For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By John
|

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும், அந்நாட்டின் தலையாயப் பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார்.

ஒசாமா பின் லேடன் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் - ஆச்சரியம்!!!

ஆப்பிள் நிறவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், பிக்ஃசார் அசைப்பட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

தனது வாழ்நாள் முழுவதையும் தொழிநுட்ப வளர்ச்சிக்காகவே செலவளித்த ஜீவன், ஸ்டீவ் ஜாப்ஸ். ஐ.டி. மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் ரோல் மாடலாக திகழும் இவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தத்துப்பிள்ளை

தத்துப்பிள்ளை

ஸ்டீவ் ஜாப்ஸ் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். இவரது பிறப்பு தந்தை ஓர் இஸ்லாமியர் என்றும், அவரது பெயர் அப்துல் (Abdulfattah Jandali) என்றும் கூறப்படுகிறது.

ப்ரோக்ராம் எழுதியதில்லை

ப்ரோக்ராம் எழுதியதில்லை

தனது வாழ்நாளில் ஒரு வரிக் கூட ப்ரோக்ராம் கோடுகளை ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதியதே இல்லை என்று கூறப்படுகிறது.

வாசிப்பு இடர்பாடு

வாசிப்பு இடர்பாடு

ஸ்டீவ் ஜாப்ஸிற்கு வாசிப்பு இடர்பாடு பிரச்சனை இருந்ததாம். அதாவது, இவரால் தொடர்ச்சியாக பிழையின்றி படிக்க முடியாதாம்.

9:41 AM

9:41 AM

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆப்பிள் ஐ-போன்களிலும் 9:41 AM, என்ற நேரம் தான் காண்பிக்கப்படும். ஏனெனில், கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த நேரத்தில் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐ-போனை வெளியிட்டார்.

ஐ-பாடை தண்ணீரில் வீசினார்

ஐ-பாடை தண்ணீரில் வீசினார்

முதல் முறையாக பாடல்கள் கேட்கும் கருவியான ஐ-பாடை வடிவமைத்து ஸ்டீவ் ஜாப்ஸ் இடம் காட்டிய போது, அதை தண்ணீரில் தூக்கி வீசினாராம். அப்போது, அதில் இருந்து தண்ணீர் முட்டைகள் வெளியாகின. எனவே, இது சரியாக வடிவமைக்கப்படவில்லை என்று கூறி அனுப்பிவிட்டாராம்.

ஜாக்குவார் கார் பரிசு

ஜாக்குவார் கார் பரிசு

தனது செயலாளர் ஒரு முறை வேலைக்கு தாமதமாக வந்ததற்கு காரணமாக, கார் மக்கர் பண்ணிவிட்டது என்று கூறியதற்காக. தனது ஜாக்குவார் கார் சாவியினை வீசி, நாளை இருந்து இந்த பிரச்சனையை கூறாதே மற்றும் அலுவலகத்திற்கு தாமதமாகவும் வராதே என்று கூறி அனுப்பிவிட்டாராம்.

பட்டமில்லா வேலைதாரி

பட்டமில்லா வேலைதாரி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு முன், பட்டமே இல்லாத மிக சிறந்த தொழிலதிபராக இருந்தார்.

கூகுளின் தவறு

கூகுளின் தவறு

ஒருமுறை கூகுளை தொடர்புக் கொண்டு, இலட்சினையில் வரும் இரண்டாவது "O" எழுத்தின் மஞ்சள் நிறத்தில் தவறு இருக்கிறது. அது சரியான சாயலில் இல்லை என்று கூறினாராம் ஸ்டீவ் ஜாப்ஸ். அட அளவு துல்லியமாக எதையும் பார்ப்பவர் ஸ்டீவ்.

தடயம் இன்றி புதைக்கப்பட்டார்

தடயம் இன்றி புதைக்கப்பட்டார்

ஸ்டீவ் ஜாப்ஸின் கல்லறை தடையம் இல்லாத இடத்தில புதைக்கப்பட்டுள்ளது. இவரது உடல் புதைக்கப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்று கண்டுப்பிடிக்க முடியாதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know These Facts About Steve Jobs

Some Interesting facts about Steve jobs.
Desktop Bottom Promotion