For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் ஆற்றியுள்ள 4 அதிர்ச்சியூட்டும் அற்புதங்கள்!!!

By Ashok CR
|

இந்து மதத்தில் சிவபெருமான் என்பவர் மும்மூர்த்திகளில் முக்கியமானவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (சிவன்) ஆகிய மூவரும் தான், அண்டத்தில் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் சுழற்சியை உருவாக்குகின்றனர்.

சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

சிவபெருமான் தான் அழிக்கும் கடவுள். ஆனாலும் கூட அவர் இல்லாமல் படைத்தல் முழுமையாகாது. ஒன்றை உருவாக்குவதற்கு முன்பு மற்றொன்றை அழித்தால் தான் அதனை உருவாக்க முடியும்.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

சிவபெருமான் நிகழ்த்திய அற்புதங்களை விளக்கும் வகையில் பல கதைகள் உள்ளது. அவருடைய மிகப்பெரிய இதயம் மற்றும் கருணை உள்ளத்தை எடுத்துக்கூறும் புராணங்களுக்கு அளவே இல்லை. அவருடைய கடும் கோப குணத்தை கொண்டு அனைவரும் பயந்தாலும் கூட, அனைத்து இந்து மத கடவுள்களுடன் ஒப்பிடுகையில், சிவபெருமானின் அற்புதங்கள் மிகவும் தன்னலமற்றவையாக உள்ளது.

அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7 விஷயங்கள்!!!

சிவபெருமானின் அற்புதங்களை விளக்கும் சில புகழ் பெற்ற கதைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீலகண்டன்

நீலகண்டன்

ஒரு கட்டத்தில், பாற்கடலை கடைய தேவர்களும் அசுரர்களும் ஒருவருடன் ஒருவர் கைக்கோர்த்துக் கொண்டனர். பாற்கடலை கடைவதால், குளிர்ச்சியடையும் கடல், ஒரு கட்டத்தில் அமுதத்தை அளிக்கும். ஆனால் அமுதத்துடன் சேர்த்து சமுத்திர மந்தனில் நஞ்சும் சேர்ந்து வந்தது.

நீலகண்டன்

நீலகண்டன்

மொத்த அண்டத்தையும் விழுங்கும் அளவிற்கு போதுமானதாக இருந்தது இந்த நஞ்சு. ஆனால் சிவபெருமானோ பெருந்தன்மையுடன் மொத்த நஞ்சையும் தானே குடித்தார். தேவியோ தன் சக்தியை பயன்படுத்தி, விஷம் அவரின் உடலுக்குள் இறங்காமல் தொண்டையிலேயே நிறுத்தினார். அந்த நஞ்சு அவர் தொண்டையை நீல நிறத்தில் மாற்றியதால் தான் அவரை நாம் நீலகண்டன் என அழைக்கிறோம்.

புனித கங்கை

புனித கங்கை

பாகிரதியின் கோரிக்கையின் பேரில், புனித நதியான கங்கை பூமிக்கு வர சம்மதித்தது. இருப்பினும், அவளுடைய கொப்பளிக்கும் ஆற்றல் சக்தி இந்த உலகத்தையே மூழ்க செய்திருக்கும். ஆகவே சிவபெருமான், தன் தனித்துவமான பாணியில், கங்கையை தன் முடியின் முடிச்சுக்குள் வைத்துக் கொண்டார். இந்த பூமிக்கு சிறிய அளவில் மட்டுமே கங்கை பாயும் படி அவர் பார்த்துக் கொண்டார்.

விநாயகரின் பிறப்பு

விநாயகரின் பிறப்பு

தன் தாய் பார்வதி தேவிக்காக கதவுக்கு பாதுகாப்பாக இருந்த விநாயகர், சிவபெருமானால் தற்செயலாக கொல்லப்பட்டவர். இது பார்வதியை கோபப்படுத்தியதால், இந்த உலகத்தை அழிக்க அவர் சபதம் எடுத்தார்.

விநாயகரின் பிறப்பு

விநாயகரின் பிறப்பு

ஆனால் சிவபெருமானோ, யானையின் தலையை விநாயகரின் உடலுக்கு பொருத்தி, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்ததன் மூலம், பார்வதி தேவியை உடனடியாக குளிர்வித்தார். சக்தி தேவியின் சினத்திலிருந்து இந்த பூமியை காப்பாற்றியது சிவபெருமானின் அற்புதமே.

வேடனின் கதை

வேடனின் கதை

புலி தன்னை கொன்று விடாமல் தப்பிக்க, கொடூரமான ஒரு வேடன் வில்வ மரம் ஒன்றின் மீது ஏறினான். அலுப்புத் தட்டியதால், அந்த இரவு முழுவதும் அவன் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து கீழே போட்டு கொண்டிருந்தான். அந்த மரத்திற்கு அடியில் ஒரு சிவலிங்கம் இருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. சிவபெருமானுக்கு வில்வ இலைகள் என்றால் விருப்பம் என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை.

வேடனின் கதை

வேடனின் கதை

அவன் போட்ட இலைகளால், காலையில் அந்த வேடனின் முன் தோன்றிய சிவபெருமான் அவனுக்கு மோட்சம் அளித்து ஆசீர்வதித்தார். சிவபெருமானை குளிர்விப்பது சுலபம் என்பது இந்த அற்புதம் மூலம் நமக்கு விளங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Four Shocking Miracles Executed By Lord Shiva

Here are some of the most popular stories about the miracles of Lord Shiva. Read more to know some biggest miracles of Shiva that are known to none….
Desktop Bottom Promotion