For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

ஒருவரின் கை ரேகையைக் கொண்டு, அவரைப் பற்றி எழுதி வைக்கப்பட்ட சுவடியைக் கண்டுப்பிடிக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்ட ஏடுகள் / சுவடுகளைக்கொண்டு அவர்களைப் பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்படும்.

|

நாடி ஜோதிடம் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்கையைக் குறித்து எழுதி சென்ற சுவடிகள் ஆகும். ஒருவரின் கை ரேகையைக் கொண்டு, அவரைப் பற்றி எழுதி வைக்கப்பட்ட சுவடியைக் கண்டுப்பிடிக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்ட ஏடுகள் / சுவடுகளைக்கொண்டு அவர்களைப் பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்படும். ஆனால், இந்த முறைக்கு பின்னால் ஏதேனும் அறிவியல் முறை இருக்கிறதா என்பது குறித்து எந்த விடயமும் இல்லை.

புராணங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அறிவியலா? கட்டுக்கதையா? - ஓர் பார்வை!!

ஆண்கள் என்றால் வலது கைக் கட்டைவிரல் ரேகையும், பெண்கள் என்றால் இடது கைக் கட்டை விரல் ரேகையும் கொண்டு ஏடுகள் கண்டறியப்படும். தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்திற்கு புகழ்பெற்று விளங்கும் இடமாகும். ஆனால், தற்போது பல இடங்களில் போலியாக சிலர், அவர்களே சுவடிகளில் எழுதி வைத்து ஏமாற்று வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

நீங்கள் இறந்த பிறகு உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதன் காரணத்தினால், நாடி ஜோதிடம் பற்றிய பல உண்மைகளும், இரகசியங்களும் மருவப்படுகிறது, அவரவருக்கு ஏற்பவும் பரப்பியும் வருகின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வட்டெழுத்துகள்

வட்டெழுத்துகள்

நாடி ஜோதிட ஏடுகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் பழந்தமிழ் எழுத்துகளான வட்டெழுத்துகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த சுவடிகள் எல்லாம் 2000 ஆண்டுகள் பழமையானவை ஆகும். இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனக் கூறப்படும் ஏழு ரிஷிகள் எழுதியதாய் கூறப்படுகிறது

சப்தரிஷிகள்

சப்தரிஷிகள்

அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனி எழுதியதாகவே இருக்கின்றது. மற்றும் வாசிக்கும் போதும். அவரது பெயர் கூறி தான் வாசிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் ஆராய்ச்சி

ஆங்கிலேயர்கள் ஆராய்ச்சி

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழே இருந்த போது, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நாடி ஓலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர் சுவடிகளில் இருந்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் எதிர்கால குறிப்புகள் பற்றி அறிந்து, அதில் பல சுவடிகளை எடுத்து சென்றுவிட்டனர். மீதமான சில சுவடிகள் செல்வந்தர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுவிட்டன.

ஆன்மாவை பற்றிய குறிப்புகள்

ஆன்மாவை பற்றிய குறிப்புகள்

நாடி ஜோதிடர்களில் 40% குறைவானவர்கள் மட்டுமே ஆன்மாவின் எதிர்காலம் குறித்த தகவல்களை அச்சுவடியில் இருந்து தகவல்கள் பெற்று கூறுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில், அவை அனைத்தும் உண்மையான விடயங்களாக இருக்கின்றது.

ஆம், இல்லை பதில்

ஆம், இல்லை பதில்

உதாரணத்திற்கு ஒருவருடைய பெயரின் (பாலசுந்தரம்) முதலெழுத்து "பா" "ந்" "ம்" அல்லது கடை, இடை எழுத்துக்கள் உயிர் மெய், இடை மெய் இன எழுத்துக்களில் வருகின்றதா என்று கேள்விக் கேட்டு, அவ்வெழுத்துகளையும் அவ்வோலையிலிருந்து வாசிப்பார்கள், அவற்றுக்கு ஆம் அல்லது இல்லை என்று கூறினால் போதும். இவையனைத்தும் வெளிப்படையாகவே சந்தேகத்திற்கு இடமின்றியே கேட்கப்படும். இந்த இரண்டு பதிலைத் தவிர வேறு எந்த பதிலையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.

முழுத் தகவல்கள்

முழுத் தகவல்கள்

இப்படி ஒவ்வொரு ஓலையாக புரட்டி வாசிப்பார்கள். அதில் இருந்து, பெயர், வயது, இராசி, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என்று அனைத்தும் கூறப்படுகிறது.

இறந்தகால, நிகழகால, எதிர்கால தகவல்கள்

இறந்தகால, நிகழகால, எதிர்கால தகவல்கள்

இந்த ஏடுகளில் இருந்து வாசிக்கும் போது, காண்டங்கள் பார்க்க விருப்பமா என்று கேட்கப்பட்டு, முற்பிறவி, அடுத்த பிறவி குறித்த தகவல்களும் கூட கூறப்படுகின்றன. இந்த மொத்த உரையாடலையும் ஒலிநாடாவில் ரெகார்ட் செய்து தந்துவிடுவார்கள்.

அகத்தியர் ஏடுகள்

அகத்தியர் ஏடுகள்

இந்த ஏடுகளை அகத்தியர் என்று அறியப்படும் ஒருவர் அல்லது பலர் எழுதியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

ஒருவர் குறித்து இவ்வாறு எழுதிவைக்கப்படும் ஏடுகள் பல காண்டங்களாக அமைகின்றன. இவற்றில் 12 காண்டங்களும், 4 தனிக் காண்டங்களும் அடக்கம்.

முதலாவது காண்டம்

முதலாவது காண்டம்

வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.

இரண்டாவது காண்டம்

இரண்டாவது காண்டம்

குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.

மூன்றாவது காண்டம்

மூன்றாவது காண்டம்

சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது

நான்காவது காண்டம்

நான்காவது காண்டம்

தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.

ஐந்தாவது காண்டம்

ஐந்தாவது காண்டம்

பிள்ளைகள் பற்றி கூறுவது

ஆறாவது காண்டம்

ஆறாவது காண்டம்

வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கௌ, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.

ஏழாவது காண்டம்

ஏழாவது காண்டம்

திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.

எட்டாவது காண்டம்

எட்டாவது காண்டம்

உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது

ஒன்பதாவது காண்டம்

ஒன்பதாவது காண்டம்

தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது

பத்தாவது காண்டம்

பத்தாவது காண்டம்

தொழில்பற்றி கூறுவது

பதினோராவது காண்டம்

பதினோராவது காண்டம்

லாபங்கள் தொடர்பாக கூறுவது

பன்னிரண்டாவது காண்டம்

பன்னிரண்டாவது காண்டம்

செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.

சாந்தி காண்டம்

சாந்தி காண்டம்

ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது, சாந்தி காண்டம்

தீட்சை காண்டம்

தீட்சை காண்டம்

மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது, தீட்சை காண்டம்

ஔஷத காண்டம்

ஔஷத காண்டம்

மருத்துவம் பற்றி கூறுவது, ஔஷத காண்டம்

திசாபுத்தி காண்டம்

திசாபுத்தி காண்டம்

வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது, திசாபுத்தி காண்டம்

கலியுக மாந்தர்கள் அனைவருக்கும்

கலியுக மாந்தர்கள் அனைவருக்கும்

கலியுகத்தில் பிறப்பெடுத்திருக்கும் அனைத்து மாந்தர்களுக்கும் அகத்திய முனியால் ஏடுகள் எழுதப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அறிவியல் முறையான சாட்சிகள்

அறிவியல் முறையான சாட்சிகள்

நாடி ஜோதிடம் குறித்து இவ்வளவு தகவல்கள் இருப்பினும், சிலர் இது மூடநம்பிக்கை, பித்தலாட்டம் என கூறிவருகிறார்கள். ஆயினும், இதில் நம்பிக்கை உள்ளவர்கள், விஞ்ஞானம் இன்னும் அந்த அளவு வளர்சி அடையவில்லை என்றும் கூறி வாதிட்டு வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Naadi Jodhidam

Naadi Jodhidam is an one of the ancient kind of astrology, which describes about our past and future accurately. Here we have shared some of its astnoshing facts.
Desktop Bottom Promotion