For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்!!!

|

இந்தியா, உலகின் பழமையான பாரம்பரியம் கொண்ட நாடு. நம் நாட்டு மன்னர்கள் அலெக்ஸாண்டருக்கு முன்னே கடல் கடந்து போரிட்டு பிற நாடுகளை வென்று அசத்தியவர்கள். அறிவியலை அக்கு வேறு, ஆணி வேறாய் பிரித்து மேய்ந்தவர்கள் நம்மவர்கள்.

களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள்!!!

உலகிலேயே பழமையான பல்கலைகழகம் நம் நாட்டில் தான் இருக்கிறது. நிலாவைப் பற்றி நாலு வரி பாடலில் நம்மவர்கள் பாடி சென்றதை, நானூறு ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர் உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!

செல்வமும், வீரமும் விளைந்திருந்த நமது நாட்டில் சாதனைகள் பல நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் கூட உலகே ஆச்சரியம் படும் அளவு இந்தியாவில் பல விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி தான் இனி காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1000 வகை மாம்பழங்கள்

1000 வகை மாம்பழங்கள்

சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில் 1000 வகையான மாம்பழ வகைகள் இருக்கின்றன. வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடைப்பதும் இல்லை. விளைவிக்கப்படுவதும் இல்லை.

6 கால நிலைகள்

6 கால நிலைகள்

கோடை பருவமழை, கோடை, குளிர் பருவமழை, குளிர்காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகின்றன.

அதிக மசூதிகள்

அதிக மசூதிகள்

இந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான். உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சோம்நாத் கோவில்

சோம்நாத் கோவில்

சோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடையே எந்த நிலப்பரப்பும் கிடையாது.

உலகின் முதல் பல்கலைகழகம்

உலகின் முதல் பல்கலைகழகம்

பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலைகழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 60வது பாடப் பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் கோவில்

இராமேஸ்வரம் கோவில்

இராமேஸ்வரம் கோவிலில் உள்ள நடைப்பாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைப்பாதை ஆகும். 4000 அடி நீளம் கொண்ட இந்த நடைப்பாதையின் இருப்புரங்களிலும் 985 தூண்கள் இருக்கின்றன.

முதல் கண் அறுவைசிகிச்சை

முதல் கண் அறுவைசிகிச்சை

கண் மாற்று அறுவைசிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும்.

அரபிக் எண்கள்

அரபிக் எண்கள்

அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான்.

மருத்துவத்தின் தந்தை

மருத்துவத்தின் தந்தை

2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயுர்வேதா தான் முதல் மருத்துவ முறையாகும். சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார். அதனால், மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான்.

உலகின் பணக்கார கோவில்

உலகின் பணக்கார கோவில்

உலகின் பணக்கார கோவில் எனும் பெருமை பத்மனாபசுவாமி கோவிலையே சேரும். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம்.

உலகின் பெரிய தபால் துறை

உலகின் பெரிய தபால் துறை

இந்தியாவில் மொத்தம் 1,50,000 அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன. உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான்.

வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள்

வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள்

1896 ஆம் ஆண்டு வரை வைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியாதான். மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுப்பிடித்தவர்களும் இந்தியர்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About India That Will Amaze You

Do You Know About These Interesting Facts About India That Will Amaze You? Read Here.
Desktop Bottom Promotion