For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தமிழ் விடுதலை வீரர்கள்!!!

நமது இந்தியாவில், விடுதலைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். தேசிய அளவில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர், தென்னிந்தியா போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை.

|

நமது இந்தியாவில், விடுதலைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். நூற்றுக்கணக்கான தலைவர்கள் அவர்களை முன்னடத்திச் சென்றனர். ஆயினும் கூட தேசிய அளவில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர், தென்னிந்தியா போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பது தான் மறைக்கப்பட்ட உண்மை.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்று தகவல்கள்!!!

ராணி லட்சுமி பாய் அம்மையாருக்கு முன்பே, தமிழகத்தில் வீர மங்கை வேலு நாச்சியார், ஓர் பெண்மணியாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர். தனது சொத்துகளை விற்று வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த வ.உ.சி, தனது வரிகளால் ஆங்கிலேயனை கிழித்தெறிந்த பாரதி, தீரன் சின்னமலை என இந்த பட்டியல் நீள்கிறது.

ஆங்கிலேயரை திக்குமுக்காட வைத்த தீரன் சின்னமலை பற்றிய வரலாற்று குறிப்புகள்!!!

இவர்களில் பலரை பற்றி இன்றைய இளைய சமூதாயம் கட்டாயம் நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும், நாம் கற்பிக்க வேண்டும்....

ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ராணி வேலு நாச்சியாரின் சிலிர்க்கக்கும் வரலாற்று தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

தனது பாடல்களாலும், எழுத்துகளாலும் சுதந்திர தீயை அனைத்து தமிழனின் மனத்திலும் மூட்டியவர். தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும் தீராத பற்றுக் கொண்டிருந்தவர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இவர் எழுதிய பாடல்கள் அமைந்ததால், இவரது பாடல்கள், புத்தகங்கள், ஆங்கில ஆட்சிக்கு கீழ்பணிந்து வந்த பர்மாவில் தடை செய்யப்பட்டது.

திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன்

கொடி காத்த குமரன். ஓர் முறை இந்திய விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேய போலீசாரின் தாக்குதலையும் தாங்கிக்கொண்டு, நமது தேசிய கோடி கீழே விழாமல் பிடித்திருந்தமையால், இவருக்கு இந்த பெயர் வந்தது. அந்த சம்பவத்தின் போது, உயிர் பிரிந்தும் கூட, மூவர்ண கோடியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்திருந்தது இவரது கைகள்.

Image Courtesy

வீர மங்கை வேலு நாச்சியார்

வீர மங்கை வேலு நாச்சியார்

இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியில் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ஆவார்.

Image Courtesy

வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன்

திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். இவர் தமிழகத்தின் பகத்சிங் என அழைக்கப்பட்டவராவார். ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் இவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். ஆங்கிலேயர்கள் கப்பம் கட்ட கூறிய போது அதை மறுத்தவர் இவர். ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை.

Image Courtesy

வ.உ. சிதம்பரம்பிள்ளை

வ.உ. சிதம்பரம்பிள்ளை

ஆங்கிலேயர் ஆட்சியை கடுமையாக எதிர்த்தது மட்டுமில்லாமல். அவர்களை எதிர்த்து வணிகமும் செய்து, கப்லோட்டிய வீரத் தமிழர். இவரை தடுக்க,சிறையிலிட்டு கொடுமைகள் செய்தனர் ஆங்கிலேயர்.

Image Courtesy

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சில வீரர்களில் இவரும் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கேரளா பகுதியிலும், கொங்கு நாட்டின் (கோவையை சுற்றியுள்ள) சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படை ஒன்று சேராதவாறு, இடையில் இருந்து பெரும் தடையாகச் சின்னமலை விளங்கி வந்தார். இதனால் ஆங்கிலேயர் தீரன் சின்னமலை மீது பகைக் கொண்டனர்.

Image Courtesy

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா

அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர் சுப்பிரமணிய சிவா. தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச் செய்த சிறந்த மேடைப் பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர்.

Image Courtesy

மருது பாண்டியர்

மருது பாண்டியர்

மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடிகளுள் குறிப்பிடத் தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

Image Courtesy

பெரிய மருது, சின்ன மருது

பெரிய மருது, சின்ன மருது

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

Image Courtesy

புலித்தேவன்

புலித்தேவன்

இந்திய விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர் புலித்தேவன். மற்றும் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் இருந்தவர் இவர் தான் என கருதப்படுகிறார்.

Image Courtesy

அழகு முத்து கோன்

அழகு முத்து கோன்

ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு தளபதியாக இருந்தவர்.கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 5 படைத்தளபதிகளும் மற்றும் 247 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர்.

அஞ்சா நெஞ்சன் அழகு முத்து கோன்

அஞ்சா நெஞ்சன் அழகு முத்து கோன்

பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் கூட, தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய அஞ்சா நெஞ்சு மிக்கவராக அழகு முத்து கோன் திகழ்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

75th Independence Day: List Of Ten Freedom Fighters From Tamil Nadu

Do you know about the top 10 freedom fighters from tamilnadu? Take a look.
Desktop Bottom Promotion