For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் போன் எவ்வளவு அழுக்காக உள்ளது என்று தெரியுமா?

By Ashok CR
|

இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் நாம் ஊனமுற்றவர்களாக உணர்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். இது நம் நண்பன், தத்துவ ஞானி, வழிகாட்டி ஏன் அதற்கும் மேல். 24*7 மணிநேரம் நாம் அதனுடனேயே வாழ்கிறோம். ஆனால் எத்தனை முறை நாம் அதனை சுத்தம் செய்கின்றோம்?

வெறுமனே துடைப்பதால் மட்டும் நாம் அதிலுள்ள கிருமிகளில் இருந்து விடுபட இயலாது. நம் உடைமைகளிலேயே மிகவும் அழுக்கு மற்றும் பாக்டீரியா நிறைந்து இருப்பது நாம் உபயோகப்படுத்தும் போனில் தான். கழிப்பறை கிருமிகளில் இருக்கும் கிருமிகளை விட இதில் அதிகளவு கிருமிகள் இருக்கும். 92% போனில் காணப்படும் பாக்டீரியாக்கள் மலத்தில் காணப்படும் ஈகோலை பாக்டீரியாக்களை 16% கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிருமிகள் மூலம் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

நாம் போனை பேசுவதற்கு மட்டுமின்றி புகைப்படங்கள் எடுக்க, அரட்டை அடிக்க, வலைத்தளங்களை அலசவும் பயன்படுத்துகின்றோம். இதற்கு நாம் திரையை அதிகம் தொடுகிறோம். ஒவ்வொரு முறை இவ்வாறு செய்யும் போதும் கிருமிகள் பரிமாற்றம் அடைகின்றன. நம் போன் அழுக்காவதற்கான சில காரணிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பிட்ட பின் பயன்படுத்துதல்

சாப்பிட்ட பின் பயன்படுத்துதல்

நீங்கள் சாப்பிட்டதற்கு பின் உங்கள் கைகளை கழுவுவீர்களா? இல்லை என்றால் நீங்கள் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி எண்ணெய், உணவு துகள்கள் போன்றவற்றையும் போனின் திரை மற்றும் மற்ற பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்கிறீர்கள்.

கழிவறையை பயன்படுத்திய பின் பயன்படுத்துதல்

கழிவறையை பயன்படுத்திய பின் பயன்படுத்துதல்

கழிவறையை பயன்படுத்திய பின் போனை பயன்படுத்துவது மில்லியன் கணக்கான கிருமிகளுக்கு திறந்த அழைப்பு விடுவதற்கு சமமானதாகும். குறிப்பாக பொது கழிப்பறை பயன்படுத்தும் போது தங்களுக்கு முன் சென்ற மக்கள் பயன்படுத்திய பரப்பை தொடுவதன் மூலம் கிருமிகள் பரவுகின்றன.

போக்குவரத்தை பயன்படுத்துதல்

போக்குவரத்தை பயன்படுத்துதல்

நீங்கள் போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்தும் போது உங்கள் போனில் அதிக கிருமிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் கம்பம், இருக்கை, கைப்பிடிகள் போன்ற பரப்புகளை நீங்கள் தொடுவது ஆகும் ஆயிரக்கணக்கானவர்கள் அவற்றை தங்கள் கைகளை சுத்தம் செய்யாமலே தொட்டிருப்பர்.

உங்கள் வியர்வை

உங்கள் வியர்வை

நீங்கள் போனில் அதிக நேரம் பேசும் போது உண்டாகும் வியர்வையனாது, கிருமிகளை உங்கள் போன் திரையில் சேமித்து வைக்க செய்கின்றன.

செல்லப் பிராணிகளுடன் விளையாடும் போது..

செல்லப் பிராணிகளுடன் விளையாடும் போது..

நீங்கள் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதை விரும்புவீர்களா? நீங்கள் நிச்சயமாக உணவு அருந்த செல்வதற்கு முன் உங்கள் கைகளை கழுவுவீர்கள், ஆனால் உங்கள் போனை தொடுவதற்கு முன் கழுவுவீர்களா? அனேகமாக இல்லை. நீங்கள் இப்போது பறவைகள் மற்றும் விலங்குகள் மூலமாகவும் கிருமிகளை உங்கள் போனுக்கு பெற்றுக் கொள்கிறீர்கள்.

மற்றவர்கள் பயன்படுத்தும் போது..

மற்றவர்கள் பயன்படுத்தும் போது..

போனானது மிகவும் உரிமையான உடைமை என்பதால் நாம் அதனை வேறு எவரும் தொடுவதற்கு அனுமதிப்பதில்லை. எனினும் சில நேரங்களில் படங்கள் எடுப்பதற்கும், அழைப்பு விடுவதற்கும், ஏதேனும் சிலவற்றை காண்பிப்பதற்கும், மற்றவர்களிடம் கொடுக்கிறோம். மற்றவர் கையில் இருக்கும் கிருமிகள் போன் திரைக்கு செல்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆய்வுகளின் படி 82% கைகள் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளன.

மற்ற பரப்புகளில் வைக்கும் போது..

மற்ற பரப்புகளில் வைக்கும் போது..

நீங்கள் மேசை, பை, பாக்கெட், அலமாரி முதலிய பரப்புகளில் உங்கள் போனை அடிக்கடி வைக்க வாய்ப்புள்ளது. இந்த பரப்புகளில் இருக்கும் கிருமிகள், தூசி துகள்கள் போனுக்கு செல்ல நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Dirty Is Your Phone?

What’s more, studies show that 92% phones have bacteria on them with 16% containing E.coli, bacteria found in faeces.
Story first published: Saturday, July 25, 2015, 15:06 [IST]
Desktop Bottom Promotion