For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன்!!

|

இந்திய விடுதலை போராட்டமானது மிகவும் பெரிய வரலாறு என்பது நாம் அனைவரும் அறிந்தது. பெரும்பாலும் நாம் அறிந்தது கடைசி கட்டத்தில் போராட்டத்தில் இருந்த தலைவர்களை தான். அதிலும் தென் மாவட்ட விடுதலை போராட்ட வீரர்கள் பலரும் வரலாற்றில் இடம்பெறவில்லை என்பது தான் உண்மை.

ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்து போராடியவர் தான் அழகு முத்துக் கோன். வீரத் தமிழராக திகழ்ந்த இவரது வரலாறு மற்றும் விடுதலைக்கு போராட்டம் பற்றி தமிழர்களுக்கே கூட சரிவர தெரியாமாலிருப்பது தான் சோகமே. இனி, ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன் பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எட்டயபுர அரசரின் நண்பர்

எட்டயபுர அரசரின் நண்பர்

தமிழ் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு நண்பராக இருந்தவர்.

அழகு முத்துவின் தந்தை

அழகு முத்துவின் தந்தை

அழகுமுத்து சேர்வைக் காரனின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார்.

கப்பம் கட்ட மறுத்தவர்

கப்பம் கட்ட மறுத்தவர்

கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் வீரர் அழகு முத்து கோன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து சண்டை

யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து சண்டை

மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 6 படைத் தளபதிகளும் மற்றும் 248 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர்.

பயமறியாதவர்

பயமறியாதவர்

பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்புப் பட்டய தகவல்

செப்புப் பட்டய தகவல்

பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் யாதவர் குலத்தவர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. இவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர் .

வீரர் அழகு முத்துக் கோனின் வாரிசுகள்

வீரர் அழகு முத்துக் கோனின் வாரிசுகள்

இன்றும் வாழ்ந்து வரும் இவரது வாரிசுகள் அனைவரும் யாதவர்களே ஆவர். இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Historical Facts About Azhagu Muthu Kon

Here we have shared historical info about the first tamil freedom fighter of India, who initiated freedom fight against british government in India.
Desktop Bottom Promotion