For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 12: வரலாற்றில் நிகழ்ந்த அழிக்க முடியாத நிகழ்வுகள்!!!

By John
|

வரலாறு என்பது, கலாசாரம், பண்பு, வெற்றி, வீரம், புதுமை, அதிசயம், இகழ்ச்சி, தோல்வி, மறுப்பு, வெறுப்பு என பலவும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. இது இன்றி ஓர் இனம், நாடு அல்லது தனி நபரின் சுயம் ருசிக்காது. ஒருவனின் வாழ்க்கை அவன் இறந்த பிறகு எந்த சுவையும் இன்றி வெறுமையாக இருத்தல் தான் வாழ்வின் பெரும் சோகம். எனவே, வரலாறு படிப்பதும், அமைப்பதும் மிகவும் அவசியமானவை.

புராணங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அறிவியலா? கட்டுக்கதையா? - ஓர் பார்வை!!

அந்த வகையில் ஜூன் 12ஆம் தேதியான, இன்று நமது உலக வரலாற்றில் என்னவெல்லாம் நிகழ்ந்தது, அதில் இருக்கும் பூரிப்பு, ஆர்ப்பரிப்பு, வேதனை, சாதனை போன்றவற்றை இனிக் காணலாம்...

உள்ளே...

  • பெண்களுக்கு வாக்குரிமை
  • நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை
  • யூதர்கள் படுகொலை
  • நாட்டிய பேரொளியின் பிறந்த நாள், மற்றும் பல வரலாற்று செய்திகள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாட்டிய பேரொளியின் பிறந்த நாள்

நாட்டிய பேரொளியின் பிறந்த நாள்

1932 - தென்னிந்தியா திரையுலகில் தனது நாட்டியத்தாலும், பாவனைகளாலும் கட்டிவைத்த, நாட்டிய பேரொளி நடிகை.பத்மினி அவர்களின் பிறந்த நாள் இன்று.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஸ்பெஷல்: இன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகும்.

தமிழ் விடுதலை இயக்கம் தடை

தமிழ் விடுதலை இயக்கம் தடை

2003 - தமிழ் நாடு அரசு, தமிழ் விடுதலை இயக்கம் என்ற அமைப்பிற்கு தமிழ்நாட்டில் தடைவிதித்தது.

பிரிட்டிஷ் ஜெர்மனியிடம் சரண்

பிரிட்டிஷ் ஜெர்மனியிடம் சரண்

1940 - இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷின் 13,000 வீரர் கொண்ட படையும், பிரெஞ்சு படையும் ஜெர்மனியிடம் சரணடைந்தது.

விண்வெளியில் இருந்து பூமிக்கு முதல் செய்தி

விண்வெளியில் இருந்து பூமிக்கு முதல் செய்தி

1967 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரோ 4 என்ற விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. அந்த விண்கலம், வேறொரு கோளின் வளி மண்டலத்திற்குள் சென்று பூமிக்கு தகவல்களை செய்தியாக அனுப்பியது. இவ்வாறன நிகழ்வு நடந்தது வரலாற்றில் இதுதான் முதல்முறை ஆகும்.

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை

1964 - தென்னாப்பிரிக்கா நீதிமன்றம், நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள்கால சிறைத்தண்டனையை விதித்தது.

யூதர்கள் படுகொலை

யூதர்கள் படுகொலை

1943 - ஜெர்மனியின் நாசி படையினர், மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களை வெறித்தனமாக படுகொலை செய்தனர்.

பெண்களுக்கு வாக்குரிமை

பெண்களுக்கு வாக்குரிமை

1902 - ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்களுக்கு, பொதுத் தேர்தலில் வாக்குரிமை அனுமதிக்கப்பட்டது. ஆயினும், ஆஸ்திரேலியாவில், பழங்குடியினருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

அமெரிக்க புரட்சிப் போர்

அமெரிக்க புரட்சிப் போர்

1775 - பிரித்தானிய இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து, ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தார்.

 மாபெரும் சூறாவளி தாக்குதல்

மாபெரும் சூறாவளி தாக்குதல்

1899 - ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில், ஏற்பட்ட மாபெரும் சூறாவளி புயலின் தாக்குதலினால் பரிதாபமாக 117 பேர் உயிரிழந்தனர்.

 கூகுள் எர்த்

கூகுள் எர்த்

2006 - கூகுள் எர்த் , லினக்ஸ் பதிப்பை வெளியிட்டது.

காஷ்மீர் துப்பாக்கி சூடு

காஷ்மீர் துப்பாக்கி சூடு

2006 - தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், காஷ்மீரில் தொழிலாளர்கள் 8 உயிரிழந்தனர், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜார்ஜ்புஷ் பிறந்தநாள்

ஜார்ஜ்புஷ் பிறந்தநாள்

1924 - அமெரிக்காவின் 41வது குடியரசு தலைவராக பதவியேற்ற, ஜார்ஜ். டபிள்யூ.புஷ்ஷின் பிறந்தநாள் இன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Historical Incidents Happened On June 12

Do you know about the historical incidents that happened on June 12? read here.
Desktop Bottom Promotion