For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்மசங்கடமான ஆங்கில பிழைகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் முறைகள்!

By Ashok CR
|

நாம் ஆங்கிலம் கற்கும் போது பல பிழைகள் நேரலாம். அதில் தவறில்லை. அங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு கூட இது சகஜம். ஆங்கிலத்தில் எழுதும் போது இலக்கணம் மிகவும் முக்கியம்.

ஏனெனில் ஒத்த ஒலிகளைக் கொண்ட வார்த்தைகள் கூட பல்வேறு பயன்கள் மற்றும் அர்த்தங்களைக் கொண்டிருக்கும். நாம் எழுதும் போது செய்யும் 5 முக்கியமான தவறுகள் பட்டியலிடப்படுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Who vs Whom

Who vs Whom

சில ஆங்கில வாக்கியங்களில் யார் அல்லது யாருக்கு இதில் எது சரியானதாக இருக்கும் என்று ஐயம் தோன்றலாம். இதற்கு விடையளிக்க ஒரு பிரதிபெயரை கொண்ட வார்த்தைக்கு பதிலாக இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும். அவன், அவள், நாங்கள், அவர்கள் ஆகியவற்றை தொடர்ந்து 'Who' என்பது பொருந்தும். மேலும் எங்களுக்கு, அவனுக்கு, அவளுக்கு போன்றவற்றை தொடர்ந்து 'Whom' என்பது மிக சரியானதாக இருக்கும்.

May vs Might

May vs Might

ஏதேனும் ஒரு விஷயம் நடக்கக்கூடும் என்று கூறும் போது "May" அல்லது "Might" பயன்படுத்தப்படுகிறது. சரி எப்போது "Might" வார்த்தையை பயன்படுத்துவது? மிகவும் சுலபம்! செயலின் நிச்சயத்தன்மையைப் பொறுத்து அவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். "May" என்பது நிச்சயத்தன்மையின் போதும் "might" நிச்சயமற்ற சூழ்நிலையையும் குறிக்கும்

It’s vs Its

It’s vs Its

பொதுவாக மேற்கோள் குறி உடைமையை குறிக்கும். அனால் "It's" என்ற வார்த்தையில் உள்ள மேற்கோள்குறி உடைமையை குறிக்காது. இது "It is" என்பதன் சுருக்கமாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக "It's getting cold outside," என்பது வெளியே குளிர் அதிகரிப்பதை குறிக்கும். ஆனால் "My phone has its own alarm." என்பது என் போனில் அதற்கென அலாரம் உள்ளது என்பதை குறிக்கும்.

Which vs That

Which vs That

ஒரு வாக்கியத்திற்கு சார்பில்லாத தகவல்களை இணைக்கும் போது "Which" பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட தகவலை சேர்க்கும் போது மட்டுமே குறிப்பிட்ட வாக்கியத்தை தெளிவாக விளக்க முடியும் என்ற நிலையில் "That" பொருத்தமானதாக இருக்கும்.

Then vs Than

Then vs Than

இவ்விரண்டு வார்த்தைகளும் ஒத்த ஒலியை கொண்டிருக்கும் போதும், இவற்றை வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டும். நேரத்தை குறித்து விவரிக்கும் போது "Then" என குறிப்பிட வேண்டும். ஒப்பீடுகள் அடிப்படையில் பேசும் போது "Than" பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Embarrassing English Mistakes And How To Avoid Them

When it comes to writing in English, grammar is particularly important as many English words sound similar but have very different uses and meanings. That’s why we’ve compiled a list of five common mistakes to avoid when writing in English:
Story first published: Thursday, July 2, 2015, 16:59 [IST]
Desktop Bottom Promotion