை - வலது மூளை

செயல்படும் முறை - வலது மூளை

வலது மூளையை சார்ந்து இருப்பவர்கள், சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் அதில் புதுமையை கையாள விரும்புவர்கள். இவர்களது செயல்கள் சில கிறுக்குத்தனமாக கூட அமையலாம். ஆனால், வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts Left Brain Vs Right Brain

Do you know about the interesting facts and difference between your left and right brain? read here.
Desktop Bottom Promotion