ஜூன் 13: வரலாற்றில் நிகழ்ந்த அழிக்க முடியாத நிகழ்வுகள்!!!

By: John
Subscribe to Boldsky

நமது உலக வரலாற்றுப் பெட்டகமானது, எண்ணற்ற வலிகளை தாண்டி வந்த வெற்றி வழிகளையும், சோதனைகளை கடந்து வந்த சாதனைகளையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. உலக வரலாற்றில் யுத்தங்கள் நடக்காத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஜூன் 12: வரலாற்றில் நிகழ்ந்த அழிக்க முடியாத நிகழ்வுகள்!!!

இன்று சிறு சிறு விஷயங்களை கூட பெரும் துயரம் என எண்ணி வாடும் மக்கள், அன்று உலக போர்கள் நடந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் உணர வேண்டும். இனி, ஜூன் 13 அன்று, வரலாற்றில் நிகழ்ந்த அழிக்க முடியாத நிகழ்வுகள் பற்றி காண்போம்...

உள்ளே...

  • 1886 - பேரரசர் மர்ம மரணம்
  • 1925 - ஒலிக் கொண்ட முதல் படம்
  • 1948 - தமிழ் இலக்கிய சங்கம் ஆரம்பம்
  • 1981 - எலிசபெத் ராணி மீது குண்டு வீசிய சிறுவன்..., மற்றும் பல வரலாற்று பதிவுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1871 -சூறாவளி தாக்குதல்

லாப்ரடோரில் ஏற்பட்ட ஓர் பயங்கர சூறாவளி தாக்குதலினால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1881 - ஆர்டிக் கடலில் கப்பல் மூழ்கியது

ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

1886 - தீக்கிரையான நகரம்

பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.

1886 - பேரரசர் மர்ம மரணம்

பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் திடீரென மர்மமான முறையில் ஆற்றில் இறந்து நிலையில் காணப்பட்டான்.

1917 - முதலாம் உலகப்போர்

முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.

1925 - ஒலிக் கொண்ட முதல் படம்

சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். அது 10-நிமிட அசையும் படம் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

1944 - இங்கிலாந்து மீது ஜெர்மனி குண்டுவீச்சு

இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.

1948 - தமிழ் இலக்கிய சங்கம் ஆரம்பம்

ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1955 - முதல் வைரச் சுரங்கம்

சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1978 - இஸ்ரேல் படைகள் பின் வாங்கியது

இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.

1981 - எலிசபெத் ராணி மீது குண்டு வீசிய சிறுவன்

லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.

1983 - சூரிய குடும்பத்தை தாண்டிய முதல் விண்கப்பல்

பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.

பிறந்தநாள்

1987 - பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

இறப்பு

2012 - மெஹ்தி ஹசன் ஓர் பாக்கித்தானிய கசல் பாடகர் ஆவார். இவர் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Historical Incidents Happened On June 13

Do you know about the historical incidents that happened on June 13? read here.
Story first published: Saturday, June 13, 2015, 9:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter