For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்கள்!!!

By Maha
|

தற்போது சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்றால் வித்தியாசமான பழங்களைக் காண்போம். ஆனால் அவற்றை நாம் வாங்க மாட்டோம். இதற்கு அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததோடு, அந்த பழங்களின் வெளித்தோற்றம் விசித்திரமாக இருப்பதும் காரணம்.

அதுமட்டுமின்றி அவை விலை அதிகமானதும் கூட. ஆனால் அவைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவற்றை உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பலனைப் பெறலாம்.

இங்கு இந்தியாவில் விற்கப்படும் சில வித்தியாசமான பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பழங்களை சுவைத்துப் பார்க்க மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிவி

கிவி

உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்களில் ஒன்று கிவி பழம். கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் சிறந்தது.

ஆலிவ்

ஆலிவ்

மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்படும்.

டிராகன் பழம்

டிராகன் பழம்

டிராகன் பழம் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். இது தென் ஆசியாவில் இருந்து வந்தது. இது மிகவும் தித்திக்கும் சுவையைக் கொண்டது. இதய நோயாளிகள் இப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது.

ரம்புத்தான் பழம்

ரம்புத்தான் பழம்

லிச்சி போன்றே தோற்றமுடைய ரம்புத்தான் பழம் தெற்காசியாவை தாயகமாக கொண்டது. இப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. மேலும் இந்த பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது.

தாட்பூட் பழம்/பேசன் பழம்

தாட்பூட் பழம்/பேசன் பழம்

பிரேசிலை தாயகமாக கொண்ட இப்பழம் நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான தசைப்பகுதியைக் கொண்டது. இப்பழம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்தது மற்றும் தூக்கமின்மை உள்ளவர்கள் இதனை உட்கொள்வது நல்லது.

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம்

மருத்துவ குணம் கொண்ட மங்குஸ்தான் பழத்தை கட்டாயம் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்து பார்க்க வேண்டும். இது ஸ்ட்ராபெர்ரி சுவையைக் கொண்டதோடு, வயிற்றுப் போக்கிற்கு உடனடித் தீர்வைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exotic Foods You Should Taste Once In A Lifetime

You should taste at least one of these exotic fruits, in your lifetime. Take a look at these yummy exotic expensive fruits.
Story first published: Saturday, October 31, 2015, 16:36 [IST]
Desktop Bottom Promotion