For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்சை உலுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் உலக மக்களைப் பற்றிய தகவல்கள்!!!

|

ஏழ்மையும், வறுமைக் கோடும் உருவானது அல்ல, உருவாக்கப்பட்டது. எப்போது ஒருவரது உழைப்பு திருடப்பட்டதோ அன்றிலிருந்து மெல்ல மெல்ல ஏழ்மை வளர தொடங்கியது. ஆதிக்கம், வல்லரசு என்ற பெயரில் இன்றைய மாடர்ன் உலகில் ஏழ்மை, சில பணக்கார முதலைகளின் கட்டுப்பாட்டில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

நமக்கு தெரிந்தது எல்லாம் வெறும் வறுமைக் கோடும், அதற்கு கீழே வாழும் மக்கள் என்ற இரு வரிகள் தான். ஆனால், அந்த கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் அவல நிலையைப் பற்றி நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும். தெரிந்துக் கொள்ள முயற்சிக்க முடியாத அளவு, அந்த 1% ஆதிக்க கூட்டத்தின் கீழே தான் நாம் வேலை செய்து வருகிறோம்.

இனி, நெஞ்சை உலுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் உலக மக்களைப் பற்றிய தகவல்கள் குறித்து பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தகவல் 1

தகவல் 1

தினந்தோறும் பட்டினியின் காரணமாக மட்டும் உலகம் முழுவதும் 20,000 குழந்தைகள் மரணமடைகிறார்கள்.

தகவல் 2

தகவல் 2

நமது உலகில் ஏழில் ஒரு நபர், அதாவது, ஏறத்தாழ நூறு கோடி மக்கள் இரவு தூங்கும் போது பசியுடன் தான் உறங்குகிறார்கள்.

தகவல் 3

தகவல் 3

உலக மக்கள் தொகையில் 80% மக்கள் ஒருநாளுக்கு பத்து டாலருக்கும் குறைவாக தான் சம்பாதிக்கிறார்கள்.

தகவல் 4

தகவல் 4

உங்களது வருட சம்பளம் 12.6 லட்சமாக இருந்தால், நீங்கள் இவ்வுலகின் பணக்கார நபர்கள் சதவீதமான 4% -தில் நீங்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் 5

தகவல் 5

பில்கேட்ஸ்-ன் கணக்குப்படி வரும் 2035-ம் ஆண்டில் இவ்வுலகில் ஒரு ஏழை நாடு கூட இருக்காது என்று கணித்துள்ளார்.

தகவல் 6

தகவல் 6

சீனாவில் உள்ள நூறு மில்லியன் மக்கள் தினமும் வெறும் ஒரு டாலர் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.

தகவல் 7

தகவல் 7

சரியான கழிப்பிட வசதி இல்லாததால், இன்றளவிலும் கூட உலகளவில் நூறு கோடி மக்கள் வெட்டவெளியில் தான் மலம் கழிக்கிறார்கள்.

தகவல் 8

தகவல் 8

நமது உலகில் இருக்கும் 85 பணக்கார மக்களின் சொத்து மதிப்பு, உலகின் அரைவாசி மக்களின் சொத்து மதிப்புக்கு சமம்.

தகவல் 9

தகவல் 9

பிக்காசோ தனது ஆரம்பக்கால ஓவியங்கள் பலவற்றை எரித்துவிட்டார், ஏனெனில் இவர் தங்கியிருந்த குடியிருப்பில் குளிருக்கு இதமாக இருக்க பணம் கொடுத்து வேறு எரிப்பொருள் வாங்க இயலாத ஏழ்மையே இதற்கு காரணம்.

தகவல் 10

தகவல் 10

உலகில் உள்ள 64% ஏழை மக்கள், இந்தியா, பங்களாதேஷ், சீனா, காங்கோ, நைஜீரியா போன்ற ஐந்து நாடுகளில் தான் இருக்கிறார்கள்.

தகவல் 11

தகவல் 11

உலகின் 1% பணக்கார மக்கள், உலகின் 48% செல்வத்தை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heart Breaking Facts About Worldwide Poverty

Do you know about the heart breaking facts about the worldwide poverty? read here.
Story first published: Friday, August 28, 2015, 15:33 [IST]
Desktop Bottom Promotion